Breaking News :

Thursday, November 21
.

பொங்கல் வழிபடும் முறை


1 .பொங்கல் பண்டிகையின் போது பெண்கள் சூரியன் உதிப்பதற்கு  முன்பு எழுந்து நீராடிவிட்டு, வீட்டு முற்றத்தில் நீர் தெளித்து கோலமிட வேண்டும்.

2. வீட்டின் முற்றத்தில் ஒரு பகுதியை பசு சாணத்தால் மெழுகி, வெள்ளையடித்து, காவி பூச வேண்டும். அரக்கு நிறம் துர்க்கா தேவிக்குரியது. துன்பங்கள் விலகி மங்கல வாழ்வும், இன்பமும் நிலைக்கதான் காவி பூசப்படுகிறது.

3. இந்த பழக்கம் தமிழகத்தின் தென் பகுதிகளில் இன்றும் நடக்கிறது. வீட்டின் முன்பகுதியில் கோவிகளில் அடிப்பதுபோல காவியும் வெள்ளையும் அடித்து அலங்காரம் செய்வார்கள்.

4. அதன் பிறகு அந்த பகுதியை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் மலர்களால் அலங்கரித்து, பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும்.

5. அதன் பின்னர் குத்து விளக்கேற்றி, பூரண கும்பம் வைத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கல பொருட்களையும் வைத்து படைக்க வேண்டும்.

பொங்கல் வைக்கும் முறை

1. விநாயகரை முதலில் மனதில் நினைத்து, குலதெய்வம்,  இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன் பின்னர் ஒரு கைபிடி அளவு மஞ்சள் எடுத்து அதில் பிள்ளையாரை போன்று பிடித்து பானையின் அருகிலேயே வைக்க வேண்டும்.

2. ஒரு புதுப்பானையை எடுத்து அதன் வாய்ப்புறத்தில் மஞ்சள் இலை, மாவிலை கட்ட வேண்டும். பானையின் மேல்புறத்தில் திருநீறை குழைத்து, 3 இடங்களில் பூசி, சந்தனம், குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும்.

3. பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்டி, கற்பூரதீபத்தினால் அடுப்பில் நெருப்பை உண்டாக்கி பற்ற வைக்க வேண்டும்.

4. பின்னர் தம்பதியராக சேர்ந்து குலதெய்வம்,  சூரியனை வணங்கி, குலதெய்வம்,  இஷ்டதெய்வங்க ளை பிரார்த்தனை செய்து பானையை தூக்கி அடுப்பில் வைக்க வேண்டும்.

5. பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என்று குரல் எழுப்பிக்கொண்டே பச்சரிசியை இருகைகளாலும் அள்ளி போட வேண்டும். பின்னர்  சூரியபகவானை வணங்கியபடி பானையை 3 முறை சுற்றி மூட வேண்டும்.

சூரிய பகவானுக்கு படையல் வைக்கும் முறை

1. பொங்கிய பொங்கலை 3 தலைவாழை இலையில் இட்டு படைத்து பழங்கள், கரும்பு, முதலியவற்றை கொண்டு அர்ச்சித்து, தூபதீபம் காட்டி சூரியபகவானை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும்.

2. தைப் பொங்கலை சூரிய பொங்கல் என்றும் சொல்லுவார்கள். காரணம் முதல் படையல் சூரியனுக்குதான் என்று விவசாயிகள் கூறுவார்கள். அதனால் பொங்கல் பொங்கியதும் 3 தலைவாழை இலையை வீட்டின் பின்புறம் கிழக்கு திசை பார்க்கும் படி போட்டு சூரியனுக்கு தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டுவார்கள்.

3. அப்படி தீபாராதனை காட்டும் போது குலதெய்வத்தையும், மூதாதையர்களையும் நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

4.  அதன் பிறகே வீட்டின் பூஜை அறையில் இலை போட்டு வீட்டு சாமி கும்பிடுவார்கள். அப்படி வீட்டின் பின்புறம் படையல் போட இடம் இல்லாதவர்கள், வீட்டின் மாடியில் போட்டு சூரிய பகவானை வணங்க வேண்டும்.

5. இதனால் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து கஷ்டங்களும் நீங்கி சூரியனுடைய பிரகாசமான ஒளியை போன்றே உங்களுடைய வாழ்க்கையும் பிரகாசிக்கும் என்பது நம்பிக்கை. சூரிய பகவானுடைய ஆசீர்வாதம் இருந்தாலே நம்முடைய பாதி பிரச்சனை தீர்ந்து விடும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.