புதுச்சேரி மாநில எல்லையான மொரட்டாண்டியில் அமைந்துள்ள
உலகிலேயேவிஸ்வரூப_மகாசனீஸ்வரர்_நவகிரகங்கள் 27அடி மிக உயரமான
#விஸ்வரூப_மகாசனீஸ்வரர்_நவகிரகங்கள்
மற்றும் 27 நட்சத்திர
அதி தேவதைகள்
திருக்கோயில் வரலாறு:
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டியில் 27 அடி உயரம் கொண்ட விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் நவக்கிரக பரிகார ஷேத்திரம் அமைந்துள்ளது. அகத்திய மகிரிஷியின் சிஷ்யரும், காஸ்யப முனிவரின் சிஷ்ய பரம்பரையில் வந்தவருமான சிவ சிதம்பர கீதாராம் குருக்களின் மகன் சிவஸ்ரீ சிதம்பர கீதாராம் குருக்கள் கழுவெளி சித்தர் எனும் முரட்டாண்டி சித்தர். சித்தர் தவம் செய்த மொரட்டாண்டி கிராமத்தில் உலக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய சித்தரின் கனவில் வந்து கூறியவாறு 54 அடி உயர கிரக சாந்தி கணபதிக்கு எதிரில் உலகிலேயே மிக உயரமான 27 அடி உயர விஸ்வரூப பஞ்சலோக மகா சனீஸ்வர பகவான் மற்றும் 108 திவ்ய விருட்சங்களுக்கு (மரங்கள்) நடுவில் 12 அடி உயர நவக்கிரகங்கள் மற்றும் 9 அடி உயர சொர்ண சிதம்பர மகா கணபதி, 9 அடி உயர ஜெயமங்கள சர்வ ரோக ருண விமோசன சத்ரு சம்கார சண்முக சுப்ரமணிய சுவாமி, 80 அடி உயர மகர கும்ப கோபுரம், துர்கா கணபதி ஷேத்ரபாலகர், அபயங்கரர், வாஸ்து புருஷன் முதலிய தேவதைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரமாண்டமான தோற்றத்தில் காட்சி தரும் சனீஸ்வரனை மொரட்டாண்டி என்னும் திருத்தலத்தில் தரிசிக்கலாம். இருபத்தேழு அடி உயரத்தில் பஞ்சலோகத்தில் உருவான இவரது காலடியில் 12 ராசிக்களுக்கான சின்னங்கள் இருப்பதை காணலாம். மேற்கு திசை நோக்கி அருள் புரியும் சனீஸ்வரனை சுற்றி மற்ற கிரகங்கள் எல்லாம் பதினாறடி உயரத்தில் வாகனத்துடன், அவரவர்க்கு உரிய திசையில் காட்சி தருகிறார்கள்.
இத்திருத்தலத்திற்குள் நுழைந்ததும் முதலில் நம்மைவரவேற்பவர், ஐம்பத்து நான்கடி உயர மகா கணபதி. இவரை கிரக சாந்தி கணபதி என்கிறார்கள். இவரது முதுகில் “நாளைவா” என்ற வாசகம் எழுதப்பட்டிருப்பதை காணலாம். இவரது பீடத்தின் கீழ் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்கிறார்கள். இதனால் கிரக சாந்தி ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
அறுபது வருடங்களை குறிக்கும் மரங்கள் இருபத்தேழு நட்சத்திர மரங்கள், பன்னிரண்டு இராசிகளுக்கான மரங்கள், நவகிரகங்களுக்கான மரங்கள் என்று, நூற்றியெட்டு மரங்கள் இத்தலத்தினைச் சுற்றி அழகுடன் காட்சி தருகின்றன.
வாஸ்து பகவான் இடது கையை தலையில் சாய்த்து படுத்தவண்ணம் நீண்ட உருவத்தில் காட்சி தருகிறார். இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சனி மற்றும் சூரியனிலிருந்து ஏற்படும் புற ஊதா கதிகர்கள்தான் காரணம் என்று விஞ்ஞான ரீதியாக சொல்லப்படுகிறது. இந்த புறா ஊதா கதிர்கள் சனீஸ்வரனின் அம்சம் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிண்றது. இந்த கதிர்களின் தாக்கதிலிருந்து உலக மக்களை காப்பாற்றவே, இங்கு பஞ்சலோக சனீஸ்வரன் சிலை முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்படுகிறதாம்.
இந்த தலத்திற்கு வந்து பரிகாரம் செய்து வணங்கினால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், வியாபாரத்தடை அகலும், குடும்ப பிரச்னை, தார தோஷம் உள்ளிட்டவை தீரும் என நம்பப்படுகிறது. மேலும் பல நன்மைகள் கிட்டும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஷேத்திர நிர்வாகிகள் கூறுகையில், பக்தர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் 90 நாட்களில் விமோசனம் கிடைக்க பரிகாரம் செய்து தரப்படும். கடவுள் மேல் சந்தேகம் இல்லாமல் நம்பிக்கை வையுங்கள். கடவுள் நினைத்தால் எப்படிப்பட்ட சூழலையும் மாற்ற முடியும். உங்கள் சங்கடங்களை நீக்கி, சந்தோஷத்தை நிலைக்க வைக்க கடவுளால் மட்டுமே முடியும் என்பதை உணருங்கள். ஜாதகம், நாள், மனையடி சாஸ்திரம், திருமண பொருத்தம், கும்பாபிஷேகம், ஹோமங்கள், சாந்திகள் சிறந்த முறையில் செய்யப்படும். தன வியாபாரம், பூமி தொழில் திருஷ்டி முதலிய எந்திரங்கள் செய்து பூஜையில் வைத்து தரப்படும். இங்குள்ள கோசாலையில் கோதானம், கோபூஜை செய்து பக்தர்கள் கோமாதா அருள்பெறலாம்.
இத்தலத்திற்கு ஒரு முறை வந்து, இங்குள்ள தெய்வங்களை தரிசிக்க வாழ்வில் வசந்தம் வீசும். சனியின் தாக்கம் குறையும். வாஸ்து தோஷம், திருமண தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி பொங்கும் என்கிறார்கள். புதுவையிலிருந்து திண்டிவனம் செல்லும் பேருந்தில் பயணித்தால் பதினைந்து நிமிடத்தில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், மொரட்டாண்டி என்னும் ஊரிலுள்ள இத்தலத்திற்கு செல்லலாம்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய