தேவையானவை:
1. வஞ்சிரம் அல்லது கொடுவா மீன்
2. பாசுமதி அரிசி
3. பெரிய வெங்காயம்
4. தக்காளி
5. இஞ்சி - பூண்டு விழுது
6. புதினா, கொத்தமல்லித்தழை
7. தயிர்
8. பட்டை, இலவங்கம், பிரிஞ்சு இலை
9. பச்சை மிளகாய்
10. மிளகாய்த் தூள்
11. தனியா தூள்
12. எண்ணெய், உப்பு
செய்முறை:
1. மீன் துண்டுகளை நன்றாகக் கழுவி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு சுமார் 20 நிமிடம் ஊற வைக்கவும்.
2. குக்கரில் பட்டை, இலவங்கம், பிரிஞ்சி இலை போன்றவற்றை தாளித்து உடன் கொத்துமல்லி, புதினாவை வதக்கிக் கொள்ளவும்.
3. இப்போது மேற்கண்டவற்றுடன் வெட்டி வைத்த வெங்காயத்தைப் போட்டு வதக்கிய பின் உடன் இஞ்சி - பூண்டு விழுதையும் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
4. இப்போது இவற்றுடன் தயிரைச் சேர்த்து, மிளகாய்த்தூள், தனியாத் தூள் ஆகிய இவற்றைச் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.
5. இப்போது இவற்றுடன் அரிசியைப் போட்டுக் கிளறி, தண்ணீரை அளந்து ஊற்றிக் கொள்ளவும்.
6. தண்ணீர் கொதிக்கும் சமயத்தில், மீன் துண்டுகளை அதன் மீது வைக்க வேண்டும். ஆனால், கிளறக் கூடாது. ஒருவேளை கிளறினால் மீன் துண்டுகள் உடைந்து போய்விடும்.
7. பின்னர், இப்போது குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் வைத்தால் போதும்.
8. இப்போது 5 நிமிடம் ஸ்டவ்வை சிம்மில் வைக்கவும். இதோ இப்போது சுவையான மீன் பிரியாணி ரெடி ஆகி விடும். சாப்பிட்டு மகிழுங்கள்.