Breaking News :

Sunday, December 22
.

ஸ்ரீ காமாட்சி துக்க நிவாரண அஷ்டகம்


காஞ்சிபுரத்தில் கோவில் கொண்டுள்ள காமாட்சி அன்னையை போற்றி, அவளின் அருளை வேண்டி இயற்றப்பட்டதே காமாட்சி துக்க நிவாரண அஷ்டகம். இந்த பதிகத்தை தினமும் ஒரு முறையாவது பாராயணம் செய்ய வேண்டும். அப்படி செய்பவருக்கு வாழ்வில் இருக்கும் எப்படிப்பட்ட துன்பங்கள், தடைகள், பிரச்சனையாக இருந்தாலும் விலகி சென்று விடும்.

51 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சி காமாட்சி அம்மன் சிவ, சக்தி இணைந்த ரூபமாக கருதப்படுகிறாள்.

தினமும் வீட்டில் உள்ள காமாட்சி அம்மன் படத்தின் முன் விளக்கெண்ணெய் தீபமேற்றி, காமாட்சி துக்க நிவாரண அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால், சங்கடங்கள் அனைத்தும் விலகி, நன்மை பெரும். வீட்டில் செல்வம் பெரும். துக்கங்கள் அனைத்தும் மறைந்த வளமான வாழ்க்கை அமையும்.

காமாட்சி துக்க நிவாரண அஷ்டகம் :

காமாட்சி துக்க நிவாரண அஷ்டகம் :

மங்கள ரூபிணி மதியிணி சூலினி மன்மத பாணியளே

சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி செளந்தரியே

கங்கண பாணியன் கனிமுங்க கண்டநல் கற்பகக் காமினியே

ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே !

 

கானுறு மலரெனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்

தானுறு தவ ஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்

மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்

ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே !

 

துயர் தீர்க்கும் பதிகம் :

சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே!

பொங்கரிமாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே

எங்குலந்தழைத்திட எழில்வடிவுடனே எழுந்த நல்துர்க்கையவளே

ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

 

தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணிநீ வருவாய்

கணகண கங்கண கதிரொளிவீசிடக் கண்மணி நீ வருவாய்

பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்

ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷியே

 

காமாட்சி அம்மன் துதி :

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல்பாணியளே! கொஞ்சிடும்

குமரணைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே

சங்கடம் தீர்ந்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே

ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே

 

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எங்குல தேவியளே

பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்

கண்ணொளியதனால் கருணையேகாட்டி கவலைகள் தீர்ப்பவளே

ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே

 

இடர்தரும் தொல்லை இனிமேல் இல்லையென்று நீ சொல்லிடுவாய்

சுடர்தரும் அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்

படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்

ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே

 

ஜெயஜெய காமாட்சி :

 

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி

ஜெயஜெய துர்க்காஸ்ரீ பரமேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி

ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி

ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே

 

குங்கும அர்ச்சனை செய்தோர்க்கு அம்பாள்

கோடிக்கோடி பொன் கொடுப்பாள்

சந்தனத்தால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள்

சர்வா பீஷ்டங்களும் கொடுப்பாள்

 

தேனால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள்

திவ்ய தரிசனம் கொடுப்பாள்

பாலால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள்

பல ஜென்ம பாவங்களை தீர்ப்பாள்

 

காமாட்சி அம்மன் பதிகம்:

கனியால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள்

கண்முன்னே வந்து நிற்பாள்

தீராத வினைகளைத் தீர்ப்பாள்

தேவி திருவடி சரணம் அம்மா

 

நின் திருவடி சரணம் சரணம் அம்மா

பவ பய ஹாரிணி அம்பா பவானியே

துக்க நிவாரணி துர்க்கே ஜெயஜெய

கால விநாசினி காளி ஜெயஜெய

 

சக்தி ஸ்வரூபிணி மாதாவே ஜெயஜெய

ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி

துக்கநிவாரணி காமாக்ஷியே

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.