Breaking News :

Thursday, November 21
.

உடைந்து போன சாமி படங்களை என்ன செய்யக் கூடாது?


இந்த பிரச்னை  கேள்வி எல்லோருக்கும் இருப்பதே. பல பேர் தங்கள் வீட்டில் பின்னமான விக்ரகங்கள், படங்கள் ஏதோ ஒரு #கோவிலிலோ அல்லது சாலையோரத்திலோ, மரங்கள் அடியிலோ போட்டுவிட்டு போய்விடுவதுண்டு. ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ அப்படி செய்வது மஹா பாபம். மன்னிக்க முடியாத குற்றம்.

 

வீட்டில் இருந்தவரை பூஜைகள் செய்து பிறகு அவசியம் இல்லாத பொது, பாழடைந்தவற்றை உதாசீனப்படுத்தக் கூடாது. அப்படி சாலையோரத்தில் உள்ள நமது ஹிந்து தெய்வங்களின் படங்களை பார்த்து இதர மதத்தவர்கள் 

நம் மதத்தை குறித்து பலவாறாக கிண்டலும், கேலியும் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த சந்தர்பத்தை நாம் அளிக்கக்கூடாது. 

 

மற்ற மதத்தவரின் தெய்வ படங்களை 

அதுபோல் எங்காவது கண்டதுண்டா என்பதை யோசித்து பாருங்கள்.

 

தயவு செய்து நமக்கு அவசியம் இல்லாத படங்களை, விக்ரஹங்களை அக்னி பகவானுக்கு ஆஹுதி கொடுப்பது (சமர்பிப்பது) நல்லது. அதெப்படி ஸ்வாமி படங்களை அக்னியில் போடுவது சரிதானா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். ஆனால் அக்னி பகவான் ஸர்வ பக்ஷகன். எல்லா சமயத்திலும் #புனிதமானவர். அதனால் பவித்ராக்னியில் ஸ்வாமி படங்களை 

சமர்பிப்பது தவறில்லை (அல்லது) ஓட்டமுள்ள நதியிலோ, ஏரியிலோ ‘நிமர்ஜனம்’ (கரைத்தல்) செய்யலாம்.

 

ஆனால் அக்னி பகவானுக்கு சமர்பித்தாலும், நதியில் போடுவதாக இருந்தாலும், முதலின் அந்த விக்ரஹத்தை/ படத்தை நமஸ்கரித்து “கச்ச கச்ச ஸுரஸ்ரேஷ்ட ஸ்வஸ்தான பரமேஸ்வர” என்று கூறிவிட வேண்டும். இதுவும் நிமர்ஜனம் (கரைப்பது) என்பதை தெரிந்து கொள்ளவும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.