ஏன்யா..எனக்காயா..
என் மனசை தொட்ட என்ராசா..
சொல் நெருப்பு தைச்சிருச்சு
செருப்பால உன் நாக்கும் ஒத்திருச்சு
குறுக்கே ஒரு எறும்பு
ஏறியே நின்னுட்டாலும்
ஏசியே நசுக்கிடுவேன்
என் கணவா உனக்காக
குறுக்கு நெடுக்குமா
கூம்பிட்டு நான் நடக்க
குருவி குஞ்சாட்டம்
உன்ன கொத்திப்போன
என வனப்பு..
இப்போ உன் நெனப்பை தின்னுடுச்சோ..
எப்படி நான் புரியவைக்க
என் தோலுரிச்சே எரியவைச்ச
ஏழுதலைமுறைக்கும் உன் நா கருக்குதய்யா..
வார்த்தையில கொல்லாதய்யா
உன் முகசுளிப்பு பொல்லாதய்யா..
கனவுல கூடத்தானே நான்
கல்லாக மாறிடுவேன்..
நான் கட்டிய கொசுவச்சேலை
காத்துல பறந்ததுனா
கற்பு எங்கோ கரையுதுன்னு
நான் கண்ணீர் வடிச்சல்லோ
கதறிருக்கேன்..
கண்ணா
கடைசியா ஒருதடவை
என் கண்ணு முன்னே வந்துபாரு
அதில் கள்ளம் நீயும் கண்டுபுட்டா
கட்டையில இப்பவே
நானும் போறேன்..
இந்த கல்லுக்கும்
உன்மேல காதல் இருக்குதய்யா..
ஏனோ உனக்கு அது
கள்ளக்காதலா தோனிருச்சோ
கண்ணா
என் கண்ணுக்குள்ள என் காதல்
கல்லாவே தான் இருந்திருக்கும்
நீ என்னை
கட்டாமலே இருந்திருந்தா..
கடைசியா நான் சொல்றேன்
என்னைக் கட்டிப்போய்யா
ஒருதடவை
என் கண்ணீரும் கன்னம்தொட்டே
உன்ன மட்டுமே காதலிக்கும்..
உனக்கு மட்டுமே
படுக்கை விரிக்கும்..
.. இயலிசம்...
.
சந்தேகப்படும் கணவனை காதலிக்கும்.. மனைவியின் குமுறல்!
.