Breaking News :

Thursday, November 21
.

சமாதியில் இருந்து வெளியில் வந்து உரையாடிய ராகவேந்திரர்


தான் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்க ளை புரிந்து மக்களை காத்தவர் ஸ்ரீராகவே ந்திரர். அவர் தன் இறப்பிற்கு பிறகும் தன் னை நாடி வரும் பக்தர்களை காத்தருள்வ தோடு தேவைப்பட்டால் நேரிலே தோன்றி அருள்புரிபவர். 

பிரிட்டிஷ் காலத்தில் ராகவேந்திரரே சமா தியில் இருந்து நேரில் தோன்றி ஆங்கிலே யரோடு உரையாடிய ஒரு உண்மை சம்ப வத்தை தான் இந்த பதிவில் பார்ப்பிக்கப் போகிறோம்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது மாஞ்சாலி என்னும் கிராமம். இங்கு தான் பகவான் ஸ்ரீராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்தார். இந்த இடத்தில் தான் பிரகலாதன் யாகம் செய்தான் என்பதால் அதே இடத்தை தன து ஜீவசமாதிக்காக தேர்ந்தெடுத்தார் ஸ்ரீ ராகவேந்திரர். 

அப்போது அந்த பகுதியை ஆண்ட சுல்தா ன் மசூத் கான் என்ற மன்ன னும் அதற்கு ஒப்புக்கொண்டு அந்த இடத் தை ராகவேந் திரருக்கு கொடுக்க, அந்த இடத்தில் கடந்த 1671ம் ஆண்டு ஜீவ சமாதி அடைந்தார்.

கி.பி. 1812ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. அதன் படி கோவில் நிலத்திற்கு யாரும் வாரிசு இல்லை என் றால் அந்த இடத்தை அரசாங்கமே எடுத்து க்கொள்ளலாம். அந்த சட்டத்தின்படி பிரு ந்தாவனத்திற்கு தானமாகக் கொடுக்கப் பட்டிருந்த நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது.

இதற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மன்னர் சுல்தான், பகவான் ராகவேந்திரருக்குஇந்த இடத்தை பல வருடங்களுக்கு முன்பாகவே தானம் செய்ததால் இந்த இடம் ராகவேந்திரருக் கே சொந்தம் என போராடினர். 

இதனை அடுத்து பிரிட்டிஷ் அரசாங்கம், சர் தாமஸ் மன்றோ என்பவற்றின் தலைமை யில் ஒரு குழுவை அமைத்து இதற்கான தீர்வை கண்டறிய உத்தரவிட்டது.

மன்றோவும் அவரது குழுவினரும் ராகவே ந்திரரின் ஆலயத்தை நோக்கி விரைந்த னர். மன்றோ இந்து மதம் மீது மரியாதை கொண்டவர் என்பதால் தன்னுடைய காலனி மற்றும் தொப்பியை வெளியிலே யே கழட்டிவிட்டு ஜீவசமாதி அருகே சென்றார். பின் அங்கு யாரோ ஒருவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு ஆங்கிலத்தில் உரையாட ஆரமித்தார். 

அனால் அவருடன் வந்த குழுவினருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் என்றால் அங்கு யாருமே இல்லை ஆனால் மன்றோ மட்டும் தனியாக பேசிக்கொண்டிருக்கிறா ர்.  இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று நினைத்தனர் எல்லோரும்.

மன்றோவோ, பிரிட்டிஷ் ஆணை குறித்த முழு விவரத்தையும் தெளிவாகா ஆங்கி லத்தில் எடுத்துரைத்துக் கொண்டிருக்கி றார். அதன் பிறகு மருதரப்பில் உள்ள நியத்தையும் கேட்டறிகிறார். 

இந்த உரை யாடல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை நீடிக்கிறது. அதன் பிறகு ஆங்கில பாணி யில் ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தார். அவருடன் வந்த குழுவினர் திகை ப்போடு, யாரிடம் இவ்வ ளவு நேரம் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று கேட்டனர்.

அங்கே ஒரு பெரியவர், ஒளிவீசும் கண்க ளோடு காவி உடையில் உயரமாக இருந் தாரே அவரிடம் தான். அவரிடம் நான் அர சின் சட்டம் குறித்து விளக்கினேன். அவரு ம் இந்த சொத்து பற்றிய தெளிவான விளக்கத்தை கொடுத்தார். அதில் இருந்து இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பதை நான் தெளிவாக புரிந்து கொண் டேன் என்றார். 

அதோடு அந்த நபருக்கு எப்படி இவ்வளவு ஆங்கில அறிவு, அவரின் ஒளிவீசும் கண் களும், தெளிவான ஆங்கில உச்சரிப்பும் என்னையே பிரமிக்க வைத்தது என்று அவர் கூறுகையில் அனைவரும் ஆச்சர்ய த்தோடு பார்த்தனர். இதனை கவனித்த அவர் ஏன் நீங்கள் அவரை பார்க்கவில் லையா? என்று குழுவினரைப் பார்த்து கேட்டார்.

எங்கள் கண்களுக்கு அங்கு யாருமே தெரியவில்லை என்று கூறினார்கள் அந்த குழுவினர். தன்னோடு உரையாடியவர் பகவான் ஸ்ரீராகவேந்திரர் தான் என்பதை உணர்ந்த மன்றோ, கடந்த நூற்றாண்டில் ஜீவ சமாதி அடைந்த மகான், பிரச்னையை தீர்க்க நேரில் தோன்றி தன் மொழியில் தன்னோடு உரையாடியதை எண்ணி பூரி த்துப்போனார். 

அந்த சொத்து மடத்திற்கே சொந்தம் என்ப தை அரசிற்கு தெரிவித்த தோடு அன்று முதல் பகவான் ஸ்ரீராகவேந் திரரின் தீவிர பக்தரானார் சர் மன்றோ. இந்த தகவல் அப்போதைய சென்னை மாகாண கெஜட் டிலும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குருவே சரணம்...

- விஜயராகவன்

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.