ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை ப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே !
கணபதிக்கு நான்கு கரங்களோடு தும்பிக்கையைச் சேர்த்தால் ஐந்து கரங்கள் இருப்பதால் ஐந்து கரத்தன் எனப்படுகிறார். பாடலும் ஐந்து கரத்தனை என்று ஆரம்பிக்கிறது.
அடுத்து அவருக்கு யானை முகம் இருப்பதால் யானை முகத்தனை என்று வருகிறது. அவருடைய தந்தம் சந்திரனின் இளம் பிறை போல இருக்கிறது .எனவே "இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை" என வருகிறது. இவர் பரமேச்வர புத்திரன் ஆனபடியால் நந்தி மகன் தன்னை என்று போற்றப் படுகிறார்.
நந்தி என்பது சிவனின் ஒரு நாமம்.நமக்கெல்லாம் ஞானத்தைக் கொடுக்கும் தெய்வம் ஞானமயமாகவு ம் ஞானக் கொழுந்தாகவும் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை தானே? ஆகவே "ஞானக்கொழுந்தினை" எனப்படுகிறார்கள்.இப்படிப்பட்ட மூர்த்தியை சிந்தையில்/புத்தியில் வைத்து அவனது பாதங்களைப் போற்றி வணங்குகின்றேன்.
அடியேன் மூலரின் அருள்கொண்டே மூலத்தில் உள்ள மூலவனை ஆராய்ந்ததை விளக்கமுடன் விளக்கி விளக்கின் நெய்போல் உருக விழைகிறேன் .
ஐந்து கரமென்பது ->
முதல் கரம் -> மும்மலங்கள் இருவினையொப்பு , மலபரிபாக , சத்திநிபாக அதாவது ஆணவம், கன்மம் , மாயையை நீக்க உதவும் கரம்.
இரண்டாம் கரம் -> முப்பத்தாறு தத்துவங்கள் தொன்னிற்றாராக விரிந்து காணப்படும் , இவைகளை வெட்ட அருளும் கரம்.
மூன்றாம் கரம் -> மூன்று அவஸ்தைகளை ( கேவல, சகல மற்றும் சுத்த அவஸ்தைகள்) உணரச்செய்து தன்னையறிய பக்குவப்பட அருளும் கரம்.
நான்காம் கரம் -> ஸ்தூல, சூட்சும , அதி சூட்சும, காரண அதி காரண தேகங்களிற் கு தேவையான ஞானமாகிய பலவகையான அட்சரங்களை அருளும் கரம்.
ஐந்தாம் கரம் -> வாசி அருளி அதைக் கொண்டு குண்டலினி எனும் மகாசக்தியை தூண்டும் தந்திக் கரம்.
சாதகன் இவரின் இந்த ஐந்து கரங்களின் உதவிக் கொண்டுதான் மேவிய ஞானத்தை அறிய முயல்வான். எனவே இவரின் கரத்தின் மகத்துவம் இங்கு அழகாகவும் அழுத்தமாகவும் கூறப்பட்டுள்ளது.
யானை முகமென்பது -> குண்டலி உறங்கும் பொழுது தலைகீழாய் தொங்கும் வாழைபூ போல் அல்லது யானையின் தும்பிக்கை போல் காட்சியளிப்பதால், இங்கு வீற்றுள்ள இறையின் திருமுகம் யானையின் முகம் என்று விளக்குகிறார்.
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை -> இந்து என்பது சந்திரனாகி ய இட நாடியைக் குறிப்பது.எயிறு என்பது தந்தத்தைக் குறிக்கும் . இறை அமர்ந்திரு க்கும் இடத்தில் அந்த நாடியானது பிறை சந்திரன் போல் வளைந்து அவரது திரு முகத்தில் தந்தமாக அமைகிறது. எனவே திருமுகத்தில் தந்தியுடையோன் யென்று அழைக்கப்படடுகிறார்.
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் -> நந்தி என்பது குண்டலினி எழும் பொது பிறக்கும் ஈசனின் ஆண்சத்தி. இந்த சத்தி எழும் பொழுதே கணபதி எனும் மகன் மூலதாரத்தி ல் உணரப்படுகி றார்.அப்பொழுது அவர் ஞானத்தின் உறைவிடமாய் காட்சியளிக்கிறார் என்பதால் ஞானக் கொழுந்து என்று மூலர் வர்ணிக்கிறார்.
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே -> புந்தி என்பதற்கு அறிவு என்று பொருள். மூலாதாரமாகிய அடியில் அதாவத மலவாய் உள்ள இடத்தில் வீற்றிக்கு ம் இறையை அறிவின் பயனாக மூலத்தில் வைத்து உணருகிறேன் என்றுரைக்கிறார்.