திருமலை திருப்பதியில் சுவாமியை தரிசிக்க, எப்போதும் இல்லாமல் தற்போது அதிக அளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த வார இறுதி நாட்களில், பக்தர்களின் வருகை அதிக அளவில் அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் பல மணி நேரமாக காத்திருந்து தரிசனம் மேற்கொள்கின்றனர்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், உண்டியல் காணிக்கை செலுத்துவது வழக்கம். உண்டியலில் விழும் காணிக்கை பணத்தை எண்ணும் நிகழ்வு தினந்தோறும் நடைபெறும். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
அதாவது, நேற்று (ஜூலை 4) ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கையை பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பக்தர்கள் செலுத்திய ரூ.5.73 கோடியே அதிகபட்ச காணிக்கையாக இருந்துவந்தது.