Breaking News :

Thursday, November 21
.

குலம் செழிக்கும் குலதெய்வம் ஏன்?


குலதெய்வம் என்பது நமது குலத்தை வாழையடி வாழையாக காக்கும் கண் கண்ட தெய்வம்.

சுமார் 60 வருடங்களுக்கு முன்பு வரை குல தெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை மிக பிரமாண்டமாக சொந்த பந்தங்கள் அனைவரும் பிரம்மிக்க ஆரவாரமாக அபிஷேகம் ஆராதனை சாப்பாடு செய்வது என்று பாரம்பரியமாக இருந்து வந்தது.

ஆனால் இப்போதைய தலைமுறைக்கு
குல தெய்வமா அப்படீன்னா என்னங்க என்று சிம்பிளாக கேள்வி கேட்கிறார்கள்
அது முற்றிலும் தவறு !!

எத்தனை தெய்வங்களை நீங்கள் கும்பிட்டாலும் அந்த தெய்வங்கள் உங்களுடைய குல தெய்வத்தினை தான் நாடும்.

சரி குல தெய்வத்தை பற்றி உங்கள் தாத்தா பாட்டியிடம் கேளுங்கள்
கண்டிப்பாக அவர்கள் கூறுவார்கள்.

சரி குல தெய்வத்தை பற்றி பார்ப்போம்.

1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.

2). குருவை மறந்தாலும் குலதெய்வத் தை மறக்ககூடாது.
3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு.
4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பது ஆசார்யர்களின் வாக்கு.
4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு.
5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை.
6). எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

7). குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உன்னதமான தெய்வமே குலதெய்வம் தான்.
😎. வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம்.

9). நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்.
10). குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
11). குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும்.
கருங்காலி கோல் மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும்.
12). குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறுதெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது.

13). குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
14). அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.
15). எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
16). ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்.
17). குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
18). குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுக்ரஹம் இல்லை என்றால் ஒருவர் என்ன தான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம் தான்.
19). இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக[இல்லற] வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது.

20). குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
21). குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும்.
22). வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.
23). தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.
24). குலதெய்வத்தை மறப்பது நம் அம்மா, அப்பாவை மறப்பதைப் போன்றதாகும்.
25). குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்குச் சமம்.
26). குலதெய்வ வழிபாட்டினால் தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, திருமணம் அமைவது, தொழில் விருத்தி கிடைப்பது, குழந்தை வரம் பெறுவது முதலிய பயன்கள் பெறலாம்.

27). குலதெய்வ வழிபாடு இல்லாமல் பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்தால் அவற்றின் பலன்கள் கிடைக்காது.
28). குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எவ்வளவு பெரிய மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.
29). குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து வந்தால் நவக்கிரகங்களும் துணை நிற்கும்.
30). துன்பமான காலத்தில் நம் தாயை போல காப்பது குலதெய்வம் ஆகும்.
31). நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்.
32). குலதெய்வம் சாபமிடாது.
அந்த குலத்தை சார்ந்த நீங்கள் சரியாக வழிபடவில்லையே என்று மனது வருத்தப்படும்.
அதனால் வீட்டில் நடக்க வேண்டிய நல்ல விசயங்கள் தள்ளி போகும்.
ஆகவே எல்லோரும் தவறாது குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள்.

33). ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது.
அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்.
34). குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி.
ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்துவிடும்.
35). குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடும்.
36). குலதெய்வ வழிபாடு என்பது கலியுகத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

37). குலதெய்வ வழிபாடு என்பது இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரப்ரம்ம வழிபாடே என்பதினால் தான் "குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்ரம்மத்தை அவமதிப்பது" என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு தண்டனைக் கிடைக்கின்றது.
38). நாம் நம் குலதெய்வத்தை வழிபடும் போது நமக்கு வரும் வினைகள்[இன்னல்கள்] யாவுமே நல்வினையாக மாறும்.
குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

39). உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனமுருக வழிபாடு செய்யுங்கள்.
உங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
40). நீங்கள் ஒரு வேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு
எந்த தெய்வமும் அதற்கு ஈடு இணை இல்லை.
41). மற்ற  தெய்வத்திற்கும் , குல தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
மற்ற தெய்வங்களுக்கு எண்ணற்ற பிள்ளைகள்.
குலதெய்வத்திற்கு உங்கள் வம்சவழிதான் பிள்ளைகள்.
42). குலதெய்வத்தை மறப்பது பெற்றோரை மறப்பது போன்றது.
43). எவன் ஒருவன் இப்படி தான் வணங்கி வந்த குலதெய்வத்தை உதாசீனப்படுத்துவார்களோ அவர்கள் தனது பெற்ற தாயாரையே உதாசீனப்படுத்தியது போலாகும். ஆகவே அவர்களுடைய அடுத்த ஏழு சந்ததியினருக்கும் நல்ல வாழ்க்கை அமையாது.

44). குலதெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது.
45). பல தெய்வங்களை வழிபாடு செய்து வரலாம்.
ஆனால் அந்த தெய்வங்கள்,குலதெய்வங்கள் ஆகாது.
46). இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான்.
47). மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
48). நாம் வணங்கும் இஷ்ட தெய்வம் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்.

49). குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானதாகும். வருடம் இரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டியதைச் செய்து வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வர்.
50). உங்களின் குலதெய்வம் ஆண் பெண் குலதெய்வமாக இருந்தால் தாராளமாக அதனை வழிபாடு செய்யுங்கள். நமது முன்னோர்களின் வழியை நாம் மாற்ற வேண்டாம்.
51). பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். இல்லை என்றால் கண்டிப்பாக கிடைக்காது.
52).  காசி கயா  ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று பரிகாரம் செய்தாலும்  அவரவர்களுடைய குலதெய்வத்தின் பரிபூரண அருள் இல்லையேல்  பரிகாரம் செய்ததின் பலன் பூஜ்யமே
53). ஆண்டியை அரசனாக்குவதும் அரசனை ஆண்டி ஆக்குவதும் நம் குலதெய்வமே.
54). அவரவர் குலதெய்வத்தின் படத்தினை வீட்டில் வைத்து வணங்கி வரலாம்.
55). குலதெய்வம் நம்மை கண்ணின் இமைபோல் காத்து நிற்கும்.

56). குலதெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை.

குலதெய்வம் தெரியாதவர்கள் தெரிந்தவர்கள் கருங்காலி கோல் மாலை வைத்து வழிபடலாம்.
திருப்பதி வேங்கடவனையும் குல தெய்வமாக வழிபடலாம்.

அப்படி குல தெய்வம் தெரியாதவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகில்  சென்று பிரசன்னம் துல்லியமாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

குலதெய்வத்தை வருடத்தில் இரண்டு முறை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
அதுவும் குடும்பத்தினருடன் சேர்ந்து வழிபாடு செய்தால் சகல செளபாக்யமும் கிடைக்கும்.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒரேயொரு முறை குல தெய்வத்தை மானசீகமாக வேண்டிப் பாருங்கள் நடக்கும் அதிசயத்தை.
இன்றைய காலகட்டத்தில் குல தெய்வத்தை மறந்ததால் தான் பல பேர் வாழ்க்கையில் பல விதமான கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

ஆகவே எந்நாளும் குல தெய்வத்தை மறக்க கூடாது. அவரவர்களுடைய இல்லத்தில் குலதெய்வத்திற்கு (விளக்கெண்ணெய் castor oil ஆமணெக்கெண்ணெய்) வாழைத்தண்டு திரியில் தினசரி  தீபம் ஏற்றி வழிப்பட  வம்சம் வாழையடி வாழையாக தழைத்தோங்கும்!!!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.