Breaking News :

Thursday, November 21
.

சித்ரா பெளர்ணமி வழிபாடு ஏன்?


ஸ்ரீ குரோதி சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியே “சித்ரா பௌர்ணமி” ஆகும். அன்று, சில ஊர்களில் முழு நிலா வெளிச்சத்தில் ஒரு வகையான உப்பு பூமியில் இருந்து வெளி வரும். இதை “பூமி நாதம்” என்றும் பூநீர் என்றும் சித்தர்கள் அழைப்பர். இந்த முப்பு, மருந்துகளுக்கு அதிகமான சக்தியை அளிக்கின்றது என்று சித்தர்கள் கண்டுபிடித்தனர். அதனால் இந்நாளை சித்தர்கள் பௌர்ணமி என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. இன்றும் பூமிநாதம் ரசாயன மருத்துவத் துறையில் உபயோகிக்கப்படுகிறது.

நாம் செய்யும் தவறு யாருக்கும் தெரியாது என்று எண்ணிவிட வேண்டாம். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டும் கணக்கெடுத்துக் கொண்டும் இருக்கிறான் சித்ர குப்தன் என்பார்கள். அவர் தோன்றியதும் சித்ரா பௌர்ணமியன்றுதான். அன்றைய நாளில் மக்கள் சித்திர குப்தனுக்காக விரதம் இருந்து, “எங்கள் பாவ கணக்கை குறைத்து, மேற்கொண்டு பாவம் செய்யாமல் இருக்க வழித் துணையாக இருப்பா” என்று வேண்டிக்கொள்வார்கள். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில், சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உண்டு. சித்ரா பௌர்ணமியன்று இவருக்கும், இவரது மனைவி கர்ணிகாவுக்கும் அபிஷேக, ஆராதனைகளுடன், திருமண விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

சித்ரா பூர்ணிமாவின்(பௌர்ணமி) முக்கியத்துவம் 
23. 04. 2024

சித்ரா பௌர்ணமி என்பது நம்முடைய நல்ல அல்லது கெட்ட செயல்கள் நிச்சயமாக பூமியிலுள்ள நம் வாழ்க்கையிலும், பிற்பட்ட வாழ்க்கையிலும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்தும் ஒரு நாள். ஆகவே, நல்ல செயல்களைச் செய்வதும் மற்றவர்களுக்கு கெட்டதைத் தவிர்ப்பதும் முக்கியம்.

சித்ரா பூர்ணிமாவின் முக்கியத்துவம்
தமிழ் மாதமான சித்திற்ரை (ஏப்ரல்-மே) முழு நிலவு சித்ரா பூர்ணிமா (சித்ரா பௌர்ணமி )என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில், மேஷம் என்ற ராசிசியில் சூரியன் உச்சம், மற்றும் சந்திரன் துலாம் என்ற ராசிசியில் இருக்கும், பிரகாசமான நட்சத்திரமான சித்ராவை மாற்றும். சித்ரா பூர்ணிமா நாளின் வேதப்பூர்வ முக்கியத்துவத்தைப் பற்றி அறிக.
சித்ரா பௌர்ணமி முழு நிலவு:

ஒரு சித்ரா பௌர்ணமி பல மதங்களில் புனிதமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அது மக்களின் அணுகுமுறையில் முழு நிலவு படைப்பாற்றல் மற்றும் நேர்மறை உணர்வுகளை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது. உணர்வுகள் அதிக நனவின் அலைகளில் சவாரி செய்வதாகக் கூறப்படுகிறது, இது நேர்மறையான ஆற்றல் மற்றும் அதிக நனவுக்கு வழிவகுக்கிறது.

மேஷத்தில் ஒரு உயர்ந்த உச்சமான  சூரியன்:
சூரிய நாட்காட்டி மேஷத்தில் ஒரு உயர்ந்த சூரியனுடன் தொடங்குகிறது, இது பூமியில் மிகவும் நன்மை பயக்கும் முடிவுகளை வழங்கக்கூடிய வானத்தில் ஒரு சாதகமான நிலை. எனவே இது ஒரு வலிமையான சூரியன், அதன் நல்ல விளைவுகளைக் கொண்டுவருவதற்கு முழு அதிகாரம் அளிக்கிறது.

