‘அரோஹரா‘ அல்லது ‘அரோகரா‘ என்பது
‘அர ஹரோ ஹரா‘
என்ற சொற்களின் சுருக்கம்.
இதற்கான பொருள்:
‘இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக‘என்பதாகும்.
முன்பு, சைவர்கள் (சைவ சமயத்தினர்) இதனைச்
சொல்வது வழக்கமாக இருந்தது.
திருஞானசம்பந்தர் ஒருமுறை
பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்போது, அவரைச் சுமந்துகொண்டு
வந்தவர்கள்
‘ஏலே லோ ஏலே லோ‘
என்று களைப்பைக்
குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர்.
இதைச் செவிமடுத்த
திருஞானசம்பந்தர்,
பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட
பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று,
‘அர ஹரோ ஹரா‘
என்பதைக் கற்றுக்கொடுத்தார்.
அதன் பிறகு ‘அர ஹரோ
ஹரா‘ என்றுச் சொல்வது வழக்கமாயிற்று.
அரோஹரா என்பதற்கு வேறு சில விளக்கங்கள்!
எவர் ஒருவரும் நினைத்த அளவிலேயே முக்தி அருளும் தலமாக இருப்பது
திருவண்ணாமலை, பஞ்சபூதத்தலங்களில் அக்னித்தலமாக விளங்குகிறது.
இத்தலத்தில், "அண்ணாமலைக்கு அரோஹரா' எனச் சொல்லி சிவபெருமானை வணங்குவர்.
இதன் பொருள் என்ன தெரியுமா?
எல்லாம் வல்ல சிவனின் திருநாமங்களில் "அரன்'
என்பதும் ஒன்றாகும்.
இத்திருப்பெயரினை
"அரன், அரன்' என
அடுக்குத்தொடர்போல
சொன்னார்கள் ஒரு காலத்தில்!
அது "அர ஹர அர ஹர'' என்று மாறியது.
பின்னர் "அரோஹரா' எனத் திரிந்தது. "அரஹர' என்றால் "சிவனே சிவனே' என சிவபெருமானை
கூவி அழைப்பதற்கு ஒப்பாகும்.
ஆலயங்களிலே பக்தர்கள்”அரோஹரா” என்று சொல்லி வணங்குவதன் பொருள் யாது?
அதாவது ஹர என்பது பாவங்களைப் போக்குவதென்று பொருள்படும்.
எனவே ” ஹர ஓ ஹர” என்பது தமிழிலே ”அரோகரா” என்று மருவி வந்துவிட்டதாகக் கூறுவார்கள்.
அரோஹரா என்று சொல்லி வணங்கும் பொழுது நாம் செய்த தீவினையெல்லாம் அகன்று விடும்!
காலப்போக்கில் சைவர்கள்
இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது.
ஆனால், கௌமாரர்கள்
(முருகனடியார்கள்),
‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா‘
என்றுச் சொல்லி வந்ததால் இச்சொற்கள் முருகனோடு
இணைந்துவிட்டன!
பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா‘ என்றுச் சொல்வது,
‘வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள்
வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி,
நற்கதியை அருள்வாயாக’
என்று உரிமையோடு முறையிடுவதாகும்.
முருகனே முழுமுதல் இறைவன் என்ற நம்பிக்கையைக்
கொண்டவர்கள் இனி,
‘வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா‘
என்று உற்சாகமாகச் சொல்வோமே!
*ஸ்ரீ பாலமுருகன் அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும்..!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!*
*அடியேன்*
*ஆதித்யா*