தேவையானவை
1/2 கிலோ - மைதா
1/4 கப் - பால்
2 டீஸ்பூன் - வெண்ணெய்
2 டீஸ்பூன் - சீனி
1 - முட்டை
தேவையான அளவு - எண்ணெய்
தேவையான அளவு - உப்பு
செய்முறை
உப்பு, முட்டை,சீனி,பால்,வெண்ணைய் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் முட்டை கலவையை மைதா மாவில் சேர்த்து மிருதுவாக பிசையவும்.
தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தெளித்து நன்கு பிசைந்து வைக்கவும்.
பிசைந்த மாவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் நமக்கு தேவையான வடிவத்தில் உருண்டை பிடித்து எல்லா உருண்டையிலும் எண்ணெய் தடவி நன்கு ஊற வைக்க வேண்டும்.
1 மணி நேரம் ஊறினால் போதுமானது.
ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் தேய்த்து விரலால் சுற்றி கொண்டு போல் மறுபடியும் 20 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் கையில் எண்ணெய் தொட்டு ஓரளவிற்கு வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
தோசைக் கல்லில் போட்டு அதைச் சுற்றி எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பி போட்டு மிதமான தீயில் நன்கு வேக வைத்து எடுக்கவும்.