Breaking News :

Saturday, December 21
.

பெருந்தலைவர் காமராஜரை பற்றிய தகவல்கள்


1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.
3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற
மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்
சொல்லி இருக்கிறார்..
5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில
தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில் காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.
6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,  திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.
7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.
8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக
ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.
9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட
காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல்காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி.
எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக்கொள்வார்.
11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக
மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்
அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற
ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.
12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்
பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட
சொன்னால், " என்னய்யா... இது?'' என்பார்.
கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்''வெட்டுவார்.
13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்
மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்த விலையில்பொருட்களை வழங்கும் தொழில்களை நிறையதொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.
14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும் "காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.
15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரை
சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.
16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும் அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டுவிட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்கொள்வார்.
17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்வைத்திருந்தார்.
18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை
ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.
19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது.அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234 பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில்
பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.
21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில் 8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை வைத்திருந்ததாக சொல்வார்கள்.
22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத
கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்
எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.
இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு
அத்துப்படியாக இருந்தது.
23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன்
முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார்.
24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர்
சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி
இருக்கிறார்..
25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.
26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல
திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. "மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.
27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க
காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மாகாந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.
28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.
29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்துபோட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம் பேனா வாங்கி கையெழுத்திடுவார்.
30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே பயன்படுத்தினார்.
31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே
போட்டுக் கொள்வார்.
32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது.
`எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.
33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினைபற்றி மக்களுடன் விவாதிப்பார்.
34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள்,
இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்.
35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்
என்று செய்து விட மாட்டார். நிதானமாக யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த
செயலை எக்காரணம் கொண்டும் செய்து
முடிக்காமல் விட மாட்டார்.
36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால்
கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார்.
37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.
38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி,நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி'
என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால் `கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.
40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும்.
41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ்
வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.
42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின்
தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து,
இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்
பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும்
பாடுபட்டார்.
43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம்
இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டுவிட்டார்.
44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி
உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,
ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு
விருந்தாளியாக வர வேண்டும் என்று  வேண்டுகோள்கள் விடுத்தன.
45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச்
சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி,
செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.
46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்
முழுவதும் இருந்தார்கள்.
47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை
மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக
1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால்
ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள `ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒருநாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.
49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்
கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்
தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.
50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோ
வரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகா வென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்ற
பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்
பெற்றார்.
51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார்.
52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.
53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி
முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.
54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்
தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.
55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை
கொண்டாடியதும் இல்லை...அந்நாட்களில் ஊருக்குப்
போவதுமில்லை.
56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு
பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான்
சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவார்
57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும் எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு
வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்' என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.
58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்கு
கொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு
டிரங்குப் பெட்டிதான்.
59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர் `மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' என
அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார்.
60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார்.
61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படி பேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.
62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.
63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்
காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலு
நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய மூவரும்தான்.
64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்
1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்
கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்
சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.
65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்திரும்பி பார்க்க வைத்தார்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.