Breaking News :

Thursday, November 21
.

விரும்பிய வேலை கிடைக்க காளியம்மன் வழிபாடு!


நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறோம். அந்த வேலையை செய்வதன் மூலம் பணவரவு ஏற்படும். அப்படி பணவரவு ஏற்பட்டால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்கள் நீங்கும். இதற்காகவே பலரும் தாங்கள் சிறுவயதிலேயே இந்த வேலையில் சேர வேண்டும், இந்த வேலையை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்குரிய படிப்பை படிப்பார்கள். ஆனால் அப்படி படித்தும் பலருக்கும் அவர்கள் விரும்பிய வேலை கிடைக்காத சூழ்நிலையே உண்டாகும். அந்த சமயத்தில் எந்த வேலை கிடைக்கிறதோ அந்த வேலையில் சேர சேர்ந்து விடுவோம் என்று நினைத்து சேருவார்கள்.

இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் தான் விரும்பிய வேலையில் தான் சேருவேன் என்று தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் இன்னும் சில வகைகள் இருப்பார்கள் எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை வேலை கிடைத்தால் போதும் என்று ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்குவார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையால் அவர்களுக்கு வேலை கிடைக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். இப்படி வேலை தொடர்பான பிரச்சனைகளால் கஷ்டப்படுபவர்கள் காளியம்மனை எந்த முறையில் வழிபட்டால் அவை அனைத்தும் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.


உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவள் தான் காளியம்மன் என்று அனைவருக்கும் தெரியும். இந்த அம்மன் தீயவர்களை அழிக்கும் பொழுது மட்டும்தான் உக்கிர தெய்வமாக திகழ்வாள். மற்ற நேரத்தில் சாந்த ரூபினையாகவும் அறிவை வாரி வழங்கக் கூடிய அன்னையாகவும் திகழ்வாள். அதனால் நாம் தவறு செய்யாமல் நம்முடைய தகுதிக்கேற்ற நம்முடைய முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டோம் என்றால் அதில் இருக்கக்கூடிய தடைகளை நீக்கி நாம் வேண்டியதை நமக்கு தருவாள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட காளியம்மனை நாம் ஏதாவது ஒரு வேலை தொடர்பான செயலை செய்வதற்கு முன்பாக வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த வழிபாட்டை வீட்டில் செய்யக்கூடாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அருகில் இருக்கக்கூடிய காளியம்மன் ஆலயத்தில் தான் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய முக்கியமான ஒன்று கறுப்பு அரிசி. இது தற்பொழுது அனைத்து விதமான மளிகை கடைகளிலும் கிடைக்கிறது. கறுப்பு அரிசியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு கறுப்பரிசியை எடுத்து வெள்ளை நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மூட்டையை எடுத்துக் கொண்டு காளியம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு சென்ற பிறகு கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த மூட்டையை வைத்து விட வேண்டும்.

அடுத்ததாக நேராக காளியம்மன் சன்னதிக்கு சென்று அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். அப்பொழுது காளியம்மனுக்கு மாலை வாங்கி சாற்றலாம், தேங்காய் பழம் வாங்கி கொடுத்த அர்ச்சனை செய்யலாம், காளியம்மனுக்கு குங்குமத்தை வாங்கித் தரலாம் அல்லது அபிஷேக பொருட்கள் ஏதாவது இருப்பின் அதை வாங்கித் தரலாம். இப்படி நம்மால் எதை செய்ய முடியுமோ அதை செய்து காளியம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது இந்த வேலைக்காக இந்த முயற்சியில் ஈடுபட போகிறேன் நீங்கள் எனக்கு உறுதுணையாக இருந்து இந்த வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். வேலை கிடைத்த பிறகு அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களால் இயன்ற பிரசாதத்தை நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக தரவேண்டும்.

இந்த தாந்திரீக வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் காளியம்மன் கோவிலில் செய்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைப்பதோடு வேலையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.