சித்ரா பூர்ணிமாசித்ரகுப்தர் நாள்:

இந்து மதத்தில், சித்ரகுப்தர் ஆண்டவர் யமாவின் உதவியாளர். அவர் நல்ல மற்றும் கெட்ட செயல்களை அல்லது பூமியில் மனிதர்களின் கர்மங்களை பதிவுசெய்பவர். ஒரு நபர் இறந்தவுடன், சித்ரகுப்தர் உடனடியாக அந்த நபரின் கெட்ட மற்றும் நல்ல கர்மங்களின் பட்டியலை முழுமையாக சரிபார்த்து, அந்த நபரின் ஆன்மா குறித்த இறுதி முடிவுக்காக இறைவன் யமருக்கு செய்தியை அனுப்புகிறார் என்று நம்பப்படுகிறது. சித்ரா குப்தா என்ற பெயர் பூமியிலுள்ள ஒவ்வொரு மனிதனின் செயல்களின் மறைக்கப்பட்ட படங்களையும் குறிக்கிறது. இந்த நாளில், சூரியனும் சந்திரனும் பூமி விமானத்தைச் சுற்றி சக்திவாய்ந்த சக்தியை உருவாக்கும்போது, மனிதர்களுக்கு ஏற்படும் விளைவு ஆழமானது என்று கூறப்படுகிறது. பூமியில் மனிதர்களின் செயல்பாடுகள் குறித்து சித்ரகுப்தர் விழிப்புடன் இருப்பது கருத்து, பூமியில் உள்ள மனிதர்கள் எந்த பாவத்தையும் செய்ய வேண்டாம் என்று சொல்வது, குறிப்பாக இதுபோன்ற ஒரு நல்ல நாளில். இது நல்ல செயல்களில் மட்டுமே ஈடுபடுமாறு வற்புறுத்துவதன் மூலம் மக்களின் இதயங்களில் நல்ல நன்மையையும் நல்ல விருப்பத்தையும் பாதுகாக்க உதவும்.
சித்ரகுப்தரின் ஆசீர்வாதங்களைத் தூண்டி, உங்கள் எதிர்மறை கர்ம பதிவுகளை அழிக்கும்.
சித்ரகுப்தரின் புராணக்கதை:
ஒருமுறை ஆண்டவர் இந்திரனும் அவரது ஆசிரியர் பிரிஹஸ்பதியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இந்திரன் தனது ஆசிரியரின் ஆலோசனையை புறக்கணித்தார். அதன்பிறகு, ப்ரிஹஸ்பதி மனந்திரும்பி, இந்திரனுக்கு அறிவுரை கூறுவதைத் தவிர்த்தார். இந்திரன் பல தவறுகளைச் செய்யத் தொடங்கினான். அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு, பிரிஹஸ்பதி திரும்பி வந்து, இந்திரனிடம் தனது பாவங்களின் சுமையைக் குறைக்க பூமிக்கு யாத்திரை செய்யச் சொன்னார். பூமிக்கு வந்த பிறகு, அவர் தனது பாவங்களிலிருந்து மீட்கப்பட்டார் என்பதை உணர்ந்தார், மேலும் சிவபெருமான் அவரை கெட்ட கர்மங்களிலிருந்து விடுவித்ததாக நினைத்தார். இந்திரன் ஒரு சிவலிங்கத்தைக் கண்டுபிடித்து சித்ரா ப சித்ரா பௌர்ணமி நாளில் தங்கத் தாமரையுடன் ஜெபிக்க ஆரம்பித்தான். 

சித்ரகுப்தரை வழிபடுவது: காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்த கோயில், தாராசுரத்தில் உள்ள ஐராவடேஸ்வரர் கோயில், திருவக்கரையில் சந்திர மௌலிஸ்வர் கோயில் மற்றும் பிறவற்றில் கோயில்களில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் கடந்தகால பாவங்களை நேர்மையுடனும் பக்தியுடனும் கரைக்கும் நோக்கத்திற்காக நீங்கள் கடவுளிடம் ஜெபிக்கும்போது, உங்கள் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கும். அதிக ஆற்றலுக்கான உங்கள் பிரார்த்தனையுடன், எங்கள் சமூகத்தில் பாவங்களாகக் கருதப்படும் செயல்களைச் செய்ய வேண்டாம் என்பதையும் நீங்கள் தீர்மானிக்கிறீர்கள். உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவதற்கான உங்கள் வழியில் தடையாக நிற்கும் உங்கள் கர்மங்களை தூய்மைப்படுத்த உங்கள் விருப்பமும் விருப்பமும் உங்களை கடவுளிடம் நெருங்கிச் சென்று, மன்னிக்கப்படுவதற்கு ஆசீர்வாதங்களைத் தேடுகின்றன.
உங்கள் கர்மாவை கலைப்பதற்கான வழிகள்:
இந்த நாளில் வழிபாட்டின் சாராம்சம் எதிர்மறை ஆற்றல்களின் பிடியிலிருந்து உங்களை விடுவிப்பதற்கான உண்மையான முயற்சி.
கர்மாவை கலைக்க பல்வேறு வழிகள்:
இந்த நாளில், இந்திரன் மற்றும் அவரது குரு பிருஹஸ்பதியின் கதையை நீங்கள் தியானிக்கலாம்.
தூப, கற்பூரம், பூக்களுடன் சிவன் அல்லது சித்ரகுப்தரை வணங்குங்கள்.

சித்ரா பெளர்ணமி எனும் மிக சிறப்பு வாய்ந்த தினத்தில் எப்படி அம்பாளை என்ன நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது.
 
