Breaking News :

Thursday, November 21
.

பரிகாரம் என்றால் என்ன?


பசி எடுத்தால் சாப்பிடுவது பரிகாரம்.

தாகம் எடுத்தால் நீர் அருந்துவது பரிகாரம். நோய் வந்தால் மருந்து சாப்பிடுவது பரிகாரம்.

தோசம் என்றால் குறைபாடு என்று பொருள். குறைபாடுகளை சரி செய்வதே பரிகாரம் ஆகும். இயற்கையில் உருவாகும் எந்த ஒரு பொருளையும் மனிதனால் செயற்கையாக உருவாக்க முடியாது .

காலில்லாதவன் கம்பு ஊன்றி நடக்கலாம், கால்களை முளைக்க வைக்க முடியாது.  கம்புகள் கால்களுக்கு ஈடாகாது

கண் தெரியவில்லை என்றால் ஒரு அளவுக்கு கண்ணாடி அணிந்து சரி செய்யலாம், அறுவை சிகிச்சை செய்தும் கண் பார்வையை சரி செய்யலாம்.  
ஆனால் கண்ணின் அசல் தன்மையை திரும்ப கொண்டு வர முடியாது. கண் இல்லாதவர்களுக்கு இன்னொருவரிடமிருந்து கண்ணை பிடுங்கி வைக்கலாம்.  
ஆனால் செயற்கையாக கண்ணை உருவாக்க முடியாது.

உடைந்த எலும்பை ஒட்ட வைக்கலாம்.  ஆனால் புதிய எலும்பை உருவாக்க முடியாது. இது போல் பரிகாரம் என்பது ஒரு வகையில் குறைபாட்டு மேலாண்மையே தவிர முற்றிலும் எதையும் உருவாக்க முடியாது.

இயற்கையில் இல்லாத ஒன்றை மனிதனால் உருவாக்க முடியாது. மழை வருவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் குடை பிடிப்பது ஒரு பரிகாரம்.  
ஆனால் முற்றிலும் உடல் மழையில் நனையாது என்று கூற முடியாது.  

மழையுடன் பலத்த காற்றும் வீசினால் குடை என்ற பரிகாரம் பலன் தராது. குடை காற்றில் பறந்து விடும். வறட்சியை போக்க யாராலும் மழையை வரவைக்க முடியாது. குளிரை போக்க யாராலும் வெயிலை வரவைக்க முடியாத.

பஞ்ச பூதங்கள் யாருக்கும் கட்டுப்படாது. நன்றாக புரிந்துகொள்ளுங்கள், இல்லாததை உருவாக்குவதல்ல பரிகாரம்.  
குறைபாடுகளை சமாளிப்பதுதான் பரிகாரம். குறைபாடுகளுடன் வாழ பழகிக்கொள்வதே பரிகாரம்.

பழுதுபட்ட வாகனங்களை பழுது நீக்கி சரி செய்வது போன்றதுதான் பரிகாரம். மனம் என்னும் வண்டியை பழுது நீக்கி தொடர்ந்து செயல் பாட்டில் வைத்திருப்பதே பரிகாரம்...

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.