Breaking News :

Thursday, November 21
.

தமிழ் கடவுள் முருகன் வரலாறு


முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன் -

பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். 

அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.

 

 ⭕ இவர் கணங்களின் அதிபதியான

கணபதிக்கு தம்பியாக கருதப்படுகிறார். மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.

 

⭕ தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இவரை அதிகம் வழிபடுபவர்கள்

தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.  இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார்.  பண்டைய காலத்தில்

கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது.

 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

                         #முருகபுராணம்

 

%#பிறப்பு

 

 🌺 பிரம்மனின் பேத்தியும் தட்சனின் மகளுமான தாட்சாயிணியை சிவபெருமான் மணந்தார். ஒருமுறை தட்சன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமல் அவமானப்படுத்தினார். இதனால் கோபமடைந்த தாட்சாயிணி அக்னியில் விழுந்து உயிர் துறந்தார். பிறகு சிவபெருமான் தம் அவதாரமான வீரபத்ரனை அனுப்பி யாகசாலையையும் தட்சனையும் அழித்தார். பிறகு சிவபெருமான் தியானத்தி்ல் ஈடுபட ஆரம்பித்தார்.

 

 🌺தாரகன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் சிவபெருமானின் புதல்வனைத் தவிர வேறு எவராலும் தமக்கு அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர்.

 

🌺அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனை தகனம் செய்தது. பிறகு அந்த தீப்பொறி சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது.

கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர்.  இதனால் அவர் #கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் #ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டு கண்களை உடையவர்.

 

                        #ஞானப்பழம்

 

🍑ஒருநாள் நாரதர், சிவன் மற்றும் பார்வதி ஆகியோரிடம் ஞானப்பழத்தைக் கொடுத்தார். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார். முருகன் தம் மயில் வாகனம் கொண்டு உலகைச் சுற்ற புறப்பட்டார். ஆனால் விநாயகர் தம் அறிவுக்கூர்மையால் தாய் தந்தையரே உலகம் என்று கருதி அவர்களை மும்முறைை சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றார்.

 

🍑இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது. மகிழ்ந்த முருகன் தமிழகத்திலேயே தங்கிவிட்டார் இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது.

பன்னிருகரங்களின் பணிகள்

முருகனின் பன்னிருகரங்களில் இரு கரங்கள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன. மூன்றாவது கை அங்குசத்தினைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் பதிந்திருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அரும் பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கிறது. பத்தாவது கை மணியை ஒலிக்கிறது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.

 

           #தெய்வானையுடன்திருமணம்

 

 🔥முருகப்பெருமானின் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பது. அதன்படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து,

சூரபத்மனைஅழித்து , அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.

 

🔥சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையொட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான்.

அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் -

தெய்வானை திருமணம்

திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

 

