சாபமும், கோபமும் நீங்க வழிபடுவோம் மஹா லட்சுமியை.. ஸ்ரீமந்நாராயணனின் சக்தியாக இருப்பவள், மஹாலட்சுமி. தம் மார்பில் வைத்துப் போற்று கிறார் மஹாவிஷ்ணு.
அதுவே, அவரது மார்பி ல் ஒரு மங்கள அடையாளமாக உள்ளதால், லட்சுமி எனப் போற்றப்படுகிறாள்.
லட்சுமி என்றால் அடையாளம்; பெண்பாற் சொல்லில் லட்சுமி என்ற சொல்லாகியது. அகில உலகங்களுக்கும், ஐஸ்வர்யங்களை வழங்கும் அம்பிகையாக, ஸ்ரீ மஹாலட்சுமி அருள்பாலிக்கிறாள்.ஐஸ்வர்யம் என்றால் ஈஸ்வரனுடையது என்று பொருள்.
சுவாமியை, சிவனாக, விஷ்ணுவாக பெண் தெய்வ வடிவாக, இப்படி ஏதாவது ஒரு நிலை யில் வழிபட்டால் தான், ஈஸ்வரனுடைய ஐஸ்வ ர்யம் அதாவது, லட்சுமி கடாட்சம் நமக்குக் கிடைக்கும். எங்கெல்லாம் துாய்மை, பக்தி, பிறருக்கு உதவும் கருணை, தெய்வ வழிபாடு போன்றவை இருக்கிறதோ, அங்கெல்லாம் லட்சுமி வாசம் செய்கிறாள். அதாவது, அங்கு செல்வ வளம், ஆரோக்கியம், இல்லற சுபிட்சம், வம்ச விருத்தி என்று எல்லா மங்களங்களும் நிறைந்திருக்கும்.
சூரிய உதய, அஸ்தமன காலத்தில், விளக்கே ற்றி வழிபடாமல் துாங்குவது, வசிப்பிடத்தை துாய்மை செய்யாமல், குப்பைக் கூளமாக வைத்திருப்பது நகம் கடிப்பது, பெரியவர்களை யும், மகான்களையும் அவமதிப்பது போன்ற, செய்யக்கூடாத செயல்களைச் செய்யும் இடத்தை விட்டு, லட்சுமி அகன்று விடுவாள்.
இதுபோன்ற சூழல்கள் ஏற்பட்டால், விஷ்ணு வாகவே இருந்தாலும், அம்பிகை அகன்று விடு வாள் என, நீதி நுால் கூறுகிறது. தேவ லோகத்தை ஆளும் இந்திரன், சகல ஐஸ்வர்ய ங்களும் உடையவர். கேட்டதையெல்லாம் தரக்கூடிய கற்பக மரமும், காமதேனுவும், இன்னும் பிற செல்வங்களும் அவரிடம் தான் இருக்கும்.
ரம்பை, ஊர்வசி, மேனகை போன்ற தேவலோ க அழகியர், அவரது சபையில் நாட்டியமாடும் பணிசெய்வர். பிருகஸ்பதி என போற்றப்படும் மகாஞானியாகிய தேவகுரு, அவரது ராஜகு ருவாக இருந்து, ஆலோசனை வழங்குவார். இல்லாதது என இல்லாத அளவிற்கு, சகல சவுபாக்கியங்களும், ஸ்ரீ மஹாலட்சுமி கடாட் சத்தால் பெற்று, தேவலோகத்தை ஆண்டு வந்த தேவேந்திரனுக்கும், போதாத காலம் வந்தது.
ஒரு சமயம், தம் சபையில் நடனமாடும் பேரழ கியாகிய ஊர்வசியுடன், பூந்தோட்டத்தில் சல்லாபம் செய்து மகிழ்ந்திருந்த இந்திரனை க் காண, துர்வாச முனிவர் வந்தார். சிவ பிரசா தமாக ஒரு பாரிஜாத மாலையை இந்திரனுக்கு அளித்தார்.
காமக் களியாட்டத்தால் ஆணவம் பெருகி, மதி யிழந்திருந்த இந்திரன், முனிவரையும் மதிக் காமல், பிரசாதத்தையும் மதிக்காமல், அம்மா லையை, தம் பட்டத்து யானையாகிய ஐராவத த்தின் மீது வீசினான்; யானை மேல் அம்மா லை பட்ட மாத்திரத்தில், இந்திரனின் சகல ஐஸ்வர்யங்களும் அவனை விட்டு விலகி, யானை வடிவிலேயே காட்டிற்கு ஓடி விட்டது.
