Breaking News :

Thursday, November 21
.

அபிராமி அந்தாதி


நெல்லைய‌ப்பர் கோவிலில் விளக்கேற்றும் தொழிலை ஒருவர் செய்து வந்தார்.

விள‌க்குகளை ஏற்றுவதும்,  இரவு கோவிலைச் சார்த்தப் போகிற நேரத்தில் ஒரு சில விள‌க்குகளைத் தவிர மற்றவைகளை அணைப்பதுமான தொழிலில் அவர் ஈடுபட்டிருந்தார்.

வேலை செய்த நேரம் போக மற்ற நேர‌மெல்லாம், அவர் அம்பிகையின் சன்னதியிலேயே உட்கார்ந்திருப்பார். யார் வருகிறார்கள் ‍யார் போகிறார்கள் என்பதெல்லாம் அவருக்கு தெரியாது.

ஒருநாள், அம்பாள் உபாசகரான அனுபவசாலி ஒருவர் அக்கோவிலுக்கு வந்தார். அமைதியாக தரிசனத்தை முடித்துக் கொண்ட அவரது பார்வை அம்பாள் சன்னதியில் அமர்ந்திருந்த விளக்கேற்றும் தொழிலாளியின் மீது பதிந்தது.

அத்தொழிலாளியை அழைத்தார். அம்பாள் உபாச‌க‌ர்." அப்பா! நான் ஒரு பாட‌லை உன‌க்கு சொல்லித் த‌ருகிறேன். அதை நீ தின‌ந்தோறும் சொல். நேர‌ம் கிடைக்கும் போதெல்ல‌ம் சொல்" என்று சொல்லிப் பாட‌லை உப‌தேசித்தார்.

அப்பாட‌ல்;
   வைய‌ம் துர‌க‌ம் ம‌த‌க‌ரி மா ம‌குட‌ம் சிவிகை
   பெய்யும் க‌ன‌க‌ம் பெருவிலை ஆர‌ம் பிறைமுடித்த‌
   ஐய‌ன் திருமனையாள் அடித் தாம‌ரைக்கு அன்பு முன்பு
   செய்யும் த‌வ‌ம் உடையார்க்கு உள‌வாகிய‌ சின்ன‌ங்க‌ளே.
என்ற‌ அபிராமி அந்தாதியின் 51ம் பாட‌ல்.

அம்பிகையின் அடியார்க‌ளுக்கு உண்டான‌ ஐஸ்வ‌ர்ய‌ அடையாள‌ங்க‌ளைச் சொல்லி, அவ‌ர்க‌ள் ராஜ‌ வாழ்க்கை வாழ்வார்க‌ள்‍ என்பதே இப்பாட‌லின் க‌ருத்து.

அம்பாள் உபாச‌க‌ர் சொன்ன‌ பாட‌லைக் க‌ருத்தோடு கேட்ட‌ விள‌க்கேற்றும் தொழிலாளி அதை இத‌ய‌த்தில் ப‌திவு செய்து கொண்டார்.

அன்று முத‌ல் அவ‌ர‌து வாய் அப்பாட‌லையே முணுமுணுத்துக் கொண்டிருந்த‌து. உப‌தேச‌ ம‌ந்திர‌த்தை சொல்லும் போது. உத‌டுக‌ள் அசைய‌லாமே த‌விர‌, அது என்ன‌ ம‌ந்த்திர‌ம் என்ப‌து அடுத்த‌வ‌ர் காதுக‌ளில் விழ‌க் கூடாது.

சாஸ்திர‌ங்க‌ள் சொல்லும் இந்த‌ வ‌ழிமுறையை சாதாரண‌த் தொழிலாளியான‌ அவ‌ர் க‌டைபிடித்தார் என்றால், அத‌ற்கு அம்பிகையின் க‌டைக்க‌ண் பார்வை அத்தொழிலாளியின் மீது ப‌டிந்து விட்ட‌து என்ப‌து தானே பொருள்.

பொருள் புரிந்தால் போதுமா?

அந்த‌ தொழிலாளிக்கு பொருள் கிடைக்க‌ வேண்டாமா ‌?

அத‌ற்குண்டான‌ செய‌லை அம்பிகை, திருநெல்வேலியில் அர‌ச‌ரின் முன்னால் அர‌ங்கேற்றி, த‌ன் ச‌ன்ன‌தியில் விள‌க்கேற்றும் தொழிலாளிக்குப் பொருட் செல்வ‌த்தை வாரி வ‌ள‌ங்கினாள்; ந‌ம‌க்கு அபிராமி அந்தாதியின் பெருமையை விள‌க்கினாள்.

மெய் சிலிர்க்கும் நிக‌ழ்ச்சி அது.

அர‌ச‌வையில் இருந்த‌ அர‌ச‌ருக்கு, த‌லைமை அமைச்ச‌ரின் அக்கிர‌ம‌ங்க‌ள் அனைத்தும் நிருப‌ண‌ம் ஆயின‌. அர‌ச‌ர் க‌வ‌லை கொண்ட‌ உள்ள‌த்தோடு நெல்லைய‌ப்ப‌ர் கோவிலுக்கு போனார். அவ‌ர் பின்னாலேயே அக்கிர‌ம‌க்கார‌ அமைச்ச‌ரும் ஓடினார்.

அர‌ச‌ரைக் க‌ண்ட‌தும்,கோவிலில் இருந்த சிறு சிறு ச‌ல‌ச‌ல‌ப்புக‌ளும் கூட‌ அட‌ங்கின‌. அம்பாள் ச‌ன்ன‌தியில் அர‌ச‌ர் வ‌ழிப‌ட்டுக் கொண்டிருந்தார்.