சித்ரா பெளர்ணமி எனும் மிக சிறப்பு வாய்ந்த தினத்தில் எப்படி அம்பாளை என்ன நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது.
பௌர்ணமிகளில் மிக சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது சித்ரா பௌர்ணமி.

சித்ரா பெளர்ணமி 23. 04. 2024 வருகிறது. இந்த தினத்தில் எமலோகத்தில் நம் புண்ணிய - பாவ கணக்கை எழுதிக் கொண்டிருக்கும் சித்ரகுப்தனை வழிபட்டு தான தர்மங்கள் செய்வதால், அவரின் அருள் நாம் பெறலாம். நீண்ட ஆயுள் பெறலாம். சித்ரா பெளர்ணமி பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

வழிபடும் முறை:

சித்திரை மாத பௌர்ணமி தினத்தன்று அம்பாளின் திருவுருவ சிலை அல்லது படத்திற்கு மலர் மாலை அணிவித்து, வஸ்திரம், ஆபரணங்களை அணிவித்து வழிபடுவது நல்லது.

நைவேத்தியம்:

அம்பாளுக்கு மஞ்சள் கலந்த சாதம் படைத்து, பானகம், கிராம்பு, ஏலம், பச்சைக் கற்பூரம் சேர்த்த தாம்பூலம் அடங்கிய நைவேத்தியத்தைப் படைக்க வேண்டும்.

சித்ரா பௌர்ணமி அம்பாள் வழிபாடு பலன்:

சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது.

அம்பாள் ஸ்தோத்திரம்

மாதங்கி, உன்னை நான்
மனமுடன் மொழிகளால்
மெய்யுடன் மலர்களால்
சுத்தித்துத் துதி செய்தி

வணங்கியே பூஜிக்க
வரமெனக் கருள்புரிவாய்
வழி வேறில்லையம்மா,

வல்வினைகள் விலகவே
அம்புலி சுந்தரி,
ஆனந்த வடிவமே,
அம்புலி யணிபவர்
முகமலர்ப் பானுவே,
பாபமா மிருளினைப்
போக்கிடும் ஜோதியே
காத்தருள் சங்கரீ,

கருணையின் பெருக்கமே
கௌரி மனோகரி

சங்கரீ, சாம்பவீ,
சம்புவின் மோஹீனீ,
பூர்ண மாமம் மதிதனைப்
பழித்திடும் நின் முகம்
இளம்வெயில் நிற ஆடையுடன்
சுவர்ண நிற ஆடையுடன்

கண்டதால் அல்லவோ
காமனை வென்றவர்
திரும்பினார் இவ்வழி
தேவர்கள் மகிழவே.
கந்தனைப் பெற்றதாய்
கல்பக விருக்ஷமே,

கந்தனைப் போலவே
கருணையா லுலகினைக்
காத்திடு முன்னையே
காத்தரு ளென்றுநான்
கேட்டலும் வேண்டுமோ
கௌரீ நீ சொல்லுவாய்
அம்மை அன்னை நீ அம்பிகே

பிதாவும் பார்வதி.
அம்பான பிறப்பும் நீ
ஆனந்த வடிவமே சொரூபமே
ஆயுளோ டைசுவரியம்
நீ உனையின்றி வேறில்லை.
என்றுநா னுன்னையே
எண்ணவும் அருள்புரி
சூரியனைப்போல் விளங்கும்
ஸ்ரீ சக்ர மத்தியினில்
ஆனந்த முகத் தினராய்
ஆயுதங்கள் அபயமுடன்
அம்பிகே! உனைநினைத்தேன்
அருள்புரிவாய் எந்தனுக்கு
இந்திராதி தேவரும்
ஸனகாதி முனிவரும்

காண்பதுவும் அரிதான
கல்யாணி யுன்வடிவைக்
காண்பதற்கு வழி யான்றே
காணாது வேறுவழி
யில்லாமல் மாதர்களை
மாதாவாய் எண்ணுவதே.

ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ர்யம்பிகே கௌரீ
நாராயணீ நமோ அஸ்துதே

ஆயுர்தேஹி தனம்தேஹி
வித்யாம் தேஹி மஹேச்வரீ
ஸமஸ்தம் அகிலாம் தேஹி
தேஹி மே பரமேச்வரீ

ஸ்ர்வ மங்கள தாயிந்யை நம:

வெள்ளிக்கிழமை விளக்கேற்றி
வேண்டுகின்றேந் தாயே,
வேண்டுவன தருவாயே,
வேதமுரைக்கும் நாயகியே!
சிரத்தையுடன் உனை நினைந்து
செவி குளிர பாடிடுவேன்,

நல் நினைவும், நற்புத்தியும்
நான் பெறவே அருள்வாயே!
நம்பிக்கையோடு உன்னை
நான் பணிந்து நிற்கின்றேன்
நம்பிக் கை கொடுப்பாய்
எனைக் காக்கும் என் தாயே!

