தமிழ் மாதங்களில் கடைசியாக வருவது பங்குனி. இந்த மாதத்தில் வரும் உத்தர நட்சத்திரத்தை பங்குனி உத்திரம் என்று சொல்வர்.
இந்த பங்குனி உத்தரம் என்பது தமிழ்க் கடவுள் முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். ஆகவே, முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
மேலும், சிவனுக்கும்- பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.