சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்திருக்கும் திருப்போரூரிலிருந்து திருக்கழுகுன்றம் செல்லும் பிரதான சாலையில் சுமார் ஆறு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிறுதாவூர். இங்கு தான் அன்னை ஸ்ரீ ஆரணவல்லி அம்பிகை ஸ்ரீ பூதபுரீஸ்வரருடன் அருள்பாலிக்கிறார்.
பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கருங்கற்களால் நில்மாணிக்கப்பட்ட திருக்கோவில் இது. கல்வெட்டுக்களில், நரசிங்க சர்வேலி மங்கலத்து ஸ்ரீ பூதீஸ்வரர் என்று இறைவனின் திருநாமம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழ மன்னனான ஸ்ரீ இராஜராஜனின் (கி.பி.991) ஆட்சிக் காலத்தில் நந்தா விளக்கு எரிப்பதற்காக இக்கோவிலுக்கு தொண்ணூறு ஆடுகளை அளித்துள்ளார் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
பஞ்சபூதத் தலங்களுக்கு வழிபாடு செய்தால் எத்தகைய பலன்கள் ஒருவருக்கு கிடைக்குமோ அத்தனைப் பலன்களும் சிறுதாவூர் ஸ்ரீ பூதகிரீஸ்வரர் சமேத ஸ்ரீ ஆரணவல்லி அம்பிகைய வணங்கினால் கிடைக்கும் என்கின்றனர்.
பஞ்சபூதத் தலங்களின் பலன் வேண்டுவோர் இந்த ஆடியிலே சென்று வழிபட வேண்டிய திருக்கோவில்.
ஓம் சக்தி ! ஓம் நமசிவாய !!