சரவண பொய்கையிலிருந்து தந்தையும், தாயுமான சிவன் பார்வதியுடன் கைலாய ம் வந்த முருகப்பெருமான் விளையாட்டுக ளில் அதிக ஆர்வம் கொண்டு தேவர்களை பல இன்ன ல்களுக்கு ஆளாக்கி நல்வழிப் படுத்தி னார். தாமே சிறந்தவர் என்ற ஆணவத்தில் தேவர்கள் இருந்து கொண்டி ருந்த நிலையில் அவர்களின் ஆணவத் தை அழித்து, அவர்கள் கொண்ட எண்ண ங்களில் இருந்து விடுவித்து அவர்களுக்கு ஞானமார்க்கத்தை அவர் செய்த விளை யாட்டுகளின் மூலம் அவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக நடந்து கொண்டார்.
சிவபெருமான் முக்தி அளிக்கக்கூடியவர். சிவ பெருமானின் அம்சங்களிலிருந்து தோன்றிய வர் முருகப்பெருமான். தேவர்கள் கொண்ட ஆணவ எண்ணங்கள் நீக்கி அவர்களை நல்வ ழிப்படுத்தினார்.
🌹தேவர்களின் வேண்டுகோள் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கந்தன் விளையாடிய விளையாட்டுகளில் இருந்து தாங்கள் கொண்ட ஆணவ எண் ணத் தை நீங்கிய தேவர்கள் முருகப்பெரு மானிடம், பூலோகத்தில் சூரபத்மனால் தேவர்கள் அடை யும் இன்னல்களை எடுத் துக்கூறி அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினர்.
அவ்வேளையில் எம்பெருமானும், கந்தன் இரு க்குமிடம் தோன்றி கந்தனின் பிறப்பு பற்றிய முக்கியத்துவத்தையும், அவர் செய்யவேண்டிய செயலை பற்றியும் எடுத்துரைத்தார். தனது செயல் யாதென அறிந்த பின் தனது செயல்க ளை செயல் படுத்த தொடங்கினார் முருகப் பெருமான்.
தேவர்களின் அரசனான தேவேந்திரன் இனி யும் காலம் தாமதிக்காமல் சூரபத்ம ன் மற்றும் அவனது சகோதரனான சிங்க முகன், தாரகாசு ரனின் மீது படையெடுத்து அவர்களை சம்ஹா ரம் செய்ய வேண்டும் என எம்பெருமானிடம் உரைத்தார்.
🌹படைக்கு தலைவனான முருகப்பெருமான் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தேவேந்திரன் கார்த்திகேயனை படைக்கு தலை வனாக்கி பின் சூரபத்மனோடு போர் புரிய தயாராக வேண்டும் என்று கூறினார். வீரபாகு முதலிய ஒன்பது லட்ச தேவ வீரர்கள் கொண்ட தேவ படையை உருவாக்கினார்.
🌹தெளிவு பெறுதல் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தேவேந்திரன் தேவர்கள் அடங்கிய படை யை யுத்தத்திற்கு தயாராக இருக்கும் பொருட்டு அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தார். ஆனால், கார்த்திகேயனோ மனதில் ஏதோ குழப்பத்தில் இருந்தார். இதை உணர்ந்த எம் பெருமான் தன் அம்ச மான 11 ருத்திரர்களின் அவதாரங்களில் இருந்து 11 ஆயுதங்களை கார்த்திகேயனு க்கு வழங்கினார்.
அனைத்து விதமான ஆயுதங்களையும் கொடு த்து அவற்றை பயன்படுத்தும் விதத்தையும் எடுத்துரைத்தார். தேவர்கள் கார்த்திகேயனை தங்களது சேனாதிபதி யாக ஏற்றுக்கொண்டு சூரபத்மன் முதலான அசுரர்களின் மீது போர் புரிய தயாராக இருந்தனர்.
🌹கந்தனை பற்றி அறிதல் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தாரகாசுரனிடம், அசுர ஒற்றர்கள் சிவபுத்தி ரன் வருகையைப் பற்றியும், தேவர்கள் போருக்கு தயாராக இருப்பது பற்றியும் கூறினர். தாரகா சுரனும், அசுரர்களின் படைகளும் அவர்களின் தலைநகரை அடு த்துள்ள மாயாபுரியில் தயார் நிலையில் இருந்தனர்.
🌹அசுரர்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கந்தன் விஸ்வகர்மாவை கொண்டு ஆலயம் எழுப்பச் செய்து சிவபெருமானை வணங்கி னார். இந்த அபாயத்திலிருந்து விடுபட தேவ குருவான பிரகஸ்பதியிடம் சூரபத்மனின் முழுக்கதையையும் கூறுமா று கேட்டுக்கொண் டார். அவரும் சூரபத்ம னை பற்றியும், அசுரகுல த்தை பற்றியும் அவர்களை பற்றியும் எடுத்துரைத்தார்.
