Breaking News :

Thursday, November 21
.

சங்கடஹர சதுர்த்தி பூஜை நாள்


 

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்

வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்

வெள்ளைக்கொம்பன் விநாயகனைத் தொழ வினைகள் துள்ளியோடும்

தொப்பையப்பன் விநாயகனை அப்பமும் பழம் அமுதும் படைத்து தொழ வினையறுமே

அம்பிகை புதல்வனே அதிசயம் பல என் வாழ்வில் நிகழ்த்துபவனே

ஆவலோடு உனை தேடி வந்து வந்த அடியாரின் வேண்டுதலை நிறைவேற்றுபவனே

இன்ப மய வாழ்க்கையை எனக்கு அருளியவனே

ஈசனின் மகனே ஈடில்லா கருணையை பொழிந்து அருள்பவனே

உலகில் உள்ளோர் எனை போற்றிட நல் வழி காட்டி எனை அழைத்து செல்பவனே

ஊர் கோடியில் கோவில் கொண்டு ஊர் மக்களை பாதுகாப்பவனே

எளிமையாய் கிடைக்கும் அருகம்புல் , எருக்கம் பூ , தும்பை மலர் கொண்டு பூஜிக்க ஆனந்தம் அடைபவனே

ஏற்றவனாக உனக்கு, பக்தியோடு உனை பூஜிக்க, எனக்கு அனுகிரகித்தவனே

ஐங்கரத்தோனே, சரணம் சொல்லி வணங்குபவனுக்கு அபயம் அளிப்பவனே

ஒருமுகமாக மனதால் உனை துதிக்க அருள்வாய் கணநாதனே

ஓடோடி வந்திடுவாய் உலகில் எங்கிருந்தும் உனை கணபதியே என கூப்பிட்டால்

 

சங்கடஹரசதுர்த்தி நாளில் உனை மலர் மாலை சாற்றி அருகம்புல் கொண்டு பூஜிக்கிறேன் அருள்வாய்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.