தமிழ்நாட்டில் உள்ள வராகி அம்மன் ஆலயங்கள்

By nandha

காஞ்சிபுரம் காமாட்சி அன்னையின் இடது புறத்தில் வராஹி தேவி அருள்பாலிக்கிறாள்.வராஹி அம்மனின் எதிரில் ''சந்தானஸ்தம்பம்'' உள்ளது.

 

இந்த ஸ்தம்பத்தைப் பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது தெய்வ வாக்கு.

 

பள்ளூர் அரசாலைஅம்மன் என்னும் வராஹி அம்மன் பெரும் வரம் தந்தருளுபவள்.

 

காஞ்சிபுரம் நகரில் இருந்து (அரக்கோணம் செல்லும் சாலையில்) 15 கிலோமீட்டர்

தொலைவில் பள்ளூர் அரசாலை அம்மன்[வராஹி அம்மன்]திருக்கோயில் உள்ளது.

 

இங்கு வராஹி அம்மன் தெற்கு நோக்கி அமர்ந்தநிலையில் அருள்கிறாள்.மிகவும்

புராதனமான திருக்கோயில் இதுவாகும்.

 

பெரும்பாலான அம்மன் கோயில்கள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும்.அபூர்வமாக சில அம்மன் கோயில்கள் மற்றும் தெற்கு நோக்கி அமைக்கப் பட்டிருக்கும். வழக்கத்திற்கு மாறாக அமைக்கப்பட்டிருக்கும் ஆலயங்கள் பரிகார கோயில்கள் ஆகும். இங்குசெய்யப்படும் பரிகாரங்கள் உடனுக்குடன் அளப்பரிய பலன்களை அள்ளித் தரக்கூடியவை.

 

பள்ளூரில் வராஹி அம்மனை செவ்வாய் ,பஞ்சமி,அஷ்டமி ,அமாவாசை பௌர்ணமி நாட்களில் வந்து அபிசேகம் செய்வித்து,

வாழை இலைபோட்டு அதில் பச்சரிசி சிறிது பரப்பி ,தேங்காய் உடைத்து அதன் இரு மூடியிலும் தூய பசு நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வர நம் கோரிக்கைகள் எளிதில் நிறைவேற்றி வருகின்றாள்.

 

பில்லி,

 

செய்வினை,

 

மன நோய்,

 

மாந்திரீக பாதிப்பினால் உண்டான உடல்நோய்கள்,

 

தீராத எதிரி தொல்லை,

 

முற்பிறவி கர்ம வினைகளால் உண்டான வறுமை ,

 

வழக்குகள்,

 

காரிய தடைகள் அண்டாது என்கிறார்கள்.

 

பள்ளூரில் வராஹி அம்மன் திருக்கோயில் அருகில் மிகவும் பழமையான பரசுராமஈஸ்வரர் திருக்கோயில்,ஸ்ரீகுகையீஸ்வரர் திருக்கோயில்,சப்த கன்னிகைகள் திருக்கோயில் உள்ளது.'

 

'சீதப் புனலாடி சிற்றம் பலம்பாடி''என்று மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் போற்றும் ''சீதப்

புனல்'' என்னும் ''சீதளா தீர்த்தம்''

இராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி திருக்கோயிலின் அருகில் சிறிது தூரத்தில் மங்கள மகா காளி என்ற பெயரில் மிகப்புராதனமான சுயம்பு மகா வராஹி அம்மன் கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலுக்கு உரிய

தீர்த்தமாகும்.

 

நம் உத்தரகோசமங்கை மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி திருக்கோயில் ''தீர்த்தவாரி''இந்த ''சீதப் புனல்'' என்னும் சீதளா தீர்த்தத்தில்தான் இன்றுவரை நடைபெற்று வருகிறது.

 

அதுமட்டுமல்ல இந்த உத்தரகோசமங்கை மகா வராஹி அம்மன் [ஆதி வராஹி]சுயமபுவாக தோன்றி

ஆதிகாலத்தில் இருந்தே அருள்பாலித்துவருகிறாள் என்பது

குறிப்பிடத்தக்கது.