என் கனவிலேனும் நீ தோன்றி
உன் மலர் முகத்தைக் காட்டிடுவாய்.
கண்டதும் என் பிணி தீரும்
கவலை எங்கோ ஓடி விடும்

சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் 

திருவண்ணாமலை கிரிவலம்

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையவளாகிய பார்வதிதேவிக்கு உடலில் சமபங்கு இடமளித்து அம்மையாரப்பனாய் காட்சித்தரும் தலமாகவும் திகழும் தலம் இது. எம்பெருமான் ஈசனே மலையாய்க் காட்சி தரும் தலம் என்றும், 'நினைத்தாலே முக்தி தரும் மலை' என்றும் பக்தர்களால் போற்றப்படும் சிறப்புமிக்கது இந்தத் தலம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
14 கி. மீ அளவில் சுற்றுப்பாதையை கொண்ட இத்திருக்கோயிலில், அருணாச்சலேஸ்வரரை மனதில் நினைத்து மனமுருக வேண்டி இந்த மலையில் கிரிவலம் வருவது பக்தர்களிடையே சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கிரிவலம் செய்வார்கள். ஆனால், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமியின் போது தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் வந்து செல்வர். இந்த வருடம் 23. 04. 2024
சித்ரா பௌர்ணமி வருகிறது.

சித்ரா பெளர்ணமி தினத்தில் பாவ புண்ணிய கணக்கை எழுதும் சித்ரகுப்தனை வழிபடும் விரத முறை
 

எம தர்மனின் உதவியாளரான சித்ரகுப்தன் அவதரித்த தினமான சித்ரா பெளர்ணமி தினத்தில் சித்ரகுப்தனை நினைத்து எப்படி விரதமிருந்து வழிபடுவது, அவருக்கான சித்ரகுப்தர் ஸ்லோகம் என்ன என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்.
 
எம தர்மனின் உதவியாளரான சித்ரகுப்தன் அவதரித்த தினமான சித்ரா பெளர்ணமி தினத்தில் சித்ரகுப்தனை நினைத்து எப்படி விரதமிருந்து வழிபடுவது, அவருக்கான சித்ரகுப்தர் ஸ்லோகம் என்ன என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்...
சித்ரகுப்தன் உருவான புராண கதை:
 
சித்ரா பெளர்ணமி என்றாலே நம் நினைவுக்கு வருவது மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நினைவுக்கு வருவதுண்டு. பெளர்ணமிகளிலேயே மிக பிரகாசமான, அழகான நிலவை தரிசிக்க வேண்டுமென்றால் அது சித்திரை மாத பௌர்ணமியில் தான் முடியும்.
சித்ரா பெளர்ணமிக்கு மேலும் ஒரு முக்கிய சிறப்பு சேர்க்கும் விதமாக இருப்பது தான் எமலோகத்தில் மக்களின் பாவ - புண்ணிய கணக்கை எழுதக் கூடிய சித்ரகுப்தன் உருவான தினம் என புராணங்கள் கூறுகின்றன.
சித்ரகுப்தன் உருவான புராண கதை:

கைலாயத்தில் பார்வதி தேவி தன் தோழிகளுடன் இருந்தார். அப்போது தோழி ஒருத்தி பொற்பலகையில் ஒரு அழகிய இளைஞனின் ஓவியத்தை வரைந்தாள். ஒருவரை வர்ணிக்க வேண்டுமென்றால் ஒரு சித்திரம் போல, ஒரு சிலை போல இருக்கிறார் என்போம், ஆனால் சித்திரமே ஆசை கொள்ளும் வகையில் அவரைப் பார்க்க மிகவும் அழகாக இருந்தது அந்த ஓவியம்.
தோழி பார்வதி தேவியிடம் இந்த ஓவியம் உயிர் பெற்று எழுந்தால் எப்படி இருக்கும் என கூற, பார்வதி தேவி அதற்கு உயிர் கொடுத்தாள்.

சித்திரத்திலிருந்து வெளிப்பட்டதால் அவனுக்கு சித்ரகுப்தன் என பெயர் சூட்டினாள் பார்வதி தேவி. ஈசனிடம் சித்ரகுப்தனை அழைத்து சென்ற பார்வதி, நடந்தவற்றை விளக்கினாள். சித்ரா பெளர்ணமி அன்று தோன்றியதாலும், சித்திரத்திலிருந்து தோன்றியதாலும் இவருக்கு சித்ர குப்தன் என பெயர் வைத்ததாக கூறினார்.மேலும், இவருக்கு ஏதேனும் ஒரு பொறுப்பை வழங்க வேண்டும் என வேண்டினாள்.அதன் படி சிவபெருமான் சித்ரகுப்தனை காமதேனுவின் வயிற்றில் பிறக்க வைத்தார். அவரை இந்திராணி வளர்த்து ஆளாக்கினாள்.

