Breaking News :

Friday, March 14
.

ரமண மகரிஷி ஏன் கோவணத்தில்?


இவரது போதனைகள் "உடலைப் பற்றி சிந்தனை செய்யாதே" என்கிறார். ரமண மகரிஷி (வெங்கடராமன் ஐயர்) திருச்சுழி , விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் ஸ்மார்த்தா ப்ராமின் அதாவது இவர்கள் சைவ விஷ்ணு கணேஷாசூர்யாசக்தி என எல்லோரையும் வழிபடுவர். இவரது பெரியப்பா, தாத்தா சந்நியாசிகளாக இருந்தவர்கள்.

இளமையிலேயே சிறந்த ஞாபசக்தி, புலமை கொண்டவர். 12வயதில் ஆழ்ந்த தியானங்களில் ஈடுபட்டு நெடுநாட்கள் தவத்திலேயே இருக்கக்கூடியவர். ஆங்கிலம் படித்து அரசு உத்தியோகம் செல்ல இவரது தந்தை வெங்கடராமனை திண்டுக்கல், மதுரை ஆங்கிலப்பள்ளியில் சேர்த்தார். ஆனால் இவருக்கு படிப்பில் நாட்டமில்லை. திருவண்ணாமலைதான் தனது புனித இடம் என தீர்மானித்து திருவண்ணாமலையில் தங்கி தானே பல புத்தகங்களைப் படித்து ஞானி ஆனார். மறுபடி மதுரையில் இருந்தபோது 16 வயதில் ஞானியாக துறவறம் பூண்டார்.

1896இல் மதுரையில் திடீரென ஆவேசம் அடைந்து இறந்து மறுபடியும் ஈசன் - ஈஸ்வரா - ஞானி உருவில் பிற்கால வாழ்க்கையை வாழ்ந்தாராம்.

இதைப்பற்றி கூறும்போது இந்த இறந்து வந்த நிலை சுத்தமனம், நீங்காத விருத்தி, ஞானம் அடைந்து ஈஸ்வரஞானத்துக்குச் சமம் என்று இவரே சொல்கிறார். இவர் இறந்து ஞானநிலையில் இருப்பவர். தனக்கு உடல்கிடையாது என்கிறார்.

இதற்கடுத்து ஆங்கிலப்படிப்பில் விருப்பமில்லாமல் 16வயதிலேயே கோவணம் கட்டி உடலைத்துறந்த ஞானியாகி ,அண்ணனிடம் மட்டும் சொல்லிவிட்டு திருவண்ணாமலையில் வாழ்நாள் முழுவதும் ஞானியாக வாழ்ந்தார். இவரது தந்தை இவரது சிறிய வயதிலேயே இறந்து உறவினர் வீட்டில் வளர்ந்தார்.

ஒரு ஞானி உயிருடன் இருந்தபோதும், இங்கேயும், இப்போதும், எப்போதும் முக்தி அடைந்துள்ளார்.   அவர் எப்படி எங்கே எப்போது எவ்வாறு உடலைவிட்டு வெளியேறுகிறார் என்பது அவருக்கு முக்கியமற்றது.  சில ஞானிகள் கஷ்டப்படுவது போல் தோன்றலாம். மற்றவர்கள் சமாதிகளில் வாழலாம். இன்னும் சிலர் மரணத்திற்கு முன் பார்வையிலிருந்து மறைந்துவிடலாம். ஆனால் அவர்களின் ஞானத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

ஞானிகளால் துன்பம் இன்பம் உணரப்படுவதில்லை. ஏனென்றால் ஞானி தன்னை உடல் என நினைப்பதில்லை. உடலைக்கூட பார்ப்பதில்லை. உடலின் சுயத்தை மட்டுமே பார்க்கிறார்.
உடல் இல்லையென்றால், நான் மட்டும் இருந்தால், அது எந்த வடிவத்திலும் மறைந்துவிடும் என்ற கேள்வி எழாது.

ரமணமகரிஷி 1896 துறவறம் 16வயதில் பூண்டு 1948 இல் 69வது வயதில் கையில் கேன்சர் கட்டி வந்து 1949இல் இவரது ஆசிரமபக்த டாக்டரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டார். மறுபடியும் கேன்சர் பரவ 1949 வருடம் முழுவதும் 4 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. 1950இல் கேன்சரால் உடல்முழுவதும் பாதிக்கப்பட்டு நலிந்துவிட்டார். பக்தர்கள் வெளிநாடுகளில் சிகிச்சைகள் பெற்று குணமாகலாம் என்று வேண்டுகோள் விடுத்தபோது,

'"ஏன் இந்த உடலின்மீது இவ்வளவு பற்று கொண்டு இருக்கிறீர்கள். போனால் போகட்டும். நான் எங்கு போகமுடியும். நான் இங்குதான் இருக்கிறேன்" என 14 ஏப்ரல் 1950இல் இறந்தார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.