Breaking News :

Friday, March 14
.

செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு பலன்கள்


செவ்வாய்க்கிழமையோடு திரயோதசி திதியோடு கூடிவருகிறது. பொதுவாக செவ்வாய் பிரதோஷத்தை 'ருண ரோக விமோசன பிரதோஷம்' என்பார்கள். அதாவது நோய் மற்றும் கடன் பிரச்னைக்குத் தீர்வாக அமைவது. எனவே, இந்த அற்புதமான நாளில் நாளைக் காலை நீராடி, நீறுபூசி சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். உடலால் இயன்றவர்கள் உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் பழங்கள் மற்றும் திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு சிவ நாமம் ஜபித்தபடி இருக்கலாம்.

பிரதோஷம்  வேளையில் செய்யும் வழிபாடு கிரகதோஷங்களை நீக்கி, நல்லருளைப் பெற்றுத்தரும். இந்த நாளில் சிவபுராணம், திருவாசகம், தேவாரம், திருப்பல்லாண்டு முதலிய தமிழ் வேதங்களைப் பாராயணம் செய்தல் மிகவும் சிறப்பு.

செவ்வாய்க்கிழமையோடு திரயோதசி திதியோடு கூடிவருகிறது. பொதுவாக செவ்வாய் பிரதோஷத்தை 'ருண ரோக விமோசன பிரதோஷம்' என்பார்கள். அதாவது நோய் மற்றும் கடன் பிரச்னைக்குத் தீர்வாக அமைவது.

தினமும் சூரியன் மறையும் மாலை வேளையில் 4.30 முதல் 6 மணிவரையிலான நேரத்தைப் பிரதோஷ காலம் என்றே அழைப்பார்கள். அதிலும் திரயோதசி திதி அன்று வரும் பிரதோஷ காலம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதனாலேயே அந்த நாளை 'பிரதோஷம்' என்றே அழைக்கிறோம்.

பொதுவாகவே பிரதோஷ வழிபாடு பிரச்னைகளைத் தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நாளில் பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கும் நந்தியம் பெருமானுக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைக் கண்ணாரக் காண்பதன் மூலம் நம் மனத்துயர் எல்லாம் விலகும் என்கிறார்கள் அடியவர்கள். அப்படிப்பட்ட பிரதோஷம் எந்தக் கிழமையில் வருகிறதோ அதற்கேற்ப விசேஷ பலன்கள் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள். அவ்வாறு வாரத்தின் ஏழு நாள்களிலும் வரும் பிரதோஷ வழிபாட்டின் பலன்களை இப்போது காண்போம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதோஷ வேளை சந்திரன் மற்றும் சனியின் ஓரையில் அமையும். இந்நாளில் செய்யக்கூடிய பிரதோஷ பூஜையினால் நமக்கு சனி பகவானின் அனுக்கிரமும் சூரியபகவானின் அருளும் கிடைக்கும். பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய பிரதோஷம் ஞாயிறு பிரதோஷ்ம்.

திங்கட்கிழமை என்றாலே அது சிவபெருமானின் வழிபாட்டுக்குரிய நாள் என்றே கொள்ளலாம். அந்த நாளின் பிரதோஷ வேளையானது செவ்வாய் மற்றும் சூரிய ஓரையில் அமையும். ஆகவே, திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சூரிய பகவானின் அருளைப் பெற முடியும். மேலும் இந்தக் கிழமைக்கு உரிய கிரகம் சந்திரன். சந்திரன் மனோகாரகன். எனவே திங்கட்கிழமைகளில் பிரதோஷ வேளையில் பிறை சூடிய பெருமானை வழிபடுவதன் மூலம் சந்திரனின் அருளைப் பெறலாம். மனம் சார்ந்த சிக்கல்கள் உள்ளவர்கள், மனவலிமை வேண்டுபவர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய பிரதோஷம் திங்கள்கிழமை பிரதோஷம்.

செவ்வாய்கிழமை பிரதோஷ வேளை புதன் மற்றும் சந்திரனின் ஓரையில் அமையும். அந்த வேளையில் சிவ வழிபாடு செய்தால் முருகப்பெருமானின் அருள் நமக்குக் கிடைக்கும். ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலையால் ஏற்படும் பாதகங்கள் நீங்கும். செவ்வாயின் அருள் பரிபூரணமாகக் கிடைப்பதால் நோய் மற்றும் கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

புதன்கிழமை பிரதோஷ வேளை குரு மற்றும் செவ்வாய் ஓரையில் அமையும். எனவே இந்த நாளில் செய்யும் பிரதோஷ கால வழிபாடு ஜாதகத்தில் குருவின் நிலையால் ஏற்படும் நற்பலன்களைக் கூடுதலாக்கும். கல்வி, கலை, ஞானம் ஆகியவற்றில் மேன்மை உண்டாக்கும்.

வியாழக்கிழமை பிரதோஷம் வந்தால், அந்த நாளின் பிரதோஷ வேளை சுக்கிரன் மற்றும் புதன் ஓரையில் அமையும். இன்று பிரதோஷ பூஜை செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். மாணவர்கள் இந்தப் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்தால் கணிதத்தில் சிறப்பான முறையில் நிபுணத்துவம் பெற முடியும் என்கிறார்கள் அடியவர்கள்.

