Breaking News :

Thursday, November 21
.

சிவனின் மூன்று மகள்கள் யார்?


சிவ பெருமானுக்கு கணேசன், முருகன், ஐயப்பன் என மூன்று மகன்கள் இருப்பது அனைவரும் அறிந்தது. பல இடங்களில் வழிபட்டும் வருகிறது.

ஆனால் அவரின் மூன்று மகள்கள் பற்றி அந்தளவுக்குப் பெரியளவில் பேசப்படுவதில்லை. வாருங்கள் சிவ பெருமானின் மூன்று மகள்கள் குறித்து இங்கு பார்ப்போம்...

இந்து மதத்தின் மும்மூர்த்திகளாக படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் மகா விஷ்ணு, அழிக்கும் கடவுளாக சிவன் உள்ளார். பரம்பொருளாக இருக்கும் சிவ பெருமான் அழிக்கும் செயலை மட்டும் செய்யாமல், மக்களை காப்பாற்றுதல், அவர்கள் செய்த தவறுகளுக்கான தக்க தண்டன் கொடுத்தல் என மிக முக்கிய செயல்களை செய்கிறார்.

பரம்பொருளான அவர் குறித்து நாம் அறிந்தது மிகவும் குறைவுதான். அவருக்கு விநாயகர், முருகப்பெருமான், ஐய்யப்பன் ஆகிய மூன்று மகன்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அவருக்கு மூன்று மகள்கள் இருப்பதும், அவர்களின் சிறப்பு குறித்து அவ்வளவாக பேசப்படுவதில்லை.

மூன்று மகள்கள் :
1. அசோக சுந்தரி ,
2. ஜோதி ,
3. வாசுகி .
ஆகிய மூன்று மகள்கள் சிவ பெருமானுக்கு உள்ளனர்.

அசோக சுந்தரி:

அசோக சுந்தரி குறித்து பத்ம புராணத்தில், சிவன் - பார்வதி தம்பதிக்கு மகளாக அசோக சுந்தரி வருணிக்கப்பட்டுள்ளார். மேலும் அசோக சுந்தரி நகுசன் என்பவரை மணந்து கொண்டதாகவும், அவர்களுக்கு ‘யயாதி’ என்ற குழந்தையும் இருப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என ஏங்கிய உமயவளின் சோகத்தை நீக்க பிறந்த அழகி (சுந்தரி) என்பதால் அசோக சுந்தரி என பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது.

அசோக சுந்தரியை காளி தெய்வமாகவும் சொல்லப்படுகின்றது. காளி தேவி (அசோக சுந்தரி) சிவபெருமானின் மகள் என அப்பர் சுவாமிகளும், நம்பியாண்டார் நம்பி பாடிய பாடல்களில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் கேரளாவில் சிவராத்திரியாகக் காளியை காணும் வழக்கம் இன்றும் உண்டு.
சிவ பெருமான் விநாயகரின் தலையை கொய்த போது, பயத்தில் அசோக சுந்தரி உப்பு நிறைந்த சாக்கில் ஒழிந்து கொண்டதாகவும், அதனால் அசோக சுந்தரியின் தேகம் திவ்ய உப்பு சுவை கொண்டதாக மாறியதாக கூறப்படுகின்றது. இவர் குஜராத்தில் பெரிய அளவில் அறியப்பட்டு வணங்கப்படுகிறார். ஆனால் இந்தியாவின் வேறு பகுதிகளில் அவ்வளவாக அறியப்படவில்லை.

ஜோதி:

ஜோதி என்றால் ஒளி. அவரின் பெயராலேயே அறியப்படுகின்றார். ஜோதியின் பிறப்பிற்குப் பின் இரண்டு கதைகள் கூறப்படுகின்றது.

முதல் கதையில் ஜோதி சிவபெருமானின் ஒளி வட்டத்திலிருந்து பிறந்தார் என்றும், அவர் சிவனின் உடல் வழிபாடு எனவும் கூறப்படுகிறது. மற்றொரு கதை பார்வதி தேவியின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட ஜோதியிலிருந்து பிறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஜோதியை ஜ்வாலாமுகி என்ற பெயரில் தமிழகத்தில் பல கோயில்களில் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.

வாசுகி:

வாசுகி என்பவர் அனைத்து கோயில்களிலும் வணங்கப்படும் பாம்பு தெய்வமாக உள்ளார். இவர் சிவ பெருமானின் மகள், ஆனால் பார்வதி தேவியின் மகள் இல்லை. ஏனெனில் பாம்புகளின் கடவுளாகிய கத்ரு செதுக்கிய சிலையின் மீது சிவ பெருமானின் உயிர் அணுக்கள் விழுந்ததால் வாசுகி பிறந்ததாக கூறப்படுகின்றது.

சிவ பெருமான் ஆலகால விசத்தைக் குடித்தபோது, அவரை அந்த விஷத்திலிருந்து விடுவித்ததும் இந்த வாசுகி தான். வாசுகிக்கு மானசா என்ற பெயரும் உண்டு. இவரின் அதீத கோபத்தின் காரணத்தால், சிவ பெருமானால் நிராகரிக்கப்பட்டார். இவர் மேற்கு வங்கத்தில் பாம்பின் வடிவில் வணங்கப்பட்டு வருகின்றார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.