ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம்
உம் பாதம் ஒன்றே போதும். உலக சூழ்நிலைகள் மாறும். மாந்தருக்கு நலமே உண்டாகும்.
1963 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகளின் முன்னிலையில் நிகழ்ச்சிகள் நடத்தின. அப்போது முன்னாள் அமெரிக்க தூதர் டாக்டர் ஆல்பர்ட்ஃபிராங்க்ளின் அவரது அனுபவத்தை தெரிவித்தார்.
மீனாட்சி அம்மன் ஆலயத்தின் விமான மண்டபத்தில் கூடியிருந்த பிரமுகர்கள் மரியாதையுடன் விலகி வழிவிட்டார்கள். ஒரு முதியவர் மெதுவாக நடந்து வருவதை பார்த்தேன். அவர்தான் காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகள் என்று நினைத்துக் கொண்டேன். அவர் எளிமையானவர். தனது ஆன்மீக சக்தியை தவிர வேறு எதையும் தனக்கென வைத்து கொள்ள மாட்டார்.
தமிழ்நாட்டில் ஆலய கும்பாபிஷேக விழாவில் கூடி இருந்த பிரமுகர்கள், செல்வந்தர்கள், முதலாளிகள் அனைவரும் எளிமையே உருவான காஞ்சி பரமாச்சாரிய சுவாமியிடம் கைகட்டி நிற்பதைக் கண்டேன்.
அவரின் முதுமையான உடலுக்குள் அதிசயக்கத்தக்க பலமும் மனோதிடமும் இருந்தது.
இரும்பு கம்பிகளை பிடித்துக்கொண்டு அவர் மளமளவென்று கோபுரத்தின் உச்சிக்குச் செல்லும் படிகளில் ஏறத் தொடங்கினார். கைத்தடியை ஊன்றிக்கொண்டு பிராதன வாயிலின் மையப் பகுதியில் அமர்ந்தார்.
அனைவரின் கரங்களும் அவரை நோக்கிக் குவிந்தன. கும்பாபிஷேக விழா முடியும் வரை அவருடைய பக்தர்கள் கட்டுப்பாடுடன் அமர்ந்திருப்பதை பார்த்தேன். ஆல்பர்ட் ஃபிராங்க்ளின் ஆச்சாரிய சுவாமிகளின் அறுபதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
மத எல்லைகளைக் கடந்து வந்த பெரியவர்களின் ஆசிகளை பெறும் தகுதி கிடைத்ததற்கு பெருமை என்று கூறினார். அவர் பட்டம், பதவி, பணம் எதையும் பொருட்படுத்தாவிட்டாலும் பாரத மக்களின் பெருமையை உலகெங்கும் பரப்பும் ஒளி விளக்காகத் திகழ்வதாக கூறினார்.
21 வயது நிறைவதற்குள் பாரத தேசம் முழுவதையும், கால்நடையாகவும் பல்லக்கிலும் சென்று மக்கள் அனைவரையும் ஆசிர்வதித்து, கலாச்சாரப் பெருமையையும் ஆன்மீக உணர்வுகளையும் தூண்டி ஒளிபெறச் செய்த பெருமை மகா சுவாமிகளுக்கு உரியது.
அவரை பாலகனாக இருந்து பாரத தேசத்தின் பெருமை ஒளிவீசிட திக்விஜயங்களின் மூலம் நிகழ்த்திய ஆதிசங்கர பகவத்பாதருக்கு நிகரானவராகவே நான் கருதுகிறேன் என்றார்.
அருள் தரும் வள்ளல் காஞ்சியிலிலே அவதரித்து வந்தார். நாம் கண்டோம். அனைத்து உலக
மக்களும் அவர் ஆசி பெறவே வந்தாரே ! கந்ததாசன் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம். ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்.