ஸ்ரீ வட ஆரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு.

By nandha

அருள்மிகு வண்டார்குழலி அம்பாள் உடனறை ஸ்ரீ வட ஆரண்யேஸ்வரர் ( தேவர் சிங்கப் பெருமான் ) திருக்கோவில்.

மூலவர்: வட ஆரண்யேஸ்வரர் (தேவர் சிங்கப் பெருமான்)

உற்சவர்: ஶ்ரீ ரத்தினசபாபதீஸ்வரர்

தாயார்: வண்டார்குழலி

உற்சவர் தாயார்: சமீசீனாம்பிகை

தல விருட்சம்: ஆலமரம்

தீர்த்தம்: முக்தி

பாடல் வகை: தேவாரம், திருப்புகழ்,

பாடியவர்கள்: காரைக்கால் அம்மையார், திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர்.

சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜ பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் ரத்தின சபை ஆகும். இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடம்.

திருவாலங்காடு. திருவள்ளூர் மாவட்டம்.

.
மேலும்