ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு அம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். இம்மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பிடித்த உணவை தயார் செய்து படையல் போடுவது வழக்கம்.
அத்தகைய அம்மனுக்கு போடப்படும் பிரசாதங்களில் ஒன்றான கூழ், நமது வீடுகளில் எப்படி செய்வது என இப்போ பார்ப்போம் வாங்க...
தேவையான பொருட்கள் :
ராகி மாவு - 1 கப்
தண்ணீர் - 5 கப்
சினன் வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
தயிர் - 1 கப்
மோர் மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஒரு பெரிய பாத்திரத்தில் ராகி மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து கட்டி சேராமல் கரைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கரண்டியால் நன்கு கிளறவும்.
அதனை நன்றாக கெட்டியாகும் பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இறந்து இறக்கி விடவும். சிறிது ஆறவிட்டு அதில் சிறிய வெங்காயத்தையும், தயிரையும் சேர்ந்து நன்கு கரைக்க வேண்டும்.
பின், அதனை ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மோர் மிளகாயைப் போட்டு பொன்னிறமாக பொறித்து, கரைத்து வைத்துள்ள கூழில் சேர்த்து நன்கு கிளறிவிடவும். 5 நிமிடம் கழித்து, பரிமாறலாம். இப்போது அம்மனுக்கு படையலிட கூழ் ரெடி.