 

வராஹி அம்மன் அபிஷேகத்துக்கும் சீதளா தீர்த்த நீர் பயன்படுவது அதன் மகிமையை காட்டுகிறது.இதனைத்தான் மாணிக்கவாசகர் தமது

திருவெம்பாவையில் பதிவு செய்து உள்ளார்.இந்த சுயம்பு வராஹி அம்மனை ஆதி வராஹி என்றே போற்றுகிறார்கள்.மங்கை மாகாளி அம்மன் என்பதும் இவளை அழைக்கும் திருநாமத்தில் ஒன்று.

 

இதுபோல வேலூர்

அருகில் உள்ள கீழ்மின்னல் இரத்னகிரி பாலமுருகன் திருக்கோயில் அருகமைந்த வராஹி அம்மன் திருக்கோயிலும் பழமையானது என்கிறார்கள்.

 

இந்த இரத்னகிரி பாலமுருகன் திருக்கோயிலில் தான் ''வாழும் மகான் ;வாய் திறவா மகான்''முருகன் அருளால் பக்தர்களின் குறைகளை களைந்துவரும் ''தவத்திரு பாலமுருகன் அடிமை ஸ்வாமிகள்''அருளாசி வழங்கிவருகிறார் என்பது

குறிப்பிடத்தக்கது..இத்தல வராஹி அம்மன் பாலமுருகனடிமை ஸ்வாமிகளின் வழிபடு தெய்வம் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

 

மாமல்லபுரம் அருகில் உள்ள சதுரங்கபட்டினம் திருவேட்டீஸ்வரி உடனுறை அரசேஸ்வரர் திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்தது.இத்தல தெற்கு நோக்கிய திருவேட்டீஸ்வரி அம்பாள் கருவறை கோஷ்டத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் பைரவரின் பார்வையில் வராஹி அம்மன்

அருள்பாலிப்பது சிறப்பு.

 

சிவகங்கை அருகில் உள்ள சிங்கம்புணரி முத்தவடுகநாத சித்தர் வராஹி அம்மனிடம் சித்தி பெற்றவர். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு முத்துவடுகநாதர் வராஹி அம்மனைப் பிரதிஷ்டை செய்து பூசித்து வந்தார்.

 

அவரைத் தரிசிக்க வரும் பக்தர்களின் துன்பங்களைத் தீர்த்து வைத்தார்.எந்தவித விஷக்கடியாக இருந்தாலும் இவர் மந்தரித்துத் திருநீறு இட்டால் விஷம் இறங்கிவிடுமாம்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவரிடம் திருநீறு பெற்றுக் குழந்தை பாக்கியம் அடைந்ததாக கூறுகிறார்கள்.

 

முத்துவடுகநாத

சித்தர் தமது சமாதி நாளை முன்னதாகவே அன்பர்களிடம் சொல்லி தம் சமாதியும் தோண்டச் செய்து,சமாதியின் மீது பிரதிஷ்டை செய்ய தமது உருவக் கற்சிலை ஒன்றைச் செய்வித்து,அதற்கு உயிரூட்டி உருவேற்றி அன்பர்களிடம்

கொடுத்தாராம்.அவர் கூறிய நாளில் பின்னாளில் சமாதி ஆன உடன் அவருக்கு சமாதி செய்து,அதன் மேல்புறத்தில் சித்தர் உயிரூட்டி உருவேற்றி கொடுத்த அவரது சிலை பிரதிஷட்டை செய்யப்பட்டு உள்ளது.அதற்கு இடப்புறம் அவர் பூஜித்து வந்த வராஹி அம்மன் சிலையையும் பிரதிஷ்டை செய்து உள்ளனர்.

 

சித்தர் முத்துவடுக நாதர் இன்றளவும் அன்னை வராஹி அருளால் தன் பக்தர்களை அரவணைத்து காத்து நிற்கிறார்.இவரை ''வராஹி சித்தர்''என்றே அன்பர்கள் அழைக்கிறார்கள். பல வருடங்களாக தீராத பில்லி, ஏவல், சூனியம், ஜின், மாந்திரீக பிரச்சனைகள் தீர பௌர்ணமி அன்று பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து நள்ளிரவு பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

 

நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரம் அடுத்துவரும் கொட்டாரம் எனும் ஊரிலிருந்து தெற்கில் 2 கிமீ தூரத்தில் அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருத்தலத்தில் முத்தாரம்மனை அனுதினமும் சப்தகன்னியர்கள் வழிபடுகிறார்கள்.சக்தியின் அம்சமான பிராம்மி,மகேஸ்வரி, கௌமாரி,வைஷ்ணவி,வராகி,இந்திராணி,சாமுண்டி ஆகிய சப்தகன்னியரும் மது கைடப வதம்,சும்ப நிசும்ப வதம்,சண்ட முண்டர் வதம்,மகிஷாசூர வதம் முதலியவற்றில் அசுரர்களை ஒழிக்க அம்பாளுக்கு துணைநின்றவர்கள் ஆவர்.

