மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோயிலின் திருப்பணிகள் முடிந்து கடந்த 23-ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி தினமும் இரண்டுகால யாகாசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை 5 மணியளவில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8-வது யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 8-வது கால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றன.
பின்னர் சிவ ஆகமங்கள் முறைப்படி திருமுறை பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், மிரித்திங்கா ஜெபம் ஆகியவை நடைபெற்றது. பூர்ணாஹீதியுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க மேள தாளங்களுடன் வாணவேடிக்கையுடன் கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோபுர விமானத்தில் வந்தடைந்தது.
இதையடுத்து காலை 10.45 மணியளவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கும், அம்பாளுக்கும் கடத்தில் உள்ள புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது கருடன் வட்டமிட புனித நீரால் கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.