நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்வது, அனைத்தும் எனக்குத் தெரியும். நானே அனைவரின் அந்தரங்க ஆட்சியாளனாக இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகின் கண் அசையும், அசையா சர்வ ஜீவராசிகளையும் அரவணைக்கிறேன். இப்பிரபஞ்சத்தை நானே கட்டுப்படுத்துபவன் ஆட்டுவிப்பவன். எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே. முக்குணங்களின் கூட்டுறவும் நானே. எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவன் நானே. என்பால் கவனத்தை திருப்புபவனை துன்பம் எதுவும் விளைவிக்காது. ஆனால் மாயை என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும். எல்லாப் பூச்சிகள், எறும்புகள் கண்ணுக்கு தென்படுபவை, அசையக்கூடிய, அசையமுடியாத உலகம் எல்லாம் என்னுடைய உடம்பு அல்லது உருவம் ஆகும்.
இத்தகைய அழகான விலைமதிப்பற்ற வார்த்தைகளை பாபா அவரே கூறினார். எல்லாம் பாபாவின் செயல் என்று எண்ணுங்கள். நம்மைச் சுற்றி நல்லதே நடக்கும். அவரின் செயல்பாடுகள் நமக்கு புரியாது. முடிவில் அவர் நம்மை மேலே உயர்த்தியிருப்பார்.நாம் நினைத்ததை விட நல்ல விஷயங்களை நமக்கு கொடுத்திருப்பார்.
நம்பிக்கை வையுங்கள்... பொறுமையுடன் இருங்கள்..
நம் அனைவரையும் நிச்சயம் பாபா கைவிடமாட்டார்.