 

இதனால்தான் இத்தலத்தில் பஞ்சமி நாட்களிலும்,நவராத்திரி ஒன்பது நாட்களிலும்,இராகுகால வேளைகளிலும் வழிபடுவது மிகச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

 

காசியில் வராஹி அம்மனுக்கு தனிக்கோயில் உள்ளது.

 

தஞ்சாவூர்

பெரிய கோயிலிலும் ,செங்கல்பட்டு அருகில் உள்ள ஆத்தூர் அறம்வளர்த்த நாயகி உடனுறை முக்தீஸ்வரர் ஆலயத்திலும்,செங்கல்பட்டு அருகில் உள்ள

வாலாஜாபாத்[சிவபுரம்]அண்ணாமலையார் திருக்கோயிலிலும் வராஹி அம்மனுக்கு தனிச்சன்னதியில் தனிக்கோயில்கள் உள்ளது சிறப்பு.

 

கடலூர் அருகில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் தலத்தில் செல்லியம்மன் ஆலயம் உள்ளது.இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடைபெறுகிறது.

 

மயிலாடுதுறை அருகில் உள்ள வழுவூர் இளமுலை நாயகி உடனுறை வீரட்டேஸ்வரர் திருக்கோயிலில் ஈசனை வராஹி அம்மன் அனுதினமும் வழிபடுகிறாள் என்கிறார்கள்.

 

பண்ருட்டியில் உள்ள திருவதிகை பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலிலும் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மதுரையில் இருந்து இராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் டி.குண்ணத்தூர் அருகில் உள்ள மகாசக்தி மாரியம்மன் திருக்கோயிலிலும் மஹாவராஹி அம்மன் எழுந்தருளி

அருள்பாலிக்கிறாள்.

 

சென்னை அருகில் உள்ள சோழிங்க நல்லூர் பிரத்யங்கரா திருக்கோயிலிலும் வராஹி அம்மன் சிறப்பாக எழுந்தருளி அருள்கிறாள்.

 

காரைக்கால் வரிச்சிக்குடி கிராமத்தில் உள்ள பிரத்யங்கரா

ஆலயத்திலும் தனி சன்னதியில் அருள் சக்திஉடன் அன்னை வராஹி அருள்பாலிக்கிறாள்.

 

திருச்சி அருகில் திருநெடுங்களம் மங்களாம்பிகை உடனுறை

நித்திய சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வராஹி அம்மன் வரம் பற்பல அளித்து தம்மை அடியவர்களை காத்தருளுபவள்.

 

நெல்லை கல்லிடைக்குறிச்சி திருவாடுதுறை கிளை மடம் அருகே உள்ள தளச்சேரி என்னும் இடத்தில் உள்ள மானேந்தியப்பர் திருக்கோயிலில் அருளும் வராஹி அம்மனும் தனித்துவம் மிக்கவள்.

 

விழுப்புரம் சாலமேடு எஸ்.ஆர்.நகரில் அஷ்டவராகி கோயில் உள்ளது. இங்கு மகா வராகி, ஆதி

வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி,மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி முதலிய அஷ்ட வராகிகளும் உள்ளது சிறப்பு.

 

திருச்சி உறையூர் மங்கள் நகரில் வராஹி அம்மனுக்கு உள்ள தனி

ஆலயமும் சிறப்புகள் வாய்ந்தது.

 

தூத்துக்குடி எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம் [ நரிப்பட்டி ]என்ற தலத்திலும் வாரஹி அம்மன் ஆலயம் உள்ளது.'

 

'பஞ்சமியில் வராஹி அம்மன் பூஜை''--ஒரு எளிய

விளக்கம்.கட்டுரையாக்கம்:சிவ.அ.விஜய்

பெரியசுவாமி.