🌺 வழிபாட்டு முறை🙏🙏🙏

~~~~~~~~~~~~~~~~~~~~~

 ♻அசைவ உணவை உட்கொண்டவர்களின் கடவுளாக இருந்த முருகனை வேலன் என்று மக்கள் வழிபட்டதாகவும், ஆட்டு ரத்தத்துடன் கலந்த தினை மாவை அவருக்குப் படைத்ததாகவும், அதன் பின் வந்த சமஸ்கிருத வழிபாட்டு முறையில் முருகன் வழிபாடு சைவ வழிபாடாக மாறியதாகவும் முனைவர் சண்முகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.

 

                       🌺விழாக்கள்

                      *****************

 ♻கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் இவரது ஜென்ம நட்சத்திர தினமாக கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி கந்த சஷ்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் மிக முக்கியமான விழா ஆகும்

 

              #நூல்கள்

              ************

 🌹 #கந்தபுராணம் என்னும் பாடற்தொகுதி கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இது முருகப்பெருமானின் வரலாற்றை எடுத்து உரைக்கிறது. சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப்படை , முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனது ஆறுபடை வீடுகளையும் பாடும் காவியம் ஆகும்.

மேலும் சண்முகக் கவசம் , திருப்புகழ் ,

கந்தர் களிவெண்பா , குமரவேல் பதிற்றுப்பத்தந்தாதி, சஷ்டி கவசம் , கந்தர் அனுபூதி போன்ற நூல்களும் முருகனின் பெருமை சொல்வன.

 

🌺 முருகன் குறித்த பழமொழிகள்

 

⭐வேலை வணங்குவதே வேலை.

 

⭐சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை;

சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.

 

⭐வயலூர் இருக்க அயலூர் தேவையா?

 

⭐காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.

அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?

 

⭐முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.

 

⭐சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)

 

⭐கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.

 

⭐கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்

 

⭐பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?

 

⭐சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.

 

⭐செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?

 

⭐திருத்தணி முருகன் வழித்துணை வருவான்

வேலனுக்கு ஆனை சாட்சி.

 

⭐வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.

 

⭐செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.

 

⭐கந்தன் பாதம் கனவிலும் காக்கும்.

 

⭐கந்தசட்டி கவசம் ”விந்து விந்து மயிலோன் விந்து, முந்து முந்து முருகவேள் முந்து”

 

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

 

🌺 முருகன் ஆலய வழிபாடுகள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 🙏தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பிற இடங்களிலும் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வகையான வழிபாடுகள், இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:

காவடி எடுத்தல்

அலகு குத்துதல்

பால்குடம் எடுத்தல்

முடி இறக்குதல் (மொட்டை போட்டுக் கொள்ள நேர்ந்து அதன்படி செய்தல்)

பாத யாத்திரை

முதன்மைக் கட்டுரை: பத்துமலை

திருமுருகன் பூண்டி தேர் திருவிழா

 

🌺 முருகனின் அடியவர்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~

அகத்தியர்

 

நக்கீரர்

 

ஔவையார்

 

அருணகிரிநாதர்

 

குமரகுருபரர்

 

பாம்பன் சுவாமிகள்

 

கிருபானந்தவாரியார்

 

கோவில்கள்

 

#முருகன்கோவில்கள், முருக வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் அதிகம் காணப்படுகின்றது. வடபழனி முருகன் கோவில், தேனாம்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில், மயிலை சிங்காரவேலன், பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவில், குமரக்குன்று, கந்தகோட்டம், குன்றத்தூர் என தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோவி்ல்கள் பல அமைந்துள்ளன.

 

#அறுபடைவீடுகள்

 

🔥முதன்மைக் கட்டுரை: அறுபடைவீடுகள்

திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான

தெய்வானையை மணந்த திருத்தலமிது.

திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.

 

🔥பழநி - மாங்கனிக்காக தமையன்

விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.

 

🔥சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.

 

🔥திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.

 

🔥பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது.

 

🔥வைகைப் பொன்மலை என்கிற செம்மறி கடாவை அடக்கிய தலம் அனுமனுக்கு அருள்புரிந்தது.

 

❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄

🎡 மலேசியா

****************

முருகனின் சிலை, மலேசியா

மலேசியா நாட்டில் பத்து குகையில் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூசம் முதலிய திருவிழாக்கள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.

 

🎡 தமிழ்

***********

தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கடவுளாக முருகப்பெருமான் குறிப்பிடப்படுகின்றார். "முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்" என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார்.

 

முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

 

தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி

 

எடுப்பதுதான். இந்தக் காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா?

 

 ⭕அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து , தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

 

⭕அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.

 

⭕இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

 

⭕ஆனால் அந்த சிறுவன் இந்த மலை 'தனக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.

இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.

 

⭕அப்போது முதல் முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் சொல்கிறார்கள்.

எது எப்படியோ? ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது என்பது மட்டும் உண்மை.முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?

 

♻ முருகக் கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே?

 

🍁 முருகன்

~~~~~~~~~~

முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

 

மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று.  இம்  மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

 

🍁சரவண பவன்

~~~~~~~~~~~~~~

சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன். என்றும் பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்துவீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம்,ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.

 

சகரம் என்றால் உண்மை, ரகரம் என்றால் விஷய நீக்கம், அகரம் என்றால் நித்யதிருப்தி, ணக்ரம் என்றால் நிர்விடயமம், பகரம் பாவ நீக்கம் வகரம் என்றால் ஆன்ம் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள்.

 

🍁ஆறுமுகம்

~~~~~~~~~~

சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோ முகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது.

 

சிவத்திற்குரிய தற்புருடம், அகோரம், வாமதேவம், சக்தியோஜதம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள். இத்துடன் சக்தியின் அதோமுகமும் சேர்ந்தது. முருகன் சிவ ஸ்வரூபமாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் சேர்ந்து விளங்குகிறான் என்பதையே இது உணர்த்துகிறது. திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்று சொல்பவர்களும் உண்டு.

 

🍁 குகன்

~~~~~~~~

மனமாகிய குகையில் இருப்பவன். தகராகாசத்தில் வசிப்பவன். அடியார் மனக் கோவிலில் தங்கிடுபவன்.

 

🍁குமாரன்

~~~~~~~~~~~

கு எனும் அறியாமையாகிய மனப்பிணியை மாறன் அழிப்பதால் குமாரன் ஆனான் என்பார்கள். ஒரு சிலர் கு என்றால் அறுவறுப்பு, மாரன் என்றால் நாசம் செய்பவன் என்றும் பொருள் சொல்கிறார்கள்.