துர்வாச முனிவரும் அதிக கோபம் கொண்டு, உன் ஆணவத்தால் இந்திர பதவியை இழப்பா யாக... உன் தலைநகராகிய அமராவதிப் பட்டி ணம், இனி அரக்கர் வசமாகக் கடவது... என, சபித்து வெளியேறி விட்டார்.
செய்வதறியாது திகைத்த இந்திரன், தன் நகரம் திரும்பினான்; முனிவர் சாபம் பலித்ததா ல், தேவர்கள் யாருமே இல்லை; எங்கும் தீய சக்தி கள். மங்களம் இல்லாத சத்தங்களும், சூழலு மாக மாறியிருந்தது. புத்தி தெளிந்த இந்திரன், தன் குருவாகிய தேவகுருவை அடைந்து, நடந்த விஷயங்களைக் கூறி, அழுதான்.
தேவகுரு அவன்மீது இரக்கம் கொண்டு லட்சு மி வாசம் செய்ய விரும்பும் இடங்களையும், விரும்பாத இடங்களையும் விளக்கி, சிவ அப ராதமும், குரு அபராதமும் சேர்த்துச் செய்து, நீ மகாபாவியாகி விட்டாய்; இதற்குப் பரிகாரம் கூறுவதே தவறு.
இருப்பினும், நீ என் சீடன் மட்டுமல்ல தேவ லோக அரசனாகவும் இருக்கிறாய். லட்சம் முறை பஞ்சாட்சர மகாமந்திரம் ஜபம் செய்து, முதலில் உன்னைத் துாய்மையாக்கிக் கொண்டு வா. பின் யோசிப்போம்... என்று அனுப்பி விட்டார்.
இந்திரனும், கங்கையில் மூழ்கி, குருநாதர் உபதேசித்த முறைப்படி பஞ்சாட்சரம் ஜபித்து, குரு இருப்பிடம் மீண்டான்.தேவகுருவும், தேவலோகம் சுபிட்சம் பெறவும், இந்திரனுக்கு லக்ஷ்மியின் அருள் மீண்டும் கிட்டவும், ஸ்ரீஜக ன்மாதாவாகிய லட்சுமி பூஜையையும், நவரா த்திரி விரத மகிமையையும் உபதேசித்தார்.
இந்திரனே... சகல உலகங்களையும் ஆளும் பராசக்தியே, துர்கா, லட்சுமி, சரஸ்வதி எனும் பல பெயர்களிலும், உருவங்களிலும் தோன்றி, படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொ ழில் புரியும் பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் ஆகியோரின் சக்தியாகி அருளுகிறாள். தீய சக்திகளை அழிக்க துர்கையாகவும், வழிபடும் பக்தர்களுக்கு சகல செல்வங்களையும் அருள லக்ஷ்மியாகவும், எல்லாருக்கும் நல்லறிவைத் தரும் சரஸ்வதியாகவும் இருப்பவள் அவளே.
நவராத்திரி நாட்களில் விரதம் இருந்து, மதுகைடபர், மஹிஷாசுரன் போன்ற கொடிய அரக்கர்களை அழித்தும், தேவர் முதலிய மூவுலகத்தோருக்கும், இன்னருள் புரிந்தும், கல்வியறிவும், மெய்ஞானமும் வழங்கியதால், நாமும் அந்த அன்னையை துர்கா, லட்சுமி, சரஸ்வதியாக, நவராத்திரி நாட்களில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.
அப்படி வழிபட்டால், நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்கள் அகலும். சாபத்தாலும், பிறரது கோபத்தாலும் மற்றும் பிறரால் ஏமா ற்றப்பட்டும், இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம். புத்தித் தடுமாற்றம் ஏற்பட்டு, சுயநி னைவிழத்தல், ஞாபக மறதி, படிப்பு வராமை போன்றவை அகன்று, நல்லறிவும், சத்புத்தி யும் ஏற்படும்.
