Breaking News :

Saturday, April 12
.

பூஜையறை எப்படி இருக்க வேண்டும்?


இறை வழிபாட்டின் மூலம் தான் நம்முடைய வாழ்க்கை முழுமை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அதன் அடிப்படையில், நம்முடைய வீட்டில் கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன ஆன்மீக குறிப்புகள் என்னென்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

 

 உங்களால் இந்த குறிப்புகளை எல்லாம், பின்பற்ற முடியவில்லை என்றாலும், முடிந்தவரை உங்களுடைய பிரச்சனை தீர்வதற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து பயனடையலாம்.

 

முதலில் உங்கள் வீட்டு நில வாசப்படியில் வேப்பிலையோ அல்லது மா இலையோ கட்டாயம் கட்டியிருக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ அந்த இலைகளை மாற்றினால் போதும். இவைகளை தினம்தோறும் கொண்டுவந்து புதியதாக வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.  

 

 மணி ப்ளாண்ட் என்னும் செடியை வீட்டின் வட-கிழக்கு திசையில் வைத்து வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

 

 கடிகாரம்:

கடிகாரம் என்பது அனைவரின் வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு பொருள். அதனை சரியான இடத்தில் மாட்டுவதால் நற்பலன்கள் வந்து சேரும்.எங்கு மாட்டகூடாது?

கதவின் மேல் மாட்டகூடாது.

தெற்கு பகுதி சுவற்றிலும் மாட்டகூடாது.

 

எங்கு மாட்டலாம்?

கிழக்கு,மேற்கு அல்லது வடக்கு திசையில் மாட்டுவது சிறந்தது

 

 கண்ணாடி:

நாம் தினம் தினம் முகம் பார்க்கும் கண்ணாடியை எங்கு வைக்கிறோமோ அதற்கேற்றாற் போல் தான் நல்லவையும் தீயவையும் பிரதிபலிக்கும்.

செவ்வகமோ அல்லது சதுர வடிவிலோ கண்ணாடி இருப்பது சிறந்தது. அதோடு வட-கிழக்கு திசையில் 4-5 அடி உயரத்தில் கண்ணாடியை மாட்டுவது சிறந்தது.

 

7 குதிரைகள் கொண்டஓவியம்7 குதிரைகள் கொண்ட ஓவியத்தை நாம் வீட்டில் வைப்பது வழக்கம். அனால் இதை அணைத்து அறைகளிலும் வைத்துவிட முடியாது.

 

வைக்க வேண்டிய அறைகள்:

ஹால்,படுக்கையறை போன்றவற்றில் இந்த ஓவியத்தை மாட்டி வைத்தால் செல்வம் சேரும்.

 

வைக்க கூடாத இடங்கள்:

நுழைவு வாசல், சமையலறை, குளியலறை.

 

அதிர்ஷ்ட பொருட்களில் ஒன்று ‘ஆமை சிலை’ ஆகும். பொதுவாக ஆன்மீகத்தில் ‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்று பழமொழி கூறப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆமை வாஸ்து சாஸ்திரத்தில் அதிர்ஷ்ட மழை பொழிய செய்யும் ஒரு அற்புத பொருளாக குறிப்பிட்டுள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் உருப்படாது, செயல்படாது என்று கூறுவது முறையானது அல்ல! பல தமிழ் பழமொழிகள் அர்த்தம் புரியாமல் திரித்து கூறுவது உண்டு. இது அடுத்தடுத்த காலகட்டங்களில் வேறு விதமாக காண்பிக்கப்படுவதும் உண்டு.ஆமை இருக்கும் இல்லம் நிச்சயம் உருபடும். ஒரு ஆமை படம் அல்லது சிலை அதிர்ஷ்ட குறியீடாக கருதப்படுகிறது. இது படமாகவோ அல்லது சிலையாகவோ நீங்கள் உங்களுடைய மீன் தொட்டி அல்லது வரவேற்பறையில் அனைவரின் பார்வையும் படும்படி வைத்தால் அங்கு அதிர்ஷ்டம் நிறையுமாம். உலோகம், ஸ்படிகம், மரம், கல் போன்றவற்றால் உருவாகக்கூடிய ஆமை ரொம்பவும் விசேஷமானது. இந்த வகையில் ஆமையை வாங்கி வடமேற்கு திசை அல்லது தென்மேற்கு திசை, தென்கிழக்கு திசை போன்றவற்றில் வைத்தால் யோகங்களுக்கு பஞ்சம் இருக்காது.

 

 படுக்கை அறையில் செய்யக்கூடாத விஷயங்களில் ஒன்று அங்கு சுவாமி படங்களை மாட்டி வைப்பது ஆகும். சுவாமி படங்கள் மற்றும் அல்லாமல் படுக்கை அறையில் பெரிய அளவிலான முகம் பார்க்கும் கண்ணாடிகள் மற்றும் மீன் தொட்டிகள் போன்றவையும் அமையப் பெறக் கூடாது. இவைகள் மூன்றாம் மனிதர் நம்மை பார்ப்பது போலவே தோற்றம் தரும். படுக்கை அறை எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் சுவாமி படங்களை வைப்பது துரதிருஷ்டத்தை கொடுக்கும்

 

அது மட்டும் அல்லாமல் படுக்கை அறையில் நீங்கள் சிறு விளக்குவது எரிய விட்டிருக்க வேண்டும். கொஞ்சம் கூட வெளிச்சம் இல்லாமல் படுக்கையறையில் உறங்க கூடாது. சிலர் தூக்கம் வராது என்பதற்காக இப்படி கொஞ்சம் கூட வெளிச்சம் இல்லாத நிலையை உருவாக்கி வைத்திருப்பார்கள். இது முற்றிலும் தவறான செயல் ஆகும். இதனால் தம்பதியருக்குள் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும். ஜீரோ வாட்ஸ் பல்புகள் பொருத்தப்பட்டிருந்தால் அதில் நீலம் அல்லது அடர் மஞ்சள் நிற ஒளியை ஏற்படுத்துவது நல்லது. இது கணவன் மனைவிக்குள் அன்னோன்யத்தை அதிகரிக்க செய்யும் ஒரு நிறமாக இருக்கிறது

 

உங்கள் வீட்டின் நலனிற்காக, ஒரு வெள்ளருக்கன் கட்டையை எடுத்துவந்து, சுத்தமாக மஞ்சள் தண்ணீரில் கழுவி, அந்த கட்டையின் மேல், மஞ்சள் பூசி சேர்த்து  ஒரு குங்குமப் பொட்டு வைத்து, ஒரு சிகப்பு கயிறு கட்டி உங்கள் நிலவாசப்படியில் தொங்கவிடுவது வீட்டிற்கு மிகவும் நல்லது.* *தினம்தோறும் ஊதுபத்தி காண்பிக்கும் போது இந்தக் கட்டைக்கும் காண்பித்து விடுங்கள். இப்படி செய்யும்பட்சத்தில் உங்கள் வீடு ஒரு பாதுகாப்பு வட்டத்திற்குள் வந்துவிடும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.