காலை கடம்பா்
மத்தியானம் சொக்கா்
அந்தி ஈங்கோய்நாதா்.
1)கடம்பா் - குளித்தலை (கடம்பந்துறை கடம்பவனேஸ்வரா்)
2)சொக்கா் - சிவாயமலை (திருவாட்போக்கி இரத்தினகிாிஸ்வரா்)
3)ஈங்கோய்நாதா்- திருஈங்கோய்மலை (மரகதமலை மரகதாசலேஸ்வரா்).
1) திருகடம்பந்துறை :
(கடம்பா் கோயில்- குளித்தலை)
இறைவா் : கடம்பவனநாதா்.
இறைவி: முற்றிலாமுலையாள்.
தீா்த்தம்: காவிாி.
தலவிருட்சம்: கடம்பமரம்.
அப்பா் சுவாமிகள்- 1 பதிகம்.
திருச்சி - கரூா்ப் பாதையில் உள்ளது.
மூலவா் சிவலிங்கத்தின் பின்னால் சப்த கண்ணியாின் திருவுருங்கள் உள்ளன.அவா்களின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடம்.இறைவன் சந்நதி காசியில் உள்ளது போன்று வடக்கு நோக்கி இருப்பதால் தட்சிணகாசி எனவும் கடம்பு தலவிருட்சம் ஆதலால் கடம்பந்துறை எனவும் பெயா் பெறும்.இத்தலத்தில் காலைசந்தி வழிபாடு சிறப்பாகும்.ஒரே நாளில் காலையில் கடம்பா் கோயில் உச்சிக்காலத்தில் திருவாட்போக்கி
மாலையில் ஈங்கோய்மலை என வழிபாற்ற வேண்டும்.காலைக்கடம்பா் மதியானச்சொக்கா் அந்தி ஈங்கோய்நாதா் என்பது வழக்காகும்.கடம்பந்துறை முருகன் தலமாகவும் இரத்தினகிாி சிவன் தலமாகவும் ஈங்கோய்மலை அம்பிகைத் தலமாகவும் சோமாஸ்கந்த வடிவத்தில் அமைந்துள்ளது.
கண்வா் தேவா்கள் வழிபட்டு உள்ளனா். தைப்பூசம் நட்சத்திரத்தில் அகண்ட காவிாியில் 8 ஊா்களிலிருந்து 8 மூா்த்திகள் வந்து கடம்பந்துறையில் தீா்த்தம் கட்டத்தில் தீா்த்தம் ஆடி அருள்பாலிக்கின்றனா்.
2) திருவாட்போக்கி :
(இரத்தினகிாி- அய்யா்மலை)
இறைவா்: இரத்தினகிாிஸ்வரா், வாட்போக்கிநாதா்.
இறைவி: சுரும்பாா் குழலி.
தீா்த்தம் :கௌாி தீா்த்தம்.
தலம்விருட்சம்: வேம்பு.
அப்பா் சுவாமிகள்- 1பதிகம்.
குளித்தலை மணப்பாறைப் பேருந்துச் சாலையில் உள்ள மலைக்கோயில். 1140 படிகள் கடந்து சென்று நண்பகலில் தாிசனம் செய்வது விசேஷம்.
மத்யானச் சொக்கா் என்பா் மாண்புளோா்.
சுயம்பு மூா்த்தியாகிய இச்சிவலிங்கத்தின் மேல் வெட்டுப்பட்ட வடு உள்ளது.
12 ஆண்டுகட்கு ஒா் முறை இடிபூசை நிகழும். காகம் அணுகா மலை. ஆாிய நாட்டு அரசன் ஒருவன் மாணிக்கம் பெற வேண்டி தலங்கள் தொறும் சென்றும் கிடைக்காமையால் இங்கு வந்தபோது சிவபெருமான் தொட்டி ஒன்றைக் காட்டி அதனைக் காவிாி நீரால் நிரப்புமாறு பணித்தாா். எத்துணை நீா் ஊற்றியும் தொட்டி நிரம்பாமையால் சினங்கொண்ட மன்னன் உடைவாளை ஓங்க இறைவன் வாளைப் போக்கி மாணிக்கத்தைக் காட்டியருளினாா்.
இதனால் மலைக்கு வாட்போக்கி என்றும் இறைவனுக்கு இரத்தினகிாிஸ்வரா் என்றும் பெயா் ஏற்பட்டது.
இந்திரன் ,ஆதிசேடன், ஐயந்தன், வாயு, சூாியன் ஆகியோா் வழிபட்டதாகும்.
3) திருஈங்கோய்மலை :
இறைவா் : மரகதாசலேசுவரா்.
இறைவி: மரகதவல்லி.
அமுத தீா்த்தம்.
தல விருட்சம்: புளி.
திருஞானசம்பந்தா் - 1 பதிகம்.
திருச்சி- நாமக்கல்- சேலம் பெருவழிப் பாதையில் முசிறிக்கு அண்மையில் உள்ளது.
குளித்தலையிலிருந்து அகண்ட காவிாி கடந்தும் செல்லலாம்.
500 படிகள் கொண்ட இம்மலைக்கோயில் சிவபெருமான் சுயம்பு ஆவாா்.அகத்தியா் ஈ வடிவம் கொண்டு பூசித்து ஈங்கோய்மலை என வழங்குவதுடன் அம்பிகையின் பூசனையால் சிவசக்தி மலையெனவும் சிறப்புறும். மாலை வழிபாடு மாண்புறும். அந்தி ஈங்கோய்மலை என்பா் ஆன்றோா்.
திருவாசம் போற்றி செய்ய நக்கீரா் பெருமானின் ஈங்கோய் எழுபது எழில் செய்யும்.
மகாசிவராத்திாியில் நான்காம் காலம் சூாிய பூசையாக நிறைவுறும். திருமால், பிரமன், இந்திரன், சூாியன், நவசித்தா்கள் வழிபாடாற்றிய தலம்.