அதிகாலையில் எழுந்து குளித்தவுடன் அனுமான் சாலீசாவை உச்சரிப்பதன் மூலம் உங்களது நாள் நன்றாக அமையும். அனுமான் சாலீசாவை தொடர்ந்து உச்சரித்து வந்தால் ஆன்மீக உணர்வை கொடுக்கும்.
இதன் அர்த்தம் புரிந்து பாராயணம் செய்யும் போது மனனோ தைரியத்தைக் கொடுக்கும்.
அனுமான் சாலீசாவை நோயுற்ற நபர் தினமும் உச்சரிக்கும் போது நோயற்ற வாழ்வைப் பெறுவர்.
இந்த மந்திரம் வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்சனைகளைக் கூட தீர்த்து வைக்கும்.சகல ஐஸ்வர்யங்களும் தரும். நினைத்த காரியம் வெற்றி பெரும். அனுமான் சாலீசா நெடுந்தூரப் பயணத்தின் போது உச்சரித்தால் விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் பயணம் வெற்றிகரமாக அமையும். புதுமணத் தம்பதிகள் அனுமான் சாலீசாவை ஒரு நாளைக்கு 100 முறைக்கு மேல் உச்சரித்தால் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான திருமண வாழ்க்கையைப் பெற்று வாழ்வார்கள்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தேகத்தையும், நீண்ட ஆயுளையும் அனுமான் சாலீசா தரும். அனுமான் சாலீசா தொடர்ந்து பாராயணம் செய்வதால் மாணவர்கள் தங்கள் தேர்வுகளை சிறப்பாக எழுதி நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அனுமான் சாலீசா மந்திரம் நாம் செய்த பாவங்களைப் போக்கி பல கோடி புண்ணியத்தை தரும்.
இரவு நேரத்தில் உச்சரித்தால் உங்கள் வாழ்க்கையிலிருந்து பேய் பயம் போகும். மனதில் தைரியம் பிறக்கும். சனி தேவனால் பாதிக்கப் பட்டவர்கள் அனுமான் சாலீசாவை விடியற் காலையில் குளித்த பிறகும், இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் முன்பும் எட்டு முறை பாராயணம் செய்தால் அவர்களுக்கு சனி பகவானின் அருள் கிடைத்து அனைத்து நன்மைகளும் நடக்கும்.
ஒரு காரியத்தில் வெற்றி பெற அல்லது அனுகூலம் கிடைக்க மூல நட்சத்திர நாளன்று அனுமான் சாலீசாவை 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து பாராயணம் செய்யும் பட்சத்தில் உடலின் காயங்கள் மற்றும் நோய் பிணிகள் வேகமாக குணமாகும். அனுமான் சாலீசாவை தினமும் உளமார உச்சரித்தால் உங்கள் வீட்டில் நல்லுணர்வு பிரதிபலிக்கும் மற்றும் ஆன்மீக சிந்தனை மேலோங்கி இருக்கும்.
இவ்வாறு இந்த உன்னதமான மந்திரமாகிய அனுமான் சாலீசாவை தினமும் பாராயணம் செய்தால் வாழ்வில் அனைத்து செல்வங்களும், அஷ்ட ஐஸ்வர்யங்களும்,காரிய அனுகூலங்களும் கிடைக்கும் .