சித்ரகுப்தர் காஞ்சிபுரத்தில் சிவனை நோக்கி கடும் தவமிருந்தார். அவர் முன் தோன்றிய ஈசன் அவருக்கு எழுத்தாணியும், ஏடும் வழங்கி அருள் புரிந்து, இனி நீ எமனின் உதவியாளராக இருக்க வேண்டும் என பணி நியமித்தார். உயிரினங்களின் பாவ புண்ணிய கணக்கை சரியாக எழுத வேண்டிய பெரிய பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்றார்.

தகுந்த வயது அடைந்த சித்ரகுப்தனுக்கு மயனின் மகள்களான நீலாவதி, கர்ணாவதி ஆகிய இருவரையும் திருமணம் செய்து வைத்தார். அதோடு எமலோகத்தில் தன் வேலையையும் தொடங்கினார்.
தனி ஆளாக உயிரினங்களின் பாவ புண்ணியத்தை கணக்கிட்டு வந்த எம தர்மனுக்கு உற்ற துணையாக சித்ரகுப்தர் இருப்பதாக தர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன.

சித்ரகுப்தருக்கான விரதம் :
 
நம் முன்னோர்கள் சித்ரா பெளர்ணமி தினத்தில் சித்ரகுப்தனின் புராண கதையை கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
சித்ரா பெளர்ணமி தினத்தில் காலையில் தொடங்கும் விரதம், இரவு முழு நிலவை பார்த்து தரிசனம் செய்து, சித்ரகுப்தனுக்கு பூஜை செய்து வழிபட்டு பின்னர் விரதத்தை முடிக்க வேண்டும்.
விரதத்தின் போது காலையில் வீட்டில் மாக்கோலமிட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபட வேண்டும். அதோடு சர்க்கரைப் பொங்கல் படைத்தும், பயத்தம்பருப்பும், எருமைப்பால் சேர்த்து பாயசம் செய்து நைவேத்தியம் படைக்க வேண்டும்.

சித்ரகுப்தன் விரத முறை
 
விரதத்தின் போது பசும்பால், நெய், தயிர் ஆகியவற்றைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
அன்றைய தினம் நாம் நம்மால் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்கு உதவி செய்தல், உணவு தானம் செய்தல், அன்னதானம் செய்வதால் நம் பாவங்கள் நீங்கும் என்றும், ஏழை மாணவர்களுக்கு கல்விக்கான உதவி செய்வதால், பாட நோட்டு புத்தகம், பேனா முதலியவற்றை வாங்கி தரலாம்.
சித்ரகுபதரை நினைத்து விரதமிருப்பதாலும், ஏழை, எளியோருக்கு உதவி செய்வதாலும் நம்முடைய பாவங்கள் குறையும், புண்ணியங்கள் அதிகரிக்கும். நம் புண்ணிய கணக்கை கூடுதலாக சித்ரகுப்தன் எழுதுவார் என்பது ஐதீகம்.

சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்து வரம் பெற்ற சித்ரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக்கோயிலே இருப்பது அமைந்திருக்கிறது.

சித்ரா பௌர்ணமி ஸ்லோகம்
 
ஓம் கமலவர்ணனே போற்றி
ஓம் சித்திரை உருவே போற்றி
ஓம் பயம் போக்குபவனே போற்றி
ஓம் கால உருவே போற்றி
ஓம் அந்தக நண்பனே போற்றி
ஓம் ஞான உருவே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கணக்கனே போற்றி
ஓம் தர்மராஜனே போற்றி
ஓம் தேவலோக வாசனே போற்றி
ஓம் ஆயுள் காரணனே போற்றி
ஓம் மேன்மை தருபவனே போற்றி
ஓம் குழந்தை வடிவினனே போற்றி
ஓம் குளிகன் உருவினனே போற்றி
ஓம் புண்ணிய தோற்றமுடையாய் போற்றி
ஓம் சித்திரகுப்தனே போற்றி

பெளர்ணமி பூஜை, வழிபாடு செய்யும் முறை
 
பெளர்ணமி தினத்தில் வீட்டில் எப்படி பூஜை செய்யவது என்பதையும், சத்திய நாராயணன் பூஜை எப்படி செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.
 
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம்.
பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பெளர்ணமி நாளில் வீட்டிலும்,கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும்.

சத்யநாராயண பூஜை :

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று சந்திரன் பகவான் உதயம் ஆகும் நேரத்தில் இந்த பூஜை செய்வது சிறந்தது. சத்ய நாராயண பூஜை என்பது காக்கும் கடவுளான நாராயணனுக்கு செய்யப்படும் பூஜை ஆகும்.

பெருமாள் எடுத்த பல அவதாரங்களில், சத்ய நாராயண அவதாரமும் ஒன்று. திருமணம், வீடு, மனை வாங்கும் போது, திருவிழா என எல்லாவித நல்ல காரியத்திற்கு முன் இந்த சத்யநாராயண பூஜை நடத்தப்படுகின்றது.

