சிவபெருமானின் சொல்படி வாசுகி பாம்பும் மற்ற பாம்புகளும் அடைக்கலம் புகுந்த திருக்கோவில்.
கர்நாடக மாநிலத்தில், பெங்களூருவிலிருந்து 280 கி.மீ. தொலைவிலும், மங்களூருவிலிருந்து 105 கி.மீ. தொலைவிலும், சுப்ரமணியா சாலை தொடர் வண்டி நிலையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது குக்கி ஸ்ரீ சுப்ரமணியா திருக்கோவில்.
ஐந்தாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது குக்கி ஸ்ரீ சுப்ரமணியா திருக்கோவில்.
ஸ்ரீ ஆதிசங்கரர் பாடல் பெற்றது குக்கி ஸ்ரீ சுப்ரமணியா திருக்கோவில்.
ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ சுப்ரமணியர் அருளும் திருக்கோவில் குக்கி ஸ்ரீ சுப்ரமணியா திருக்கோவில்.
ஒன்பது கால பூஜைகள் நடைபெறும் திருக்கோவில் குக்கி ஸ்ரீ சுப்ரமணியா திருக்கோவில்.
காலை கோபூஜை, மதியம் உச்சி கால பூஜை, மாலை சாயரட்க்ஷை பூஜைகள் கேரள நம்பூதிரிகளாலும், மற்ற ஆறு கால பூஜைகள் அர்ச்சகர்களாலும் செய்யப்படும் திருக்கோவில் குக்கி ஸ்ரீ சுப்ரமணியா திருக்கோவில்.
கந்த புராணத்தில் “தீர்த்த சேத்ரா மகிமணிரூபணா”என்னும் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள திருக்கோவில் குக்கி ஸ்ரீ சுப்ரமணியா திருக்கோவில்.
பரசுராமனால் நிர்மாணிக்கப்பட்ட ஏழு புனிதத் திருக்கோவில்களில் ஒன்று குக்கி ஸ்ரீ சுப்ரமணியா திருக்கோவில்.
விஷ்ணு பகவானின் வாகனமாகிய கருட பகவானால் பாம்புகள் வேட்டையாடப் பட்ட போது வாசுகி பாம்பும், மற்ற பாம்புகளும் சிவபெருமானை வணங்கி அடைக்கலம் கோரியபோது சிவபெருமானின் கட்டளைப்படி அவர்கள் அடைக்கலம் அடைந்த இடம் குக்கி ஸ்ரீ சுப்ரமணியா திருக்கோவில்.
ஸ்ரீ விநாயகரும், ஸ்ரீ சுப்ரமணியரும் தாரகா சூரனையும், பத்மா சூரனையும் சம்ஹாரம் செய்த பருவத மலைக்கு அருகில் அமைந்துள்ளது குக்கி ஸ்ரீ சுப்ரமணியா திருக்கோவில்.
இராகு கேது பரிகாரத் தலம் குக்கி ஸ்ரீ சுப்ரமணியா திருக்கோவில்.
சர்ப்ப தோஷ பரிகாரம் நடத்தப்படும் இடம், குழந்தை பாக்கியத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்படும் இடம் குக்கி ஸ்ரீ சுப்ரமணியா திருக்கோவில்.
பரிகாரத்திற்கு முன் பதிவு செய்யும் வசதி உள்ளது. அதற்கான வலைதள முகவரி கீழே https://itms.kar.nic.in/hrcehome/index_temple.php?tid=21
ஓம் நமசிவாய ! ஓம் முருகா !!