Breaking News :

Thursday, November 21
.

சஷ்டி விரதம் பூஜை பலன்கள்


விரதங்கள் என்பது ஆன்மிக நம்பிக்கை மட்டுமின்றி அறிவியலும், ஆரோக்கியமும் அடங்கியுள்ள ஒன்று. அதற்காகத்தான் அக்காலம் முதல் விரதங்களை கடைபிடித்துள்ளனர்.

கோவிலில்* *சஷ்டி* *விரதம்*

குழந்தை பாக்கியத்தை அருளும் இந்த சஷ்டி விரதத்தை எளிமையாக கோவிலிலும் கடைபிடிக்கலாம். முடிந்த வரை முருகன் கோவிலில் விரதம் இருப்பது விசேஷமானது. அதுவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

வீட்டில் சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

வீட்டிலேயே சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வரலாம்.

பிறகு பூஜையறையில் முருகன் படத்தின் முன்பு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றவேண்டும்.

முருகனுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர் மாலை சாற்றி அலங்காரம் செய்து வழிபடலாம். அவருக்கு இஷ்ட நைவேத்தியமான அவல் உணவுகளை படைக்கலாம்.

இவ்விரதத்தை முழு நேரமும் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.

வேலைக்கு செல்பவர்கள் காலையில் பூஜையை முடித்து விட்டு விளக்கை மலை ஏற்றி விட்டு பின்னர் வேலைக்கு தாராளமாக செல்லலாம். மீண்டும் மாலையில் இதேபோல் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.

வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம். குறிப்பாக கந்தசஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம்.

மேலும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் விரதத்தின்போது சொல்ல வேண்டிய திருப்புகழை பாராயணம் செய்யலாம்.
விரதத்தின் பலன்கள் :

சஷ்டி விரதம் இருந்தால்,
💫 குழந்தைப் பேறு கிட்டும்.
💫 திருமணத்தடை அகலும்.
💫 செல்வ வளம் பெருகும்.
💫 நினைத்தது நிறைவேறும்.

எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அத்தனையும் தவிடு பொடியாகிவிடும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.