அனைத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த பூஜை நடத்தப்படுகின்றது.

பூஜை செய்யும் முறை:

பூஜை செய்யும் முன் வீட்டிலும், வாசலிலும் கோலமிட்டு, மா இலை தோரணம் கட்டி அலங்கரிக்கவும்.

பூஜை செய்யும் முன் கணவன், மனைவி இருவரும் குளித்துவிட்டு, சந்திரன் உதயம் ஆகும் நேரத்தில் பூஜை செய்ய ஆரம்பிக்கவும்.

வீட்டிம் பூஜை அறையில் உள்ள கடவுள் சிலை, படங்களுக்கு பூக்களை வைத்து, விளக்கேற்றி பூஜையை தொடங்கலாம்.

முதலில் விநாயகர் பூஜை, நவகிரக பூஜை செய்து பின்னர் சத்ய நாராயணர் பூஜை செய்ய வேண்டும்.

கடவுளிடம் தனக்கு என்ன குறை உள்ளது, தனக்கு இந்த அருள் வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் தூபம்,கற்பூர தீபம் காட்டி பூஜை செய்யவும்.

சத்யநாராயணன் பூஜை செய்வதன் மூலம் புத்திர பாக்கியம், பட்டம், பதவி, புகழ், செல்வம், அதிகாரம், அந்தஸ்து போன்ற அனைத்து வித நன்மைகளும் பயக்கும். பல அருள் நமக்கு கிடைக்கும்.

நிவேதனம்:

நாராயணனுக்கு பிடித்தது பால் பாயாசமும், பாசிப் பயறு கஞ்சியும் ஆகும். இதனால் சத்யநாராயணன் பூஜையின் போது இந்த நிவேதனம் படைத்து வழிபடலாம்.

இப்படி ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் பூஜை செய்தால் நாம் நினைத்தது நடக்கும். கடவுளின் அனுகிரகம் கிட்டும்.

சந்திர பூஜை:

அதே போல் பெளர்ணமி அன்று சந்திர பகவானுக்கு பூஜை செய்வது நல்லது. வீட்டின் வெளியே சந்திரன் தெரியும் இடத்தில் நாம் நம்மிடம் வெள்ளி அகல் விளக்கு இருந்தால் அதை ஏற்றலாம்.

அதோடு சந்திரனுக்கு பிடித்த, வெள்ளை நிறத்தில் உள்ள மல்லிகை பூ, வெள்ளை தாமரை ஆகியவற்றை பூஜைக்கு பயன்படுத்தலாம். ஒரு சிறு தாம்புல தட்டில் வாழைப்பழம், பால், கற்கண்டால் செய்த பொங்கல், பால் பாயாசம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்யலாம்.

குபேர விளக்கு ஏற்றி வழிபடும் முறைகள்
 
குபேர விளக்கு ஏற்றி வழிபட்டு நம் வாழ்வில் செல்வமும், வளமும் பெற்று பெருவாழ்வு வாழலாம்.
 
செல்வத்தின் அதிபதியாக குபேரர் விளங்குகிறார். அவரை நாம் வணங்கி வர அவரின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெறலாம். அவரின் அருள் பெற குபேரர் விளக்கில் தீபம் ஏற்றி வழிபடலாம்.

குபேர விளக்கில் தீபம் ஏற்ற சரியான நேரம் :
குபேர விளக்கை ஏற்ற சரியான தினமாக வியாழக் கிழமை பார்க்கப்படுகின்றது. அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணிக்குள் இந்த குபேர விளக்கை ஏற்றி பூஜை செய்வது உகந்தது.

குபேர விளக்கை ஏற்றி எப்படி வழிபட்டு, மகாலட்சுமியை நம் வீட்டிற்கு அழைப்பது என்பது குறித்து இனி பார்ப்போம்..

குபேர விளக்கை ஏற்றும் முன் செய்ய வேண்டியவை :
குபேரருக்கு விருப்பமான வியாழக்கிழமை தினத்தில் காலையில் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

அன்று மாலை வீட்டின் வாசலில் செம்மண் பட்டை இட்டு அலங்காரம் செய்ய வேண்டும்.

அதன் மீது பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும்.

வாசல் நிலைப்படிக்கு சந்தனம் தெளித்து, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.

அதன் பின்னர் கரும்புள்ளி இல்லாத ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்து, அதை இரண்டாகாக வெட்டவும். ஒரு
துண்டில் மஞ்சள், மற்றொரு துண்டில் குங்குமம் தடவி, நிலைப்படிக்கு இருபுறமும் ஒவ்வொன்றை வைக்கவும்.

அதன் பின் நிலைப்படியின் இருபக்கமும் மலர்களை வைக்கவும்.

