ஆசிரியர் : கௌதம நீலாம்பரன்
வெளியீடு : சாரதா பதிப்பகம்
பக்கங்கள் : 160
எழுத்தாளர் "கௌதம நீலாம்பரன்" எழுதிய "சாணக்கியரின் காதல் "என்ற இந்த நூலில் ஐந்து குறுநாவல்கள் இடம் பெற்றுள்ளன.
சாணக்கியரின் காதல்
தட்சசீலத்தில் தனது குருகுல கல்வியை முடித்துவிட்டு தனது தந்தையை காண வருகிறார் சாணக்கியர்.
தந்தையை கண்டறியும் சாணக்கியர், தனது எதிரியான நந்தனிடமிருந்து சுஹாசினியை பிரித்து, தனது நண்பன் ராட்சசுக்கு தான் சிறுவயதில் காதலித்த சுவாசினி தேவியை திருமணம் செய்து வைக்கிறார்.
மூங்கில் பாலம்
தட்சசீல இளவரசன் ஆம்பிக் மக்களால் வெறுக்கப்பட்டு அரண்மனையை விட்டு வெளியேறாமல் வாழ்ந்து வருகிறான். மாவீரன் அலெக்சாண்டர் தனது ஆதிக்கத்தை தட்சசீலத்தில் செலுத்த வரும்போது ஆம்பிக்கின் தங்கை அனக்காதேவி எதிர்க்கிறாள்.
சாணக்கியர் தான் அவளைத் தூண்டி விட்டதாக என்று எண்ணிய ஆம்பிக் அவரிடம் முறையிடுகிறார். தகுந்த புத்திமதி சொல்லி மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்துகிறார் சாணக்கியர்.
மன்னன் மாடத்து நிலவு
தட்ச சீல இளவரசி அமுதவல்லி தனது தந்தையின் எதிரியான பாண்டிய இளவரசன் குலசேகரனை காணாமலே காதலிக்கிறாள். அதற்கு தந்தை தடுக்கிறார். மகா மந்திரி சதாசிவராயர் அமுதவல்லியின் காதலையும், தந்தையின் சினத்தையும் எவ்வாறு கையாளுகிறார் ? பாண்டிய இளவரசன் குலசேகரனுக்கு அமுதவல்லியை திருமணம் செய்து வைக்கிறார் ?என்பதாக முடிகிறது இந்த கதை.
வாசவதத்தையின் காதல்
உபகுப்தர் என்னும் இளம் துறவியை நோக்கி காத்திருக்கிறாள் வாசவதத்தை. ஒரு தலையாக உபகுப்தரை காதலிக்கிறாள் வாசகத்தை. அவளைத் திருத்தி புத்த பெருமான் அருள் பெற செய்து மன அமைதி அடைய வைக்கிறார் உபகுப்தர்.
வெற்றி திலகம்
காவிரி வடகரையில் தகடூர் அதியமானால் வெற்றிக்கொள்ளப்பட்ட கொங்கு நாட்டு சேர்ந்த ஆயிரவேலியில் எழுப்பப்பட்டிருக்கும் அதியமான் கோட்டையை அடைய பாண்டியராஜன் தனது புரவிகளோடு புறப்படுகிறார்.
அதியமானின் மகள் நங்கை நல்லாலுக்கும், பாண்டிய தூதனுக்கும் காதல் ஏற்படுகிறது.
பாண்டியத்துடன் அதியமான் கோட்டையை கைப்பற்றினானா? நங்கை நல்லாளை மணமுடித்தானா? என்பதை விறுவிறுப்புகளோடு நிறைவடைகிறது இந்த குறுநாவல்.
புனைவாக இருந்தாலும் சம்பவங்களும், காட்சிகளும் நேரில் நடப்பதை போல எழுதிருக்கு நேர்த்தி அழகாக இருக்கிறது.