பன்னிரண்டு திருக்கரங்களுடன் போர்த் தளபதி திருக்கோலத்தில், ஸ்ரீ வள்ளி-தெய்வானையுடன் ஸ்ரீ முருகப் பெருமான அருளும் திருத்தலம் – தென்சேரிகிரி (பல்லடம் – உடுமலைப்பேட்டை சாலையில் அமைந்துள்ளது.
நான்முகனை சிறைவைத்த ஐந்து முகங்களுடன் ஸ்ரீ முருகப் பெருமான் அருளும் திருத்தலம் – ஒதிமலை (கோவை மேட்டுப்பாளையம் அருகில் உள்ளது.
நான்முகனை ஸ்ரீ முருகப் பெருமான் அடைத்து வைத்திருந்த இருப்புச் சிறையும் இங்கு அமைந்துள்ளது)
பக்தர்களின் கனவில் தோன்றி, கண்ணாடிப் பெட்டியில் குறிப்பிட்ட பொருளை வைக்கப் சொல்லி உத்தரவிடும் ஸ்ரீ முருகப் பெருமான் அருளும் திருத்தலம் – காங்கேயம் சிவன்மலை.
வழக்கத்திற்கு மாறாக இடப்புறமாகத் திரும்பியிருக்கும் மயிலின் மீது ஆரோகணித்து ஸ்ரீ முருகப் பெருமான் அருளும் திருத்தலம் – கழுகுமலை.
கையில் கரும்பு ஏந்தி ஸ்ரீ முருகப் பெருமான் அருளும் திருத்தலம் – செட்டிக்குளம் (திருச்சி அருகில் அமைந்துள்ளது)
கருவறையில் ஸ்ரீ வள்ளியம்மையுடன் ஸ்ரீ முருகப் பெருமான் அருளும் திருத்தலம் – குமார கோயில் (குமரி மாவட்டம், தக்கலை)
பனை மரத்தினால் ஆன சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ முருகப் பெருமான் அருளும் திருத்தலம் – திருப்போரூர் (ஸ்ரீ சிதம்பர சுவாமிகளால் உருவாக்கப்பட்ட சக்கம் இத்திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது)
வஜ்ராயுதத்துடன் ஸ்ரீ முருகப் பெருமான் அருளும் திருத்தலம் – திருமலைக்கேணி (தென்காசி அருகில்)
ஸ்ரீ முருகப் பெருமான், ஸ்ரீ வள்ளி-தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் – விராலிமலை (திருச்சி அருகில்)
அருணகிரிநாதருக்கு திருப்புகழ் பாடும் வல்லமையை அளித்த ஸ்ரீ முருகப் பெருமான் அருளும் திருத்தலம் – வயலூர் (திருச்சி அருகில்)
எட்டுக்குடி மற்றும் சிக்கல் திருத்தலங்களில் அருளும் அதே திருக்கோலத்தில் ஸ்ரீ முருகப் பெருமான் அருளும் மற்றொரு திருத்தலம் – எண்கள் (திருவாரூர் அருகில்)
ஸ்ரீ முருகப் பெருமான் வேடன் ரூபத்தில் பழனியாண்டவராக ஸ்ரீ முருகப் பெருமான் அருளும் திருத்தலம் – கூவைமலை.
ஸ்ரீ பிரம்மசாத்தன் வடிவில் ஸ்ரீ முருகப் பெருமான் அருள்பாலிக்கும் திருத்தலம் – காஞ்சி குமரக்கோட்டம்.
ஸ்ரீ முருகப் பெருமான் வில்-அம்புடன் அருளும் திருத்தலம் – வேலுடையான்பட்டு (நெய்வேலி நகரியத்தினுள் அமைந்துள்ளது)
ஓம் முருகா !