திருமணத்திற்கு பின்பு வேறொருவர் மீது காதல் ஏற்படுவது?

By News Room

என் கல்லூரி கால நண்பனின் பெயர் சுந்தர மோகன்.. அவனுடைய தாயார் நடிகர் மோகனின் மேல் உள்ள அளவு கடந்த அன்பினால் அவனுக்கு அந்த பெயர் வைத்ததாக அடிக்கடி கூறுவான். இங்கு பல பெண்கள் தற்போதைய திரைத்துறையில் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்களை காதலிப்பதாக கூறுவார்கள். இதில் சில திருமணமான பெண்களும் இவ்வாறே சொல்வார்கள்.

அவ்வளவு ஏன், இங்கு எத்தனை ஆண்கள் நடிகை ராஷ்மிகா மந்தனாவையோ அல்லது தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகைகளை சகோதரிகளாக நினைத்துக் கொண்டு அவர்களின் நடிப்பை ஆடலை ரசிக்கிறார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.

பொதுவாக திருமணமான ஆண்கள் பெரும்பாலும் கற்பனையில் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி பிள்ளைகள் பெற்று இன்புற்று ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டு தானிருப்பார்கள். பெண்களும் அவ்வாறே..  இந்த நிழல் உலக சிந்தனைகள் அவர்களின் நிஜ குடும்ப வாழ்க்கையை பாதிக்காத வரை எந்த பிரச்சினையுமில்லை. ஒரு பெரிய மனோதத்துவ நிபுணர் மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட ஆலோசனை கூறும் மருத்துவர் "உங்களுக்கு உங்கள் மனைவியின் மீதோ அல்லது கணவரின் மீதோ அருவருப்புத் தோன்றினால் உங்கள் மனதுக்கு பிடித்தவரை நினைத்துக் கொண்டு உறவில் ஈடுபடுங்கள்.. ஒன்றும் தவறில்லை." என்று கூறுவாராம்.

காதல் எப்பொழுது யார் மேலும் வரலாம்.. நீங்கள் சொல்வதைப் போல "அந்த காதலுக்கு உயிர் கொடுக்காத வரை' எந்த பிரச்சினையும் இல்லை. நம் எண்ணங்களை திருப்தி படுத்த நம் மனம் இது போன்ற குரங்கு வேலைகளை செய்து கொண்டே தான் இருக்கும்.. சிலருக்கு ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கும் அவர்களுடைய மானசீக காதலன் மற்றும் காதலி மாறிக் கொண்டே இருப்பார்கள். என்ன தான் 90-ஸ் கிட்ஸ் ஆக இருந்தாலும், இப்பொழுது குஷ்புவை விரும்புகிறேன் என்று சொல்ல மாட்டார்கள். இப்பொழுது டிரெண்டில் உள்ள நடிகர் நடிகையயோ, புதிதாய் பணியில் சேர்ந்த அலுவலக தோழியையோ தான் மானசீகமாக காதலிப்பார்கள்.

உடன் பிறந்த சகோதரியை தவிர மற்ற பெண்களை "சிஸ்டர்.." என்றோ, அல்லது பெண்கள் வேறொரு ஆணை "பிரதர்.." என்றோ அழைக்கும் வார்த்தைகள் ஆயிரம் சதவிகிதம் உண்மையான வார்த்தைகள் இல்லை.

.
மேலும்