குபேர விளக்கு ஏற்றுதல் :

விளக்கு ஏற்றும் போது வீட்டினுள், வாசலின் முன் நின்றபடி, நமது இடது புறத்தில், ஒரு மரப்பலகை அல்லது தட்டி நன்றாக சுத்தம் செய்த குபேர விளக்கை வைக்கவும்.

அதற்கு மஞ்சள் குங்குமம் வைக்கவும்.

அதில் நல்லெண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை எடுத்து, ஒன்றாக சேர்த்து ஒரு திரியாக்கி குபேர விளக்கில் போடவும்.

பின்னர் வீட்டில் எப்போதும் வீட்டில் விளக்கேற்றும் பூஜை அறையில் விளக்கேற்றிய உடன், குபேர விளக்கிலும் தீபத்தை ஏற்ற வேண்டும்.

குபேர தீபத்தை குபேரன் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டே ஏற்றலாம்.

குபேரன் காயத்ரி மந்திரம்
ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவ ணாய தீமஹி!
தந்நோ குபேர ப்ரசோதயாத்

இப்படி செய்வதால் நமக்கு குபேரரின் அருள் கிடைத்து குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தொடர்ந்து குபேர விளக்கை ஏற்றி வழிபட்டு வர குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்சினை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும்.

பெளர்ணமி பூஜை
 
பெளர்ணமி தினத்தில் வீட்டில் எப்படி பூஜை செய்யவது என்பதையும், சத்திய நாராயணன் பூஜை எப்படி செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.
 
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம்.
பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பெளர்ணமி நாளில் வீட்டிலும்,கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும்.

சத்யநாராயண பூஜை :

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று சந்திரன் பகவான் உதயம் ஆகும் நேரத்தில் இந்த பூஜை செய்வது சிறந்தது. சத்ய நாராயண பூஜை என்பது காக்கும் கடவுளான நாராயணனுக்கு செய்யப்படும் பூஜை ஆகும்.

பெருமாள் எடுத்த பல அவதாரங்களில், சத்ய நாராயண அவதாரமும் ஒன்று. திருமணம், வீடு, மனை வாங்கும் போது, திருவிழா என எல்லாவித நல்ல காரியத்திற்கு முன் இந்த சத்யநாராயண பூஜை நடத்தப்படுகின்றது.

அனைத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த பூஜை நடத்தப்படுகின்றது.

பூஜை செய்யும் முறை:

பூஜை செய்யும் முன் வீட்டிலும், வாசலிலும் கோலமிட்டு, மா இலை தோரணம் கட்டி அலங்கரிக்கவும்.

பூஜை செய்யும் முன் கணவன், மனைவி இருவரும் குளித்துவிட்டு, சந்திரன் உதயம் ஆகும் நேரத்தில் பூஜை செய்ய ஆரம்பிக்கவும்.

வீட்டிம் பூஜை அறையில் உள்ள கடவுள் சிலை, படங்களுக்கு பூக்களை வைத்து, விளக்கேற்றி பூஜையை தொடங்கலாம்.
முதலில் விநாயகர் பூஜை, நவகிரக பூஜை செய்து பின்னர் சத்ய நாராயணர் பூஜை செய்ய வேண்டும்.

கடவுளிடம் தனக்கு என்ன குறை உள்ளது, தனக்கு இந்த அருள் வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் தூபம்,கற்பூர தீபம் காட்டி பூஜை செய்யவும்.

சத்யநாராயணன் பூஜை செய்வதன் மூலம் புத்திர பாக்கியம், பட்டம், பதவி, புகழ், செல்வம், அதிகாரம், அந்தஸ்து போன்ற அனைத்து வித நன்மைகளும் பயக்கும். பல அருள் நமக்கு கிடைக்கும்.

நிவேதனம்:

நாராயணனுக்கு பிடித்தது பால் பாயாசமும், பாசிப் பயறு கஞ்சியும் ஆகும். இதனால் சத்யநாராயணன் பூஜையின் போது இந்த நிவேதனம் படைத்து வழிபடலாம்.

இப்படி ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் பூஜை செய்தால் நாம் நினைத்தது நடக்கும். கடவுளின் அனுகிரகம் கிட்டும்.

சந்திர பூஜை:

அதே போல் பெளர்ணமி அன்று சந்திர பகவானுக்கு பூஜை செய்வது நல்லது. வீட்டின் வெளியே சந்திரன் தெரியும் இடத்தில் நாம் நம்மிடம் வெள்ளி அகல் விளக்கு இருந்தால் அதை ஏற்றலாம்.

அதோடு சந்திரனுக்கு பிடித்த, வெள்ளை நிறத்தில் உள்ள மல்லிகை பூ, வெள்ளை தாமரை ஆகியவற்றை பூஜைக்கு பயன்படுத்தலாம். ஒரு சிறு தாம்புல தட்டில் வாழைப்பழம், பால், கற்கண்டால் செய்த பொங்கல், பால் பாயாசம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்யலாம்.