 

தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை.ஸ்ரீ சக்ர மகாமேருவில்

வீற்றிருந்துஉலகை பரிபாலிக்கும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் காவல் நாயகிகளாக பிராமி,கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி,வராஹி

எனும் சப்தமாதாக்கள் உள்ளனர்.

 

இவர்களில் வராஹி அம்மன் சிறந்த வரப்பிரசாதி.சப்த மாதர்கள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள்.

 

மனிதஉடலும், பன்றி முகமும் கொண்டவள்.கோபத்தின் உச்சம் தொடுபவள்.ஆனால் அன்பிலே,ஆதரவிலே மழைக்கு நிகரானவள் வராகிஅம்மன்.இந்த பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும்.சப்த மாதர்களில் வராஹியை தனி தெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது.

 

பைரவரின் சக்தியாக இருப்பதால்,வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள்

உருவாகும்.இதனால்தான் ''வராஹி காரனிடம் வாதாடாதே''என்பார்கள்.வாக் சக்தி அருளும் அதிதேவதை வராஹி அம்மன்.

 

இதனால்தான் சொற்பொழிவாளர்கள்,பேச்சாளர்கள்,வாதிடுவோர்,வழக்கறிஞர்கள் வழிபட வேண்டிய தெய்வம் வராகி அம்மன் என்கிறார்கள்.

 

மாதுளை முத்துக்களை தேனில் சிறிது ஊறவைத்து அதனை வராஹி அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்து பஞ்சமி நாட்களில் பின்னிரவில்

[இரவு 10 மணிக்கு மேல்]நெய் தீபம் அல்லது நல்எண்ணெய் தீபம் ஏற்றி,வராஹி அம்மனுக்கு செம்பருத்தி ,சிகப்பு அரளி,மரிக்கொழுந்து சாற்றி வழிபாடு செய்து,கூடவே ''அபிராமி அந்தாதி'' ,''லலிதா நவரத்தின மாலை'' மற்றும்

''வராஹி மாலை''பாராயணம் செய்து ,இப்படி தொடர்ந்து 8 பஞ்சமி நாட்களில் வழிபாடு செய்து வர நாம் எண்ணி வேண்டிய வரம் கிட்டும்.

 

பகை,வறுமை,பிணி,தடைகள் அகலும்.பில்லி,சூன்யம்,மாந்திரீகம் விலகி ஓடும்.எதிரிகள்

,பகைவர்கள் ,தீயோர் விலகிடுவர்.நம் மனதுக்கு பிடித்தவர்

வசியமாவர்.

 

பஞ்சமி நாட்களில் கூடியவரை இரவு உணவை தவிர்க்கவும்.தவிர்க்க இயலாதவர்கள் பால்,பழம் வராஹி

பூஜைக்கு பின்பு சுவைத்திடலாம்.இந்த 8 பஞ்சமி நாட்கள் [வளர்பிறை,தேய்பிறை பஞ்சமி ]தொடர் வழிபாட்டின்போது கண்டிப்பாக அசைவ உணவை தவிர்த்திட வேண்டும்.மது,புகை விலக்கிவைப்பது

சிறப்பு.

 

வராஹி அம்மனை பஞ்சமி நாட்களில் மட்டுமல்ல இந்த தொடர் பஞ்சமி நாட்கள் வழிபாட்டின் போதும்,தினமும் இரவில் தீபம் ஏற்றி வீடுகளில் அல்லது

அருகில் உள்ள அம்பிகை சன்னதியில் ''அபிராமி அந்தாதி'', ''லலிதா நவரத்தின மாலை''மற்றும் ''வராஹி மாலை''கண்டிப்பாக பாராயணம் செய்து வருதல் உடனடி

நற்பலன்களை அள்ளித்தரும்.

 

உங்கள் பிரச்சனைகளின் அதிதீவிரத்தை வாராஹியிடம் முறையிட்டால்,உங்கள் பக்தியின் தீவிரத்தை அறிந்து அன்னை வராஹி உங்கள்

பிரச்சனைக்கு கனவில் வந்து அல்லது உங்கள் முன் தோன்றி கூட உங்கள் பிரச்சனைகளின் தன்மையை உணர்த்தி ,அது உடனே நிவர்த்தியாக வழிவகை

செய்திடுவாள்.

