எட்டுத் திசைகளிலும் எட்டு பைரவர் சிவலிங்கங்களைக் கொண்ட சோளீஸ்வரர் கோயில் காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ளது.
இறைவனின் அம்சமாகவும் அவதாரமாகவும் இருக்கும் பைரவருக்குத் தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிகச் சிறப்பானதாகும்.
பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட காலம் காலமாக நடைபெற்று வருகின்றது.
ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவதலங்களிலும் வடகிழக்கு பகுதியில் காலபைரவருக்கு என தனிச்சன்னதி அமைந்திருக்கும். காலையில் சிவ பூஜை சூரியனிடம் இருந்து தொடங்கி அடுத்த ஜாமத்தில் பைரவருடன் முடிகின்றது.
முதல் வழிபாடு விநாகயருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு நடைபெறும் ஆலயத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படும் பைரவரும் சிவனுடைய அம்சமாகக் கருதப்படுகின்றார்.
இந்த கோயில் அஷ்ட பைரவர்களும் பூஜை செய்த இடமாக இந்த சோளீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அஷ்ட பைரவர்களும் பூஜை செய்யும் காட்சி மூலவரின் பின்னால் புடைப்பு சிற்பமாகக் காணப்படுகின்றது.
மூலவரான சோளீஸ்வரர் பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். சம்ஹார பைரவர் என்றும் இவருக்கு மற்றொரு பெயர் உண்டு.
மேலும் துர்க்கை, நவகிரகம், சனீஸ்வரன், சூரியன் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் இங்கு உண்டு. திசைக்கு ஒன்றாகக் கெட்ட திசைகளிலும் எட்டு பைரவரைத் தரிசிக்கலாம்.
பிரம்மாவின் அகந்தையை முடித்தவர் சிவனின் அம்சமாகப் பைரவரையே சாரும். அகந்தையோடு வருபவர்களை அவற்றை நீக்கி நல்வழி காட்டுபவராக இக்கோயிலில் வைரவர் திகழ்ந்து வருகின்றார்.
இத்திருக்கோயிலில் சம்ஹார பைரவர் அசித்தாங்கு பைரவர், சனீஸ்வரர், குரு பைரவர், குரோதன் பைரவர், கபால பைரவர் என்று எட்டுத் திக்கிலும் தனித்தனி சன்னதிகளை எட்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.
காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியான பிள்ளையார்பாளையம் கடைகோடி சோளீஸ்வரர் கோயில் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.