Breaking News :

Thursday, November 21
.

ஸ்ரீ மஹாலஷ்மி தோன்றிய கதை !!


ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மியின் கதையை படிப்பவர்களுக்கு வீடுகளில் லஷ்மி கடாஷம் நிரந்தரமாகும்.

மும்மூர்த்திகளில் ஒருவரான 
மஹா விஷ்ணுவின் துணைவியாக இருக்கும் செல்வத்திற்கான கடவுள் மஹாலட்சுமி எப்படி தோன்றினாள். லட்சுமி தேவியை மஹாவிஷ்ணு மணந்த புராண கதை.

முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும், மனிதர்களைப் போல நரை, திரை, பிறப்பு இறப்பு, ஆகியவை இருந்திருகின்றன.

இதிலிருந்து தேவர்கள் விடுபட வேண்டும் என நினைத்தார்கள். 

தேவர்களின் தலைவராகிய இந்திரன் அதிலிருந்து விடுபட வேண்டி ப்ரம்மனிடம் சிவபெருமானிடமும் முறையிட்டனர். 

ஆனால் அவர்களோ மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டால் அதற்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.

*பாற்கடல் கடைதல்*

ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் முறையிட்ட போது, கவலைப் பட வேண்டாம். 

இந்த பாற்கடலில் அமிர்தம் இருக்கின்றது. 

நாம் இந்த பாற்கடைலை கடைந்தால் அதைப் பெற முடியும் என்றார். 

அந்த அமிர்தத்தை அருந்தினால் நாம் நரை, திரை, பிறப்பு இறப்பு, ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும்.

இதையடுத்து ஆலோசனை நடந்தது. 

தேவர்கள் மட்டும் பாற்கடலைக் கடைவது இயலாதது. 

அதனால் அசுரர்களின் உதவியை நாட வேண்டும் என ஸ்ரீமஹாவிஷ்ணு தெரிவித்தார்.

இந்த பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுக்க மேருகிரி மலையை மத்தாகவும், வாசுகி பாம்பு கயிறாகவும் வைத்து கடைந்தனர்.

மஹா விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து மந்தர மலையை தாங்கினார்

அதே நேரத்தில் பாற்கடலையும் கடைந்தார்.

*மஹாலஷ்மி அவதரித்தல்*:

ஆயிரம் ஆண்டுகள் பாற்கடலை கடைந்தனர். 

அப்போது கயிறாக இருந்த வாசுகி நாகம் வலி தாங்க முடியாமல் விஷத்தைக் கக்கியது. 

அப்படி கடலில் திரண்டு வந்த ஆல ஹால விஷத்தை சிவ பெருமான் அருந்தி, அதை தன் கழுத்தில் நிறுத்தினார், விஷத்தால் *நீலகண்டரானார்*.

கடைசியாக அந்த கடலிலிருந்து அமிர்தம் வெளிவருவதற்கு முன், பல்வேறு பொருட்கள் வெளி வந்தன.

சிந்தாமணி, சூடாமணி, கௌஸ்துவ மணி, மூதேவி, ஸ்ரீதேவி, அகலிகை, காமதேனு, கற்பக மரம், துளசி ஆகியவை தோன்றியது.

பாற்கடலைக் கடைந்தவர்கள் எல்லாம் ஆளுக்கொரு பொருளை எடுத்துக் கொள்கின்றனர். 

அப்படி அதிலிருந்து வெளியே வந்த ஸ்ரீதேவியான மஹா லஷ்மியை ஸ்ரீமஹாவிஷ்ணு ஆட்கொண்டு அவரை மணம் புரிந்து, மஹாலஷ்மி ஸமேத மஹாவிஷ்ணுவாக அருள்பாலிக்கின்றார்.

மஹாலஷ்மி இருக்கும் இடங்கள்.
   
செல்வத்தின் அம்சமாக, பெண்களின் சொரூபமாகவும் விளங்கும் மகாலஷ்மி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்.

அந்த இடங்கள் எவை என்று பார்க்கலாம்.

*பெருமாள் ஹ்ருதயம்*:

*திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள்*. 

ஆதலின் திருவுறைமார்பன் - *ஸ்ரீநிவாசன்* என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். 

திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. 

*திருமகளைப் புருஷாகாரம்* என்பர். 

அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.

*பசுவின் ஆசனவாய்*:

பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா. 

காரணம், பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருப்பதுதான். 

பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். 

காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. 

அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். ‘யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயிறை’ என்றார் திருமூலர்.

யானையின் மத்தகம்:

யானையின் மத்தகம் பிரணவம் போன்றது (ஓங்காரம் போன்றது). 

அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள்.

*தாமரை*:

மலர்களில் சிறந்தது தாமரை. 

‘பூவெனப்படுவது பொறிவாழ் பூவே’ என்றும், ‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை’ என்றும் கூறுவர். 

தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். 

பத்மம் என்றால் தாமரை. 

*எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளனர்*. 

பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. 

*திருமகளுக்குரிய இடம் தாமரை*. 

ஆதலின் அவளை *மலர்மகள்* என்பர்.

*திருவிளக்கு*:

திருவிளக்கின்றி எந்த பூஜையுமில்லை. 

*எல்லாத் தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம்*. 

ஆதலின் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய் ஆண்டவரைக் கண்டார். 

எல்லாத் தெய்வங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை மஹா லஷ்மியாகக் கருதுவது நம் மரபு.

*சந்தனம்*:

மங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலஷ்மி உறைகிறாள். 

தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. 

சுபகாரியஙக்ளில் சந்தனம் அவசியம்.

*தாம்பூலம்*:

தாம்பூலம் மங்களகரமானது. 

சுப காரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. 

தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தாயிற்று என்றே பொருள்.

*கோமியம்*:

பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. 

இதனைப் *பஞ்சகவ்யம்* என்பர். ‘ *ஐந்தாடுவான் அரன்*’ என்பார் அப்பர். 

வாயிலில் சாணம் தெளித்தால் வீட்டைச் சாணத்தால் மெழுகினால் கிருமிகள் வாராது, லஷ்மி கண்டிப்பாக வருவாள். 

*பஞ்சகவ்யம் பருகினால் நோய் வராது*. 

பஞ்ச கவ்யம் பரம ஒளஷதம் என்பர்.

*கன்னிப்பெண்கள்*:

*தூய கன்னியர் தெய்வ நலம் பொலிபவர்* 

அவர்களிடத்து லஷ்மி கடாஷம் உண்டு. 

பெண்ணைப் பார்த்தால் மஹாலஷ்மி மாதிரி இருக்கிறாள் என்று சொல்வது உலக வழக்கு.

*உள்ளங்கை*:

உள்ளங்கையில் லஷ்மி உள்ளாள். 

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும். 

கையை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கிறது. 

கையால் உழைத்தால்தான் தனலஷ்மியைக் காண முடியும். 

கை என்றாலே சக்தி என்றுதான் பொருள். 

அவர் பெரிய கை என்றால் அவர் செல்வமுடையவர் என்று பொருள்.

*பசுமாட்டின் கால்தூசு*

புனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் நில்லாது. 

அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். 

மாடு என்றால் செல்வந்தானே!

*வேள்விப்புகை*:

வேள்விப் புகை உயிர் காக்கும். போபாலில் வேள்வி நடந்த இரு வீடுகளுக்குள்ளே நச்சுக்காற்று நுழையவில்லை. 

வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப் புகையில் வானம் பொழியும். வையகம் செழிக்கும்.

*வில்வமரம்*:

*வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்தரத்தில்* *மகாலஷ்மி* 
*தோன்றினாள்*. 

*வில்வ தளம் சிவபெருமானுக்கு* *உகந்த பத்திரம்*. 

அதைவிடச் சிறந்த பத்திரம் ஒன்றும் இல்லை. 

*வைணவத்தலமான ஸ்ரீரங்கத்தில்* *தல *விருட்சம் வில்வம், திருநகரிக்கு* *வில்வாரண்யம் *என்று பெயர்*. 

*திருவஹீந்திரபுரத்தில் மகாலஷ்மிக்கு* *வில்வத்தால்தான் அர்ச்சனை*. 

வில்வ மரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்.

*நெல்லி மரம்*:

*நெல்லி ஆயுளை* வளர்க்கும்: ஆரோக்கியம் தரும். 

அதனடியில் மகாலஷ்மி உறைகிறாள். 

நெல்லி திருமாலின் அருள் பெற்றது. 

ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயர். 

நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லஷ்மி இருப்பாள். 

*துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாதசிப் பலனே உண்டு*.

மற்றும்

தூய்மையான இடத்தில்,

மா இலை தோரணம்,

தாமரை மலர்,

உப்பு குவியல் இருக்கும் இடத்தில்,

சர்க்கரை குவியல் இருக்கும் இடத்தில்,

சாளக்கிராம பூஜை செய்யும் இடத்திலும்,

துளசி மாடத்திலும்,

துளசி பூஜை செய்யும் இடத்திலும்

சிவபெருமான் பூஜை செய்யும் இடத்திலும்,

லஷ்மி ஹோமம் செய்தாலும்

சுதர்சன ஹோமம் செய்தாலும்

ஏகாதசி விரதம் இருந்தாலும்

திருவோண விரதம் இருந்தாலும்

ஸத்ய நாராயண பூஜை செய்யும் இடத்திலும்.

ப்ரஹ்மா விஷ்ணு மற்றும் சிவ எல்லா தெய்வங்களின் பக்தர்களின் மனதிலும்

முக்கியமாக தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்

வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம்

ஆந்தைகள் இருக்கும் இடத்தில்

கலகமில்லாத மகளிர் வாழும் இடம்

தானியக் குவியல் இருக்கும் இடத்தில்.

பகிர்ந்துண்டு வாழும் மனிதர்களின் மனதில்.

அமைதியான வீடுகள் இருக்கும் இடங்களில்

நாவடக்கம் உள்ளவர்களிடத்தில்.

தாய் தந்தை மற்றும் பெரியோர்களை மதிப்பவர்களிடத்தில்

மிதமாக உண்பவர்களிடத்தில்

பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்களிடத்தில்.

தூய்மையான ஆடை அணிகிறவர் ஆகிய இடங்களிலும் மனிதர்களிடத்தும் மகாலஷ்மி எப்போதும் இருக்கிறாள்.

மஹாலஷ்மி காயத்ரி மந்திரம்🙏

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீச தீமஹீ
தந்நோ லஷ்மி ப்ரசோதயாத்.🙏

இந்த மந்திரத்தை தினமும் தொடர்ந்து காலையில் 108 முறை ஜெபித்து வந்தாலே மஹா லஷ்மியின் பரிபூரண கிருபா கடாக்ஷம் கிடைக்கும்.

பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் முதலில் தாயாரை தரிசித்து பின் பெருமாளை வணங்கி வர வேண்டும்.

தாயார் இல்லாத கோவிலில் பெருமாளின் ஹ்ருதயத்தைப் பார்த்து பின் பெருமாளின் பாதம் முதல் முகம் வரை தரிசிக்க வேண்டும் இதுதான் சாஸ்திரம்.

ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் திருவடிகளே சரணம்

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.