Breaking News :

Thursday, November 21
.

காலையில் எழுந்ததும் ஏன் கைகளைத் தேய்த்து பார்க்க வேண்டும்?


துரித வேகத்தில் செல்லும் இன்றைய உலகில், காலை வேளை பெரும்பாலும் தூக்க கலக்கத்துடன், சோர்வுடன் மற்றும் படுக்கையை விட்டு எழ முடியாத அளவில் தான் உள்ளது. இதனால் நாள் முழுவதும் மிகுந்த சோம்பேறித்தனதுடன் இருக்க நேரிடுகிறது.

ஆனால், காலையில் எழும் போது நம் இரு கைகளையும் தேய்த்து உள்ளங்கையைப் பார்ப்பதால் சில அற்புத நன்மைகள் அடங்கியுள்ளது. இங்கு அது குறித்தும், காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய வேறு சில நல்ல காலை பழக்கவழக்கங்கள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

நம் கைகளில் லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி மற்றும் விஷ்ணு பகவான் குடியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே ஒருவர் காலையில் எழுந்ததும் கைகளைத் தேய்த்து பார்க்கும் போது, இந்த கடவுள்களின் ஆசீர்வாதம் கிடைத்து, அன்றைய நாள் சிறப்பாக இருப்பதாக நம்பப்படுகிறது.

காலையில் எழுந்ததும் படுக்கையை சுத்தம் செய்வது போல், குளித்து முடித்த பின், பூஜை அறையை சுத்தம் செய்து பூஜிக்க வேண்டும்.
படுக்கையில் இருந்து எழும் முன், பூமித் தாயை தொட்டு வணங்க வேண்டும். இந்த பழக்கம் ஒருவரது வீட்டினுள் செல்வத்தை வரவழைக்கும்.

காலையில் எழுந்ததும், மாட்டிற்கு சப்பாத்தி வழங்க வேண்டும். இதனால் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

காலையில் ஒருவர் எழுந்து குளித்த பின், முதல் வேளையாக சூரிய பகவானுக்கு நீரை வழங்க வேண்டும். இப்படி செய்வதால், நாள் முழுவதும் சிறப்பாக செயல்படத் தேவையான ஆற்றலை சூரிய பகவான் வழங்குவதுடன், நேர்மறை எண்ணங்களுடன் இருக்க உதவுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

*காலையில் எழும் போதே காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே எழுவதால் கோயிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இந்த பழக்கத்தால், நீங்கள் செய்த பாவம் அனைத்தும் நீங்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.