திரேதாயுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாக அவதாரம் செய்த சிவபெருமானை மீண்டும் ஒருமுறை பிடிக்க முயன்ற சம்பவம் ராமாயணத்தில் வருகிறது.
ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன்.
இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொ ன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களை யும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன.
ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோரு க்கும் ஆசி கூறிக் கொண்டு இருந்தனர்.
அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அதன்மீது ஜெய்ஸ்ரீராம் என்ற அக்ஷரங்களை செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.
அப்போது அங்கே சனீஸ்வரபகவான் தோன்றி ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ''பிரபு, அனுமனுக்கு ஏழரைச் சனி பிடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணா தீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று வேண்டினார்.
" எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால்,அனுமனை பிடித்து பாருங்கள்" என்றார் ஸ்ரீராமன்.
உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, "ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு'' என்றார்.
''சனீஸ்வரா ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும் நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதும் தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம்'' என்றான் அனுமன்.
" ஆஞ்சநேயா, காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பிடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பிடிக்கலாம்?'' என்று கேட்டார் சனீஸ்வரன்.
"என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் உமக்கு இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும். எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம், எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்'' என்று கூறினார் அனுமன்.
அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன். அதுவரை சாதாரண பாறைகளை தூக்கி வந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலை பாறைகளை பெயர்த்து எடுத்து தலைமீது வைத்து கொண்டு, கடலை நோக்கி நடந்து பாறைகளை கடலில் வீசினார்.
பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்க வேண்டியதாயிற்று.
அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. 'தனக்கே ஏழரைச் சனி பிடித்து விட்டதா?' என்றுகூடச் சிந்தித்தார். அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலி ருந்து கீழே குதித்தார்.
" சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பிடிக்க வேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?'' என்று கேட்டார்
அதற்கு சனீஸ்வரன், ''ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பிடித்ததால், நானும் பாறைகளைச் சேதுபந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன். சாக்ஷத் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பிடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்து விட்டேன் " என்றார் சனீஸ்வரன்.
" இல்லை, இல்லை இப்போதும் தாங்களே வென்றீர்கள். ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பிடித்து விட்டீர்கள் அல்லவா? " என்றார் அனுமான்.
அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன்,
''அனுமான். உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்'' என்றார்.
"ராம நாமத்தை பக்தியோடு பாராயணம் செய் பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்.." என வரம் கேட்டார் அனுமன்.
சனியும் வரம் தந்து அருளினார். பொதுவாக ஒருவரை ஏழரைச் சனி பிடிக்கும் காலத்தை மூன்று கூறாகப் பிரித்து மங்குசனி, தங்குசனி, பொங்குசனி என்று கூறுகிறார்கள்
அனுமன் பெற்ற வரத்தால் ஏழரைச் சனியின் மங்குசனி, தங்குசனி காலத்தில் ஏற்படும் இன்னல்களைத் தாங்கி பிரச்னைகளைச் சமாளித்து, முடிவில் வெற்றியும் செல்வமும், சௌபாக்கியமும் பெற, ''ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம'' என்ற தாரக மந்திரத்தை சிரத்தா பக்தியுடன் ஜெபிக்க வேண்டுமென சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர்.
உங்களுக்கு ஏழரை சனியா? அஷ்டம சனியா? இந்த மத்திரத்தை சொல்லுங்க. சனீஸ்வர பகவானின் கருணை உங்களுக்கு கிடைக்கும். அந்த மந்திரம் இதுதான்.
" நீலாஞ்சனச மாபாஷம்
ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட சம்புதம்
தம் நவாமி சனைசரம்.."
முக மலர்ச்சியுடனும் , நம்பிக்கையுடனும் புதிய நாளில் இருப்போம். இறைவன் அருள் புரியட்டும்..