6) வெள்ளிக்கிழமையில் பிரதோஷ தினம் வந்தால், அன்றைய பிரதோஷ வழிபாடு நடைபெறும் வேளை சனி மற்றும் குரு ஓரையில் அமையும். இது காரிய ஸித்தியைக் கொடுக்கும். குருபகவானால் அருளால் பொன்பொருள் சேரும்.

7) சனிக்கிழமையுடன் திரயோதசி திதி இணைந்து வரும் நாளையே சனி மகா பிரதோஷம் என்று சிறப்பித்துக் கூறுகிறோம். சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது என்று சொல்வார்கள். ஆஞ்சநேயருக்கும் மிகவும் உகந்த தினம் சனிக்கிழமையே. இந்த நாளில் பிரதோஷ வேளையானது சூரியன் மற்றும் சுக்கிர ஓரையில் அமையும். இந்த நேரம் வெற்றி தரும் முகூர்த்தத்தைக் குறிக்கிற ஒரு நேரமாகும். எனவே இந்த வேளையில் சிவவழிபாடு செய்வது மிகவும் விசேஷம்.

இந்த வேளையில் செய்யும் வழிபாடு கிரகதோஷங்களை நீக்கி, நல்லருளைப் பெற்றுத்தரும். இந்த நாளில் சிவபுராணம், திருவாசகம், தேவாரம், திருப்பல்லாண்டு முதலிய தமிழ் வேதங்களைப் பாராயணம் செய்தல் மிகவும் சிறப்பு.

இன்று  செவ்வாய்க்கிழமையோடு திரயோதசி திதியோடு கூடிவருகிறது. பொதுவாக செவ்வாய் பிரதோஷத்தை 'ருண ரோக விமோசன பிரதோஷம்' என்பார்கள். அதாவது நோய் மற்றும் கடன் பிரச்னைக்குத் தீர்வாக அமைவது. எனவே, இந்த அற்புதமான நாளில் நாளைக் காலை நீராடி, நீறுபூசி சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். உடலால் இயன்றவர்கள் உபவாசம் இருக்கலாம்.

முடியாதவர்கள் பழங்கள் மற்றும் திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு சிவ நாமம் ஜபித்தபடி இருக்கலாம்.
மாலை வேளையில் சிவபெருமானை நினைத்து வழிபட வேண்டும். ஆலய தரிசனத்துக்கு வாய்ப்பில்லாததால் வீட்டிலேயே இருக்கும் சிவபெருமானின் படத்துக்கு மலர்சாத்தி எளிய நிவேதனம் ஒன்றைச் செய்து வழிபாடு செய்யலாம். இவ்வாறு செய்து வேண்டிக்கொள்வதன் மூலம் சிவனருள் கிடைப்பதோடு, நோய், கடன், பகைவர்களால் தொல்லை முதலியவை நீங்கும் என்பது நம்பிக்கை.
செவ்வாய் பிரதோஷம்... உடல் நோய்களை போக்கும் ருணவிமோசன பிரதோஷம்
செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும். சிவாலயங்களில் சிவ வழிபாடு செய்வதால் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.

செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது. பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள், மேஷ, விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசிரிடம் , சித்திரை, அவிட்ட நட்சத்திரகாரர்கள்  செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யவேண்டும்.
செவ்வாய் பிரதோஷத்துக்கு என்ன சிறப்பு தெரியுமா... கடைப்பிடிப்பது எப்படி
தினமும் சூரியன் மறையும் மாலை வேளையில் 4.30 முதல் 6 மணிவரையிலான நேரத்தைப் பிரதோஷ காலம் என்றே அழைப்பார்கள். அதிலும் திரயோதசி திதி அன்று வரும் பிரதோஷ காலம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதனாலேயே அந்த நாளை 'பிரதோஷம்' என்றே அழைக்கிறோம்.

பொதுவாகவே பிரதோஷ வழிபாடு பிரச்னைகளைத் தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நாளில் பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கும் நந்தியம் பெருமானுக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைக் கண்ணாரக் காண்பதன் மூலம் நம் மனத்துயர் எல்லாம் விலகும் என்கிறார்கள் அடியவர்கள். அப்படிப்பட்ட பிரதோஷம் எந்தக் கிழமையில் வருகிறதோ அதற்கேற்ப விசேஷ பலன்கள் கிடைக்கும்

சிவபுராணம்
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
திருச்சிற்றம்பலம்
சிவாயநம திருச்சிற்றம்பலம்

செவ்வாய்கிழமை பிரதோஷ வேளை புதன் மற்றும் சந்திரனின் ஓரையில் அமையும். அந்த வேளையில் சிவ வழிபாடு செய்தால் முருகப்பெருமானின் அருள் நமக்குக் கிடைக்கும். ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலையால் ஏற்படும் பாதகங்கள் நீங்கும். செவ்வாயின் அருள் பரிபூரணமாகக் கிடைப்பதால் நோய் மற்றும் கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த வேளையில் செய்யும் வழிபாடு கிரகதோஷங்களை நீக்கி, நல்லருளைப் பெற்றுத்தரும். இந்த நாளில் சிவபுராணம், திருவாசகம், தேவாரம், திருப்பல்லாண்டு முதலிய தமிழ் வேதங்களைப் பாராயணம் செய்தல் மிகவும் சிறப்பு.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.