கஞ்சமலை சித்தர் என்பவர் கஞ்சமலையில் பிறந்ததாக அறியப்படுகிறது. இவர் அட்டமா சித்திகள் என்ற கலையில் காற்றில் பறக்கும் கலையை அறிந்தவர். இவர் மூலிகையையே ஆடையாக அணியும் பழக்கம் கொண்டவர். இவர் பறவைகளுக்குப் பிரியமானவர்.
ஞான விந்த ரகசியம் 30
வளோள மரபில் பிறந்தவர் காலாங்கி நாதர். கால் + அடங்கி = காற்றினை உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆகையால் காலாங்கி எனப் பெயர் பெற்றார் எனலாம். காலாங்கி நாதரின் குரு திருமூலர் ஆவார்; சீடர் போகர். ஒரு முறை காலாங்கி நாதர் சதுரகிரியில் தவம் இயற்றிக் கொண்டிருக்கையில், சிவன் கோயில் கட்ட வேண்டும் என்ற தணியாத ஆசை கொண்ட ஒரு வணிகனுக்கு வகார தைலம் மூலம் பொருளுதவி செய்த செய்தி, சதுரகிரித் தலபுராணத்தில் குறிக்கப் பெற்றுள்ளது.
சதுரகிரியில் தான் சந்தித்த சித்தர்களைப் பற்றி, காலாங்கி நாதர் தமது ஞான விந்த ரகசியம் 30 என்ற நூலில் குறிக்கிறார். இவர் மருத்துவத்திலும் ஆன்மிகத்திலும் பல நூல்கள் செய்துள்ளார். அவருடைய வகாரத் திரவியம், வைத்திய காவியம், ஞான சாராம்சம் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. ஞான பூஜா விதி, இந்திர ஜால ஞானம், ஞான சூத்திரம், உபதேச ஞானம், தண்டகம் போன்ற வேறு பல நூல்களையும் காலாங்கி நாதர் இயற்றியுள்ளார். இவர் சமாதி காஞ்சிபுரத்தில் உள்ளதாகக் கூறுவர்.
கிரிவலம்
இங்குள்ள மலையில் ஏராளமான மூலிகைகள் இருப்பதால், இங்கு கிரிவலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. மூலவர் : சித்தேஸ்வரர் தீர்த்தம் : காந்ததீர்த்த குளம் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர் : கஞ்சமலை மாவட்டம் : சேலம்
சித்தர் கோயில் திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்
சேலம் மாநகரத்திலிருந்து வடமேற்கு திசையில் இம்மலை அமைந்துள்ளது. சேலத்திலிருந்து இளம்பிள்ளைக்குச் செல்லும் வழியில் மூடுதுறை, முருங்கப்பட்டி என்ற கிராமங்களுக்கு தெற்கே சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த மலையின் அடிவாரத்தில் சித்தர் கோயில் உள்ளது. சேலத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.