அவ‌ர் முன்னால் நீட்ட‌ப்ப‌ட்ட‌ க‌ற்பூர‌ ஜோதி காற்றில் ஆடிய‌ ச‌த்த‌ம் கூட‌க் கேட்ட‌து. அவ்...வ‌ள‌வு நிச‌ப்த‌ம். க‌ற்பூர‌ஜோதியை கண்களில் ஒற்றிக் கொண்ட‌ ம‌ன்ன‌ர் "ஏதோ ச‌ப்த‌ம் கேட்கிற‌தே! என்ன‌ ச‌ப்த‌ம் அது?" என்ற‌ வாறே ந‌ட‌ந்தார். கூட‌ இருந்த‌ கும்ப‌லும் போன‌து.

ஒரு இட‌ம் வ‌ந்த‌தும் அர‌ச‌ர் நின்றார்."இங்கு தான் ஏதோ ச‌ப்த‌ம் கேட்கிற‌து. அது ஏதோ ம‌ந்திர‌ம் போல் இருக்கிற‌து" என்றார்.

கூட‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளும் அப்ப‌குதியை அல‌சினார்க‌ள். அங்கே, முணுமுணுத்த‌வாறே விள‌கேற்றிக் கொண்டிருந்த‌ தொழிலாளி ம‌ட்டும்தான் இருந்தார். அவ‌ரை அர‌ச‌ரின் முன்னால் நிறுத்தினார்க‌ள்.
அர‌ச‌ர் விப‌ர‌ம் கேட்டார். விள‌க்கேற்றும் தொழிலாளி த‌ன‌க்கு உப‌தேச‌ம் ஆன‌தையும், அன்று முத‌ல் அதைச் சொல்லி வ‌ருவ‌தையும் விவ‌ரித்தார்.

"அப்ப‌டியா? என்று ஆச்ச‌ரிய‌த்தை முக‌த்தில் காட்டிய‌ அரச‌ர், அக்கிர‌ம‌ அமைச்ச‌ரை அழைத்து அவ‌ர‌து அதிகார‌ முத்திரையைப் ப‌றித்தார்.

அதை விள‌க்கேற்றும் தொழிலாளியிட‌ம் வ‌ழ‌ங்கினார். "இன்று முத‌ல் நீதான் த‌லைமை அமைச்ச‌ர்" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

ச‌ற்று நேர‌த்தில் ஒரு த‌ங்க‌ப் ப‌ல்ல‌க்கு கோவில் வாச‌லில் வ‌ந்து நின்ற‌து.

புதிய‌ த‌லைமை அமைச்ச்ச‌ரான‌ விள‌க்கேற்றும் தொழிலாளியை அதில் அம‌ர‌ வைத்துக் கொண்டு அர‌ண்ம‌னை நோக்கிச் சென்ற‌து.

அபிராமி அந்தாதியின் 51 ம் பாட‌லில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ அனைத்து ஐஸ்வ‌ரிய‌ங்க‌ளும் அவ‌ரை வ‌ந்து அடைந்த‌ன‌.

உல‌க‌ம் முழுவ‌தும் எழில்ம‌ய‌ம். இறைவ‌ன் ப‌டைத்த‌ ப‌டைப்பு அத்த‌னையும் அழ‌குப் பிழ‌ம்பு. ம‌னித‌ன் செய‌ற்கையினால்  அழ‌கை அழுக்கு ஆக்குகிறான்.

இயற்கையில் எல்லாமே அழ‌கு தான். குழ‌ந்தை அழ‌காக‌ப் பிற‌ந்து அழுக்காக‌ ம‌டிகிற‌து. த‌ளிர் அழ‌காக‌த் தோன்றி அழுக்கேறிச் ச‌ருகாக‌ உதிர்கிற‌து.

இந்த‌ அழ‌கை தோற்றுவிக்கும் இணையில்லாச் சக்தி இறைவியாகிய‌ இராஜ‌ராஜேசுவ‌ரி. அவ‌ள் பேர‌ழ‌கி.

அவ‌ள் தூய‌ அழ‌கிலே சொக்கிப் போன‌ அன்ப‌ர் ப‌ல‌ர். அழ‌குக்கு ஒருவ‌ரும் ஒவ்வாத‌ அவ‌ளை அபிராமி என்று வ‌ழ‌ங்குவ‌ர். அவ‌ளுடைய‌ பேர‌ருளிலே ஈடுப‌ட்ட‌வ‌ர் அபிராமிப் ப‌ட்ட‌ர்.

அவ‌ர் அபிராமியை அழ‌கிய‌ நூறு பாட‌ல்க‌ளால் பாடியிருக்கிறார்.

அன்னையின் அழ‌கையும் அருளையும் ஆற்ற‌லையும் திருவிளையாட‌ல்களையும் வீர‌ச் செய‌ல்க‌ளையும் திருநாம‌ங்க‌ளையும் எண்ணி எண்ணி இன்புற்று, ந‌ம்மையும் எண்ணி எண்ணி வ‌ழிபாடு ப‌ண்ணி ந‌லம் பெற‌ச் செய்கிறார்.

எழில் உத‌ய‌மானால் அதைக் க‌ண்டு இத‌ய‌ ம‌ல‌ர் ம‌ல‌ரும‌ல்ல‌வா?

அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.