🌹தூது செல்லுதல் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அசுரர்களை பற்றி அறிந்ததும் அவர்கள் நகர த்தை நிர்மானித்த இடத்தையும், அந்நகரங்க ளை பாதுகாக்கும் விதத்தையு ம் கண்ட கந்தப் பெருமான், போரிட்டு அந்த நகரங்களை அழிக்க மனமில்லாமல் தன் வீரர்களில் ஒருவ ரான வீரபாகுவை சூரபத்மன் ஆட்சி செய்யும் வீரமகேந்திரபு ரிக்கு தூது செல்ல முடிவு செய்தார்.
அதாவது கைது செய்யப்பட்ட அனைத்து தேவ ர்களையும் விடுதலை செய்து, வரும் காலங்க ளில் அறமற்ற செயல்களில் ஈடு படுதல் கூடாது என்னும் விதத்தில் செயல் பட்டால் போர் தவிர்க்கப்படும் என்ற செய் தியை ஏந்தி வீரபாகு, சூரபத்மனை காண அவரது அரண்மனைக்கு சென்றார்.
🌹செருக்கால் அழிவை நோக்கிய பயணம் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வீரபாகு கந்தப்பெருமான் அளித்த தூது செய் தியை வீரமகேந்திரபுரி அரசனிடம் எடுத்துரை த்தார். ஆனால், அரசனோ முருகப்பெருமான் உரைத்த தூது செய்தி களை ஆணவத்தால் அவமதித்து சொல்ல வந்த தூதுவரை கைது செய்ய ஆணை பிறப்பித்தான். இதனால் கோபம் கொண்ட வீரபாகு அங்கிருந்த அசுரர் களை எதிர்க்க துணிந்தார். இதனால் அங்கு ஏற்பட்ட போ ராட்டத்தில் சதமகன் மற்றும் வச்சிரவாகு ஆகிய இரு அசுரர்கள் சூரபத்ம னால் கொலை செய்யப்பட்டனர். பின்பு, வீர பாகு திருச்செந்தூரில் வீற்றிருந்த கந்தனை வணங்கி நிகழ்ந்ததை எடுத்துரைத்தார்.
🌹தேவப்படைகள் புறப்படுதல் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கந்தன், இனியும் அவர்கள் செய்யும் செயல் களை பொறுத்தல் ஆகாது என்று கூறி திருச்செந்தூரிலிருந்து இலங்கை சென்று அங்கிருந்து சூரபத்மனின் நகரமான வீரமகே ந்திரபுரிக்கு செல்ல தீர்மானித்தார்.
பின் தன் படைகள் யாவற்றையும் தயார் நிலை யில் கொண்டு சூரபத்மன் இருந்த இடத்தை அடைய ஆணை பிறப்பித்தார். அனைத்து படைகளும் தயார் நிலையில் இருந்து அவரின் கட்டளைக்கு அடிபணிந் து வீரமகேந்திரபுரி யை நோக்கிச் சென்றனர்.
கந்தப்பெருமானுடன் சென்ற பூதப்படைக ளும், எட்டுத்திக்கும் கேட்கும் வண்ணம் ஒலிக ளை எழுப்பி புறப்பட்டார். அவர்கள் செல்ல தொட ங்கியதிலிருந்து சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் யாவும் அவர் களால் உருவான புழுதி களால் மறைந்த ன. பூத சேனைகள் கடல் மார்க்கமாக இறங்கி பயணிக்க தொடங்கிய போது அவர்களின் கண்களுக்கு பெரிய, பெரிய திமிங்கலங்கள் கூட ஒரு சிறு புழுக்க ளின் குழுக்களாகவே காணப்பட்டன. அவர் களே இறங்கி நடக்க முற்படுகையில் கடலா னது கலங்கி சேறாகவே மாறியது.
🌹பாசறை அமைத்தல் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வீரமகேந்திரபுரி, தென் கடலில் அமைந்து ள்ள நான்கு புறமும் நீரினால் சூழப்பட்ட ஒரு தீவு போன்ற பகுதியாகும். அந்த நகருக்கு வடக்கே அமைந்துள்ள தீவு இலங்கை என்ற நிலப்பர ப்பு தீவு ஆகும். இலங்கையிலிருந்து முருகப் பெருமான் அசுரர்களின் நகரமான வீரமகேந்தி ரபுரி யை அடைய முற்பட்டபொ ழுது அங்கு தோன்றிய பிரம்மதேவர் அசுரர்கள் வாழும் அப்பகுதியில் தாங்கள் செல்வது உகந்தது அல்ல. இங்கேயே தங்கியிருந்து போர் செய்ய தேவையானதை அமைத்து க் கொள்ளலாம் என்று கூறினார்.
அவரின் வேண்டுகோளை ஏற்ற முருகப் பெரு மான், தேவதச்சனை அழைத்து உடனே இங்கு ஒரு பாசறையை ஏற்படுத்த ஆணையிட்டார். தேவதச்சனும் உடனே அழகிய மாட மாளிகை அமைப்புடன் கூடிய மண்டபங்களும், சோலை களும் கொண்ட பாசறை ஒன்றை நியமித்தார் அதற்கு 'ஏம கூடம்" என்று பெயரிட்டு அவ்விட த்திலிருந்து வீரமகேந்திரபுரியை தாக்குவதற் கான செயல்கள் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஷண்முகா சரணம்...