Breaking News :

Thursday, November 21
.

மகாளய அமாவாசை: செய்ய வேண்டிய தானங்கள்...


மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. இத்தகைய சிறப்பு மிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம். நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம்._

 

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-

 

*#அன்னம் - வறுமையும், கடனும் நீங்கும்*

 

*#துணி - ஆயுள் அதிகமாகும்*

 

*#தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்*

 

*#தீபம் - கண்பார்வை தெளிவாகும்*

 

*#அரிசி - பாவங்களை போக்கும்*

 

*#நெய் - நோய்களை போக்கும்*

 

*#பால் - துக்கம் நீங்கும்*

 

*#தயிர் - இந்திரிய சுகம் பெருகும்*

 

*#பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்*

 

*#தங்கம் - குடும்ப தோஷங்களை நீக்கும்*

 

*#வெள்ளி - மனக்கவலை நீங்கும்*

 

*#பசு - ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்*

 

*#தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்*

 

*#நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்*

 

*#பூமி தானம் - ஈஸ்வர தரிசனம் உண்டாகும்*

 

சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். #அவர்களால் 

#பெரிய_அளவில்_தானம் செய்ய இயலாது. #அவர்கள்_கவலை #கொள்ள_வேண்டாம். 

 

*பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். 

 

கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. 

 

பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம்.

 

 ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். 

 

#பசுவிற்கு #வாழையிலையில் #சாதத்தை_அளிக்கலாம். #பழவகைகளை_கொடுக்கலாம்.*

 

பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். 

 

அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். 

 

#இதை_அதிகமாக #தரக்கூடாது. பசுவிற்கு #வயிற்றுஉபாதையை #உண்டாக்கும்.

 

#கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். 

 

அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா? முடியும்.

 

 பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம். 

 

எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு #தங்களால்_இயன்ற_அளவு_உணவை_அளிக்கவும்.

 

_அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை போக்கிக் கொள்ள முடியும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும்.....

 

சரணம் சரணம் 

மகேஷ்வரா ....

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.