அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். திருப்பரங்குன்றம். மதுரை.

By News Room

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு.

பரம்பொருளான சிவபெருமான், குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்; திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (சிறுமலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று. இந்த கோவிலில் மூலவர் முருகனுக்கு அபிஷேகம் நடை பெறாமல், முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடப்பது மற்றொரு சிறப்பு. இந்த திருத்தலத்தில் முருகர் திருமண கோலத்தில் காட்சி தருகின்றார்.  

முருகன் இந்த திருப்பரங்குன்றத்தில் மட்டும் தெய்வானையுடன் மணக் கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார்.

இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

 

.
மேலும்