பூஜை செய்வதற்கு ஏற்ற நல்ல நேரமும், வழிபாட்டு முறையும்
சிறியவர், பெரியவர் என அனைவரும் உற்சாகமாக கொண்டாடும் ஒரு பண்டிகை நாள் கிருஷ்ண ஜெயந்தி ஆகும். கிருஷ்ணரின் பிறப்பை கோபியர்கள் கொண்டாடியதை நினைவுபடுத்தும் விதமாக இன்று நாமும் சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறோம். கிருஷ்ண ஜெயந்தியை எந்த நாளில், எந்த நேரத்தில் பூஜை செய்து கொண்டாட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் சிறந்த பொருட்கள் குறைந்த விலையில்!
குழந்தை வரம் வேண்டுபவர்கள்
கிருஷ்ணரை எந்த முறையில் வழிபட வேண்டும், கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு கண்டிப்பாக படைக்க வேண்டிய 5 நைவேத்திய பொருட்கள், அவரை பூஜை செய்து வழிபடும் முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். இந்த நேரத்தில் வழிபடுவதால் கிருஷ்ணரின் அருள் அனைவருக்கும் கண்டிப்பாக கிடைக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி 2024 : பூஜை செய்வதற்கு ஏற்ற நல்ல நேரமும், வழிபாட்டு முறையும்
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி 2024 :
கிருஷ்ணரை அனைவரின் வீட்டிலும் எழுந்தருள செய்து, அவரின் அருளை பெறுவதே கிருஷ்ண ஜெயந்தியின் நோக்கம் ஆகும். கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. தேய்பிறை அஷ்டமி, கிருத்திகை, திங்கட்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி என பல தெய்வங்களுக்கும் உரிய வழிபாட்டு நாள் ஒரே நாளில் இணைந்து வருவதால் இது மிகவும் சிறப்புக்குரிய நாளாக கருதப்படுகிறது. அதுவும் குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு நிச்சயம் பலன் தரக் கூடிய நாளாக கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது. கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டினை எந்த நேரத்தில், எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கிருஷ்ண ஜெயந்தி 2024 வழிபாட்டு நேரம் :
ஆகஸ்ட் 26ம் தேதி காலை 09.13 முதல், ஆகஸ்ட் 27ம் தேதி காலை 07.30 வரை அஷ்டமி திதி உள்ளது. அதனால் கோகுலாஷ்டமி வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் ஆகஸ்ட் 26ம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு கிருஷ்ண வழிபாட்டினை துவக்கலாம். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட நினைப்பவர்கள், ரோகிணி நட்சத்திரம் இருக்கும் சமயமான ஆகஸ்ட் 26ம் தேதி இரவு 09.41 மணி துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி இரவு 08.54 வரை தங்களின் வழிபாட்டினை வைத்துக் கொள்ளலாம். ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதி இரண்டும் சேர்த்து வழிபடுவதற்கான நேரம் ஆகஸ்ட் 27ம் தேதி காலை 6 மணி முதல் 07.20 வரை உள்ளது.