அஷ்ட லட்சுமி மகாலட்சுமி ஸ்லோகம்
 
அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், அஸ்டலட்சுமி மந்திரத்தை இங்கு பார்ப்போம். ஆதிலட்சுமி, தனலட்சுமி,தானியலட்சுமி, கயலட்சுமி,சந்தானலட்சுமி, வீரலட்சுமி,விஜயலட்சுமி, வித்யாலட்சுமி ஆகிய லட்சுமியின் வடிவங்களுக்கான வழிபாட்டு மந்திரங்கள்...
 
செல்வத்தை மட்டுமல்ல அனைத்து வகை தன தான்ய ஐஸ்வர்ய சம்பத்துக்களை அள்ளித்தருபவள் மகாலட்சுமி. அவரின் அஷ்ட வடிவங்கள் ஆதிலட்சுமி, தனலட்சுமி,தானியலட்சுமி, கயலட்சுமி,சந்தானலட்சுமி, வீரலட்சுமி,விஜயலட்சுமி, வித்யாலட்சுமி.

இவர்களுக்கான வழிபாட்டு ஸ்தோத்திரத்தை இங்கு பார்ப்போம்.

1. ஆதிலட்சுமி

ஸூமநஸ வந்தித ஸூந்தரி மாதவி
சந்த்ர சகோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி
மஞ்சுள பாக்ஷிணி வேதநுதே
பங்கஜ வாஸினி தேவஸூ பூஜித
ஸத்குண வர்ஷினி சாந்தியுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஆதிலெக்ஷ்மி ஸதா பாலயமாம்

2. சந்தான லட்சுமி

அயிதக வாஹினி மோஹினி சக்ரிணி
ராக விவர்த்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷினி
ஸ்வர ஸப்த பூஷித கானறுதே
சகல ஸூராஸூர தேவ முநீஸ்வர
மாநவ வந்தித பாத யுதே
ஜெய ஜெய ஹே மது ஸூதன காமினி
சந்தான லக்ஷ்மி பாலயமாம்

3. கஜலட்சுமி

ஜய ஜய துர்கதி நாசினி காமினி
சர்வ பலப்ரத சாஸ்த்ரமயே
ரதகஜ துரசு பதாதி சமாவ்ருத
பரிஜன மண்டித லோகநுதே
ஹரிஹர ப்ரம்ம ஸூ பூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
கஜலக்ஷ்மி ரூபணே பாலயமாம்

4. தனலட்சுமி

திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸூ பூர்ண மயே
கும கும குங்கும குங்கும குங்கும
சங்க நிநாத ஸூவாத் ய நுதே
வேத புராணே திஹாச ஸூ பூஜித
வைதிக மார்க ப்ரதச்ச யுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி

தனலக்ஷ்மி ரூபணே பாலயமாம்

5. தான்ய லட்சுமி

அபிகலி கல்மஷ நாசினி காமினி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரநுதே
மங்கள தாயிணி அம்புஜ வாஷினி
தேவ கணார்ச்சித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தான்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்
6. விஜய லட்சுமி

ஜய கமலாசனி சத்கதி தாயினி
ஞான விகாஸினி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூசர
பூஷித வாஸித வாத்ய நுதே
கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித
சங்கர தேசித மான்யபதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
விஜயலக்ஷ்மி ஸதா பாலயமாம்

7. வித்யா லட்சுமி

ப்ரணத ஸூரேஸ்வரி பாரதி பார்வதி
சோக விநாசினி ரத்னமயே

மணிமய பூக்ஷித கர்ண விபூஷண
சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவநிதி தாயினி கலிகல ஹாரிணி
காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
வித்யாலக்ஷ்மி ஸதா பாலயமாம்

8. தைரிய லட்சுமி

ஜயவர வர்ணனி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸூரகண பூஜிய சீ க்ர பலப்ரத
ஞான விகாஸினி சாஸ்த்ர நுதே
பவபய ஹாரிணி பாப விமோசனி
சாது ஜநாச்ரித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தைர்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்

துளசி பூஜை 

துளசி செடியின் மருத்துவ குணங்கள் நாம் அறிந்திருப்போம். ஆனால் துளசி செடி எப்படி வந்தது என புராணங்கள் கூறுகின்றன. துளசி செடியின் முக்கியத்துவம், அதன் மகிமை குறித்து இங்கு பார்ப்போம்...
 
துளசி செடியை கடவுளாக பார்ப்பதும், அதற்கு பூஜை செய்வதும் இந்து மதத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது.

துளசி எப்படி வந்தது?

முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து இறவாத வரம் தரும் மருந்தாகிய அமிர்தம் பெற முயன்றனர்.

அப்போது அமிர்தம் வெளியே வருவதற்கு முன்னர் அந்த பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, , காமதேனு, சந்திரன், ஐராவதம் மக?

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.