இந்த காலத்து பெண்கள் செய்யும் 10 தவறுகள்?

By News Room

தேவையில்லாத காதல். ஏன்னா லைப் ரொம்ப போரா போகுதுன்னு இல்லை அவங்க நண்பர்கள் காதலிக்குறாங்கன்னு, கமிடெட்ன்னு சொன்னா கெத்துன்னு பண்ண வேண்டியது.

கண்மூடித்தனமான காதல். அதுக்காக எதுவும் செய்யற அளவு துணிவது. அன்புக்கு அடிமையாகி விடுவது. அது உண்மையானதா பொய்யானதான்னு தெரியாமலேயே.

அப்படி பண்ணுன காதல் தோல்வி அடைந்தால். காதல் மேல நம்பிக்கை இல்லாமல் போவது. யார் மேலயும் நம்பிக்கையில்லாமல் போவது.

தன் வாழ்க்கையை பெற்றோர்களே முடிவு பண்ணட்டும்ன்னு விட்டுவிடுவது. நம்ம வாழ்க்கையை நாம தான் முடிவு பண்ணனும். கடைசி வரை வாழ போறது நாம தானே.

மற்றவர்களை நம்பியே வாழ்வது. தந்தை சொல்றதை கேட்பது, கணவன் சொல்றதை கேட்பது. சுயமான முடிவு எடுப்பதையே விட்டுவிடுவது.

குடும்பதுக்காக வாழறேன்னு சொல்லி தனக்குன்னு ஒரு வாழ்க்கையிருப்பதை மறப்பது.

வேலை செய்யும் இடங்களில் பெண்களே அவர்களை தாழ்த்தி கொள்வது. தனக்கு தகுதியில்லைன்னு தானே நினைப்பது. ஆண்களும் பெண்களும் வேலை செய்யுற இடத்தில் பிரமோஷன் விஷயத்தையே எடுத்துக்கோங்க. இருவருமே சரி சமமாக உழைச்சிருந்தாலும் பாராட்டு ஆண்களுக்கு கிடைக்கும் போது விட்டு கொடுத்துடுறது.

ஆண்களுக்கு சரி சமமா காட்டணும்னு கெட்ட பழக்கங்களை கெத்துன்னு நினைச்சி பண்ணுறது.

திருமணம்னு வரும் போது ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மத்ததை கோட்டை விட்டுவிடுவது. பையன் பணக்காரனா இருக்கானான்னு மட்டும் பாத்து திருமணம் பண்ணிடுவாங்க. அப்பறம் பாத்தா அவன் ஏற்கனவே மூணு, நாலு திருமணம் பண்ணியிருப்பான்.

சமீபத்தில் பார்த்தது, திருமண மேடை வரை பொண்ணு வந்துட்டு அந்த பையன் தாலி கட்ட வரப்பா கொஞ்சம் பொறுங்க என் காதலன் வந்துக்கிட்டிருக்கான். அவனை தான் திருமணம் பண்ணுவேன்னு மாப்பிள்ளைகிட்டயே சொல்லுறாள்.

பாவம் அந்த பையன். திருமணம் புடிக்கலையோ இல்லை காதல் இருக்கோ இன்னொரு பையனோட வாழ்க்கையிலே விளையாடாதீங்க.

இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி ganesanmatrimony.com

.
மேலும்