 

கருப்பு உளுந்து கொண்டு சாதம் செய்து பஞ்சமி நாட்களின் இரவில் வராஹி அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்து முறைப்படி வழிபட வராஹி

அன்னையிடம் நாம் வைக்கும் நலம் வாய்ந்த கோரிக்கைகள் யாவும் நிறைவேறி வரும் என்கிறார்கள்.

 

வராஹி வழிபாட்டின் தொடக்கத்திலும்,நிறைவிலும்

கண்டிப்பாக ''பைரவர் பூஜை''செய்திடல் சிறப்பு.[பைரவரை நினைத்து வழிபடுதல் அல்லது பைரவர் சந்நதியில் தீபம் ஏற்றுதல் அல்லது பைரவர் பாடல்கள் பாராயணம் செய்து வருதல் சிறப்பு].

 

திருக்கடையூர் அபிராமி அம்மன் வராகி

அம்சமே.இதனை அபிராமிபட்டர் அபிராமி அந்தாதியில் குறித்து உள்ளார்.

 

''நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு

வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்

றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”

 

“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்

உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா

வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே

செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’

 

என அபிராமிபட்டர் திருக்கடையூர் அபிராமியை வராஹி திருக்கோலத்தில் தரிசித்ததை தமது அபிராமி அந்தாதியில் பதிந்து உள்ளார்.

 

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனும் தினமும் அர்த்த ஜாம பூஜையின் போது வராகிஅம்மன் திருக்கோலமே பூணுகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குளித்தலை பாலகுஜாம்பாள் உடனுறை கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் ஈசனின் சன்னதி பின்புறம் அன்னை வராகி உடன் சப்த கன்னியர் உருவங்கள் உள்ளன.

 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தின் உண்ணாமுலையம்மன் சன்னதியிலும் அன்னை வராஹி வழிபாடு செய்வது சிறப்பாம்.

 

மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் அன்னை வராஹி வழிபாடு செய்வது சிறப்பாம்.

 

அரியலூர் ஆலந்துறையார் ஆலயத்தில் மூலவர் சன்னதிக்கு முன் படி ஏறும் பகுதியில் வராஹி அம்மன் காட்சி தருகிறாள்;இவளை வணங்கியப் பின்னரே மூலவர் ஆலந்துறையாரை வணங்க வேண்டும்;

 

திரும்பும் போது கவுமாரியை வணங்க வேண்டும்;இவ்வாலயத்தில் சப்தமாதர்களின் ஆலயம் இருக்கிறது.

 

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி ஆலயத்தின் சப்தகன்னியரில் வராஹி அம்மன் சிறப்பாக போற்றப்படுகிறாள்.

 

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலின் ராஜகோபுரம் அருகில் உள்ள உதய மார்த்தாண்ட விநாயகர் சந்நதி அருகில் வீரபத்திரர் உடன் சப்தகன்னிகளும் உள்ளனர்.இங்கும் வராஹி அம்மன் வழிபாடு செய்வது பெரும்சிறப்பு.

 

இங்கு சப்தகன்னிகள் வழிபட்ட பின்பு கண்டிப்பாக சுசீந்திரம் தெப்பக்குளத்தின் வடகரையில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மன் வழிபாடு செய்திடல் சிறப்பாம்.

 

சென்னையில் இருந்து திருப்போரூர் செல்லும் வழியில் கேளம்பாக்கத்தை அடுத்து இருப்பது செங்கண்மால் திருத்தலம்.இங்கு பெரியநாயகி உடனுறை செங்கண்மாலீஸ்வரர் திருகோயில் அமைந்து உள்ளது.இக் கோவிலுக்கு வடக்கில் ''சுவேத வராக தீர்த்தம்'' உள்ளதாம்.இதில் நீராடி,ஆலயத்தில் பெரியநாயகி உடனுறை செங்கண்மாலீஸ்வரரை வழிபடுவது வராஹி அம்மனை மகிழ்விக்குமாம்.

 

சென்னை சோழிங்கநல்லூர் பிரத்யங்கரா ஆலயத்தில் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி அமைந்து உள்ளது.

 

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய தெற்கு மாடவீதியில் அமைந்து உள்ள காமாட்சி அம்மன் உடனுறை வெள்ளிஈஸ்வரர் திருக்கோயில் உட்ப்ரகாரத்தில் வராஹி அம்மனுக்கு தனி சந்நதி உள்ளது.

 

சென்னை மைலாப்பூர் கோலவிழி பத்திரகாளியம்மன் திருக்கோயில் மற்றும் முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில்களிலும் சபதகன்னியர் சன்னதிகளில் ஒருவராக வராஹி அம்மன் எழுந்தருளியுள்ளாள்.

 

அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை.எனவே பஞ்சமி நாட்களில் அன்னைக்கு பச்சை ஆடை உடுத்துவதும்,பச்சை மரிக்கொழுந்து சாற்றுவதும் சிறப்பு.

 

சிகப்பு நிற ஆடையும்,மலர்களும் கூட மிகவும் உகந்தவையே.வராஹி அம்மன் பூஜை செய்பவர்கள் பச்சை ஆடை,சிகப்பு ஆடை

உடுத்திக் கொள்வது ரெட்டிப்பு பலன்களை அள்ளித்தரும்.

 

லலிதா பரமேஸ்வரியின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி[சதுரங்க சேனா நாயிகா]எனும் தண்டினீ தான் அன்னை வராஹி.‘தந்திரராஜ தந்த்ரம்’ எனும் நூல் வராஹி அம்மனை 'லலிதையின் தந்தை' என்கிறது.

 

ஆம்!வராஹி அம்மன் பெண் தெய்வமாக இருப்பினும் தம்முடைய காக்கும் திறத்தாலும் ஆற்றல் வளத்தாலும் ஆண் தெய்வமாகவே ‘தந்திரராஜ தந்த்ரம்’ எனும் நூல் வராஹி அம்மனை போற்றுகிறது.

 

இதே கருத்தை 'பாவனோபநிஷத்'எனும் நூல்,'‘வாராஹி பித்ரு ரூபா'’ என்கிறது.‘பஞ்சமி பஞ்சபூதேஸி’ என லலிதா ஸஹஸ்ரநாமம் வராஹியை போற்றுவதையும் நாம் உணரவேண்டும்.

 

வாராஹியை பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, ஸமயஸங்கேதா, வாராஹி,போத்ரிணீ, ஷிவா, வார்த்தாலீ, மஹாஸேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்னீ போன்ற நாமாக்களைக் கூறி வழிபடல் பெரும்புண்ணியம்.

 

'' வாராஹி மாலை ''எனும் நூலில் ''சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே''என கூறிஉள்ளதிலிருந்து அம்மையப்பன் எனும் சிவசக்தி வடிவமாக வராஹி அம்மன் திகழ்கிறாள் என்பது தெளிவு..."நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது; இரவு தூங்கும் நேரம்

உறவு தூங்கிடாது"....நிலவு தூங்கும் பின்னிரவு நேரத்தில் உங்களுக்கு

உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளால் தூக்கம் வரவில்லையா?

 

கவலையை

விடுங்கள்

 

....எடுங்கள் "வாராகி அம்மன் மாலை"புத்தகத்தை ...படியுங்கள்

அதனை

 

....பிடியுங்கள் வராகி அம்மனின் திருப்பாதத்தை

 

....."வராகி அம்மன்

மாலை"யும்,"அபிராமி அந்தாதி"யும் பாராயணம் செய்து அந்த பின்னிரவில்

வராகி அம்மனை வழிபடுங்கள்

 

.....நன்மையே எந்நாளும்....துன்பம் இல்லை

ஒருகணமும்..."நாயேனை ஆட்கொண்டஅண்ணாமலையானைப் பாடுதும் காண்"."நாயேனை நாளும் நல்லவனாக்க,ஓயாமல் ஒழியாமல் உன்னருள்

தந்தாய்"

 

..."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள்

நெஞ்சினில்கொடுத்ததுநிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள்கந்தன்தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன்மலரடிநிழலில்".அகஸ்தீஸ்வரம்''மாதொரு

பாகனார்க்கு வழிவழி அடிமைசெய்யும்''...''யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும் தாமே பெற,வேலவர் தந்ததனால்

பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்நாமேல் நடவீர், நடவீர் இனியே''[அருணகிரிநாதர் கந்தர் அநுபூதி]..அன்று அருணகிரிநாதர் திருவண்ணாமலை ஆலய கோபுரத்தில் இருந்துதான் அருள் பெற்றார்.

.
மேலும்