 

🍁கந்தன்

~~~~~~~~~

கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது. ஸ்கந்தம் என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலிமையுடையவன் என்றும் சொல்கிறார்கள்.

 

🍁விசாகன்

~~~~~~~~~~

விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றின் நடுவில் உள்ளது ஒளி மிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள்.

 

🍁வேலன்

~~~~~~~~~~

வேலன் என்பது வெற்றியத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர். முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான்.

 

🍁குருநாதன்

~~~~~~~~~~~

பிரம்மவித்யா மரபுகளை விளக்கும் ஆசிரியன். சிவனுக்கும் அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும் உபதேசித்தவன் என்பதால் குருநாதன் ஆனார்.

 

🍁சுப்பிரமணியம்

~~~~~~~~~~~~~~

சு என்றால் ஆனந்தம். பிரஹ்ம்-பரவஸ்துந்ய- அதனின்றும் பிரகாசிப்பது முருகன். இன்பமும் ஒளியும் வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம். புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்பிரமணியன். மேலும் விசுத்தி என்கிற ஸ்தானத்தில் ஆறுதலையுடைய நாடியாக அசையப் பெற்றிருப்பதற்கும் சுப்பிரமணியம் என்று பெயர். ஆறு ஆதாரங்களை சண்முகம் என்றும் ஆறுதலாகிய உள்ளமே சுப்பிரமணியம் என்றும் சொல்லப்படுகிறது.

 

🍁வேறு சில பெயர்கள்

~~~~~~~~~~~~~~~~~~

🌹கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும், 

 

🌹அப்பெண்களுக்கு வாகுலை என்ற மற்றொரு பெயர் உண்டென்பதால் வாகுலேயன் என்றும்  

 

🌹ஆண்டிக் கோலத்தில் ஞானப்பழமாக விளங்குவதால் பழநி என்றும்  

 

🌹 தனது அடியவர்களை உற்ற வேளையில் வந்து காக்கும் சிறப்பால் வேளைக்காரன் என்றும் சிவன், சக்தி, திருமால் மூவரையும் இணைக்கும் தெய்வமாக இருப்பதால் மால் முருகன் என்றும் பெயர்கள் வழங்கப்படுகிறது.

 

இது தவிர இன்னும் எத்தனையோ பெயர்கள் முருகனுக்கு வழங்கப்படுகிறது. இந்த முருகக் கடகடவுள் தமிழர்களால் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

♻ முருகனின் 125 தமிழ் பெயர்கள்?

 

🍑 முருகன்பெயர்கள்

**************************

1.சக்திபாலன்,

2.சரவணன்,

3.சுப்ரமண்யன்,

4.குருபரன்,

5.கார்த்திகேயன்,

6.சுவாமிநாதன்,

7.தண்டபானி,

8.குக அமுதன்,

9.பாலசுப்ரமணியம்,

10.நிமலன்,

11.உதயகுமாரன்,

12.பரமகுரு,

13.உமைபாலன்,

14.தமிழ்செல்வன்,

15.சுதாகரன்

16.சத்குணசீலன்,

17.சந்திரமுகன்,

18.அமரேசன்,

19.மயூரவாஹனன்,

 20.செந்தில்குமார்,

21.தணிகைவேலன்,

22.குகானந்தன்,

23.பழனிநாதன்,

24.தேவசேனாபதி,

25.தீஷிதன்,

26.கிருபாகரன்,

27.பூபாலன்,

28.சண்முகம்,

29.உத்தமசீலன்,

 30.குருசாமி

31.திருஆறுமுகம்,

32.ஜெயபாலன்,

33.சந்திரகாந்தன்,

34.பிரபாகரன்,

35.சௌந்தரீகன்,

36.வேல்முருகன்,

37.பரமபரன்,

38.வேலய்யா,

39.தனபாலன்,

40.படையப்பன்,

41.கருணாகரன்,

42.சேனாபதி,

43.குகன்,

44.சித்தன்,

45.சைலொளிபவன்

46.கருணாலயன்

47.திரிபுரபவன்,

48.பேரழகன்,

49.கந்தவேல்,

50.விசாகனன்,

51.சிவகுமார்,

52.ரத்னதீபன்,

53.லோகநாதன்,

54.தீனரீசன்,

55.சண்முகலிங்கம்,

56.குமரகுரு,

57.முத்துக்குமரன்,

58.அழகப்பன்,

59.தமிழ்வேல்,

60.மருதமலை,

61.சுசிகரன்,

61.கிரிராஜன்,

62.குமரன்,

63.தயாகரன்,

64.ஞானவேல்,

65.சிவகார்த்திக்,

66.குஞ்சரிமணாளன்,

67.முருகவேல்,

68.குணாதரன்,

69.அமுதன்,

70.செங்கதிர்செல்வன்,

71.பவன்கந்தன்,

72.திருமுகம்,

73.கதிர்காமன்,

74.வெற்றிவேல்,

75.ஸ்கந்தகுரு

76.பாலமுருகன்,

77.மனோதீதன்,

78.சிஷிவாகனன்,

79.இந்திரமருகன்,

80.செவ்வேல்,

81.மயில்வீரா,

82.குருநாதன்,

83.பழனிச்சாமி,

84.திருச்செந்தில்,

85.சங்கர்குமார்,

86.சூரவேல்,

87.குருமூர்த்தி,

88.சுகிர்தன்,

89.பவன்,

90.கந்தசாமி

91.ஆறுமுகவேலன்,

92.வைரவேல்,

93.அன்பழகன்,

94.முத்தப்பன்,

95.சரவணபவன்,

96.செல்வவேல்,

97.கிரிசலன்,

98.குலிசாயுதன்,

99.அழகன்,

100. தண்ணீர்மலயன்,

101.ராஜவேல்,

102.மயில்பிரீதன்,

103.நாதரூபன்,

104.மாலவன்மருகன்,

105. ஜெயகுமார்

106.செந்தில்வேல்,

107.தங்கவேல்,

108.முத்துவேல்,

109.பழனிவேல்,

110.கதிர்வேல்,

111.ராஜசுப்ரமணியம்,

112.மயூரகந்தன்,

113.சுகதீபன்,

114.குமரேசன்,

115.சுப்பய்யா,

116.கார்த்திக்,

117.சக்திதரன்,

118. முத்துக் குமரன்,

119.வேலவன்,

120.கதிர் வேலன்,

121. விசாகன்,

122. கந்தன்,

123. விசாகன்,

124. குமாரன்,

125.அக்னி பூ

 

🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊

#முருகு என்றால் அழகு என்று பொருள். மாறாத இளமையோடும், பலர் வியக்கும் அழகோடும், பேரின்ப நறுமணத்தோடும், அழியா தெய்வத்தன்மையோடும் விளங்கும் முருகனுக்கு பார்போற்றும் பல பெயர்கள் உள்ளன. அந்த பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் அற்புதமான அர்த்தங்களும் உள்ளன.

                முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.

 

♻உதாரணத்திற்கு,

 

விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் #விசாகன்.

 

அக்கினியில் தோன்றியதால் அக்னி பூ

 

கங்கை தன் கரங்களால் முருகனின் தீப்பிழம்பு கருவை ஏந்தியதால் #கங்காதரன்.

 

சரவண பொய்கையில் மிதந்ததால் #சரவணபவன்.

 

கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் #கார்த்திகேயன்.

 

அறுவரும் இணைத்து ஒருவராக மாறியதால் #கந்தன்

 

ஆறுமுகம் கொண்டதால் #ஆறுமுகன் / சண்முகன்

 

                    🍁வேறு பெயர்கள்🍁

                     **************************

🍒சேயோன்

அயிலவன்-வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.

 

🍒ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.

முருகன் - அழகுடையவன்.

 

🍒குமரன் - இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்.

 

🍒குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .

 

🍒காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன்.

 

🍒சரவணபவன் - சரவணப்பொய்கையில் உதித்தவன்.

 

🍒சேனாதிபதி - சேனைகளின் தலைவன்.

 

🍒வேலன் - வேலினை ஏந்தியவன்.

 

🍒சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்.

 

🍒கந்தன் - ஒன்று சேர்க்கப்பட்டவன்.

 

🍒கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.

 

🍒சண்முகன் - ஆறு முகங்களை உடையவன்.

 

🍒தண்டாயுத பாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்.

 

🍒வடிவேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.

 

🍒விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.

 

🍒சுப்பிரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.

 

🍒மயில்வாகனன்

 

🍒ஆறுபடை வீடுடையோன்

 

🍒வள்ளற்பெருமான்

 

🍒சோமாஸ்கந்தன்

 

🍒முத்தையன்

 

🍒சேந்தன்

 

விசாகன்

 

🍒சுரேஷன்

 

🍒செவ்வேள்

 

🍒கடம்பன்

 

🍒சிவகுமரன் - சிவனுடைய மகன்.

 

🍒வேலாயுதன், சிங்கார வேலன் - வேல் என்ற ஆயுதத்தினை உடையவன்

 

🍒ஆண்டியப்பன் - ஆண்டியாக நின்றவன்

கந்தசாமி

 

🍒செந்தில்நாதன்

 

🍒வேந்தன் - மலை அரசன் , மலை வேந்தன்

போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.

 

இப்படி தமிழ்க்கடவுள் முருகன் பெயர்கள் அனைத்திற்கு பின்பு ஒரு அர்த்தம் ஒளிந்துள்ளது.

 

நன்றி திரு Suresh Kumaran

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.