எது வேண்டுமானாலும் கேளுங்க தருகிறேன் என சொல்லும் கடவுளுமில்லை..... எதையும் கொடுக்காமல் வரம் தரும் கடவுளுமில்லை.... என்கிற போது... பக்தி என்பது வெறும் நம்பிக்கை இல்லை என்கிற தெளிவு வருகிறது... ஒவ்வொரு முறையும் தட்டில் சில்லறை கேட்டு கை நீட்டும் போது வேதங்கள் வெறும் கதைகளாகிறது..
என் ஏமாற்றங்களை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.. உங்கள் வாய்ப்புகளை என்னிடம் கொடுங்கள்... நான் யார் என்பதை பிறகு நீங்கள் என் பின்னால் பேசுவீர்கள்.... ஓவியரும் தூரிகையும் இருந்து விட்டால் மட்டும் போதாது... கற்பனை இல்லை என்றால் கடவுளும் சிலைதான்.... கற்பு என்னும் ஒற்றை பூட்டுக்குள் ஒட்டுமொத்த பெண்ணினத்தையும் அடக்கி விடலாம் என்கிற ஆண்களின் பேராசை தான்... திருமணம்... என் வயிற்றுக்கு என் சுயத்திற்கு என் விருப்பத்திற்கு என எதுவும் கேட்காத அம்மாக்கள்... உனக்கு யாரை பிடிக்கும் எப்படிப்பட்ட மணமகனை பார்க்க வேண்டுமென....எனக்குத்தெரியும் என சொல்வதற்கும் காரணம்... ஆண்களின் ஆதிக்கம் தான்... அறியாமை எனும் வீட்டை தாண்டாத வரை சுதந்திரம் எனும் காற்று பெண்ணிதயத்தின் மீது படராது...
- இயலிசம்
இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி ganesanmatrimony.com