எனவே, நீ அந்த பராசக்தியை நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கையாகவும், இரண் டாவது மூன்று நாட்கள் லட்சுமியாகவும், கடை சி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடு வாயாக. உனக்கு, துர்வாச முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கும்; மீண்டும் இந்திரலோகம் கிடைத்து, இழந்த ஐஸ்வர்யங்கள் உன்னை வந்தடையும், எனக்கூறி, மஹாலட்சுமி வழி பாட்டு முறைகளையும் உபதேசித்தார்.
இந்திரனும் அவ்வாறே விரதம் இருந்து நவ ராத்திரி வழிபாடு செய்தான். அம்பிகையின் அருளால், துர்வாச முனிவரே வந்து சாபம் நீக்கியருளினார்.
அமராவதிப்பட்டிணத்திலிருந்தும் அரக்கர்கள் வெளியேறி, பாதாளலோகம் சென்றனர். இந்திரலோகம் மீண்டும் புத்தொளி பெற்றது. ஸ்ரீ மஹாலட்சுமி தன் கடைக்கண்களை நோக்கி, சகல ஐஸ்வர்யங்களையும் இந்திரனு க்கு வழங்கினாள். சிவ அபராதம், குரு அபரா தம் நீங்கப் பெற்று, ஆணவம் முதலியன நீங்கி, இந்திரனும் மகிழ்ச்சியுடன் தேவலோகத்தை ஆளத் துவங்கினான்.
இவ்வரலாற்றைக் கேட்பவர்களும், படிப்பவர்க ளும் சகல செல்வங்களும் பெறுவர். கடன் தொல்லை இன்றி, வறுமை நீங்கப் பெறுவர். பிறரிடம் ஏமாந்த பணம், மீண்டும் கைக்கு வந்து சேரும்.
பூஜிக்கும் முறை: தாம்பாளத்தில், நடுவில் அறு கோணமும், சுற்றிலும் பதினாறு இதழ் தாமரையுமாகக் கோலமிட்டு அலங்கரித்து, நடுவில் குத்து விளக்கேற்றியும், அறுகோண த்திலும் பதினாறு இதழ்களிலும், அகல் விளக்குகள் ஏற்றியும், ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யே நமஹ... என்று, அர்ச்சனை செய்யவும்.
நிவேதனம் : இந்த சுலோகம் சொல்லி புஷ்பம் சாத்தி, பால் அன்னம், பாசிப்பருப்பு சுண்டல் மற்றும் சர்க்கரை பொங்கல் நிவேதனம் செ ய்து, தீபாராதனை செய்து, தெரிந்த பாடல்க ளைப் பாடலாம்.
பெண்களுக்கு : சுமங்கலிகளுக்கு சிகப்பு ரவி க்கைத் துண்டு மற்றும் மங்களப் பொருட்கள் வழங்கி, அம்பாளுக்கு ஆரத்தி எடுத்து, பூஜை யை நிறைவு செய்யவும்.
சுலோகம்
லக்ஷ்மீம் க்ஷீர ஸமுத்ரராஜ தநயாம்
ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்|
தாஸீபூத ஸமஸ்த தேவவனிதாம்
லோகைக தீபாங்குராம்||
ஸ்ரீமன்மந்தகடாக்ஷ லப்தவிபவாம் ப்ரம்
ஹேந்த்ர கங்காதராம்|
த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம் ஸரஸி
ஜாம் வந்தே முகுந்தப்ரியாம்||-
ஸ்ரீமகாலட்சுமி தியானம்
மகாலக்ஷ்மி பாற்கடலில் உதித்தவள். அலைம கள் எனப் பெயர் பெற்றவள். ஸ்ரீரங்கநாதன் எழுந்தருளும் இடமே வாஸஸ்தலமாக உடை யவள். தேவலோகப் பெண்கள் அனைவரும் பணிவிடை செய்ய மகிழ்ந்திருப்பவள். இவ்வு லகிற்கு ஐஸ்வர்யம் எனும் ஒளி தருபவள். பிரமன், ருத்ரன், இந்திரன் முதலியோர் அவளது கடைக்கண்பட்ட மாத்திரத்தில் சகல போகங்களையும் அடைந்தனர். மூவுலக நாய கனாகிய முகுந்தனின் ப்ரியநாயகியாகிய உன்னை வணங்குகிறோம். சகல செல்வங்க ளும் அருளுவாயாக!
